RSS

Category Archives: கட்டுரை

குற்ற உணர்சி

Image result for guilty feeling images 

அன்பே! உன் மௌனம் என்னை சித்ரவதை செய்தது உண்மை. அன்பு சுமையாகிவிடக் கூடாது என்பது உண்மைதான் என்றாலும் அறுத்துக்கொள்ளவும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? மனிதனை உதாசீனப் படுத்துவதுதான் பஞ்சமா பாதகங்களை விடக் கொடுமையானது.

பதில் எழுத மறுப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் நான் பட்ட வேதனை… நேர் செய்து விட்டாய். யாராலும் பேசமுடியாயதை நாம் பேசி பகிர்ந்து விட்டுச் சட்டென்று விலகிப் போவது பாரம்.

உறவுகளை விட ஸ்நேகங்கள் உண்ணதமானவை. எந்த சுமையுமில்லாத நட்பு ஆரோக்கியமானவை. உன் கோபம் என்னவென்று தெரியாமல் காத்துக் கிடந்த சோர்வு என்னை அசிங்கப் படுத்தியது.

அறிவும் மென்மையும் கொண்ட ஒரு ஸ்நேகிதியை இழந்து விட்டேனோ என்று நொந்து போயிருந்தேன். பிராத்தனைக்குப் பலன் கிடைத்த மாதிரி என் வேதனைக் கடி்தத்திற்கு பயன் கிடைத்து மனமிரங்கியிருக்கிறாய். என் மனதில் அனாவசியமான ரணங்கள் ஏற்படுவதைத் தடுத்திருக்கிறாய்.

பூத்ததை எல்லாம் சூடிக்கொள்ள முடிகிறதா என்ன? அது போல வாழ்கையில் எதிர்பட்டவர்களை எல்லாம் நட்பு பாராட்ட முடிகிறதா? யாரையும் எதற்காகவும் குற்றம் சொல்ல முடியாது.  நாம் எல்லோரும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள். காலம் நம் தலைக்கு மேலே இருந்து சாட்டையைச் சொடுக்குகிறது. நாம் அதன் ஆணைக்கேற்ப ஆடிக் கொண்டிருக்கிறோம். நம்க்கு நேர்வதெல்லாம் நாமாகத் தீர்மாணிப்பதில்லை. எல்லமே நம்மீது திணிக்கப் படுகிறது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? கு்ற்றவாளிகள் குற்றவாளிகளுக்கே தீர்ப்பு எழுதக் கூடாதல்லவா?.

உலகம் இதுவரை செய்யாத எந்த தப்பையும் நீ செய்துவிடவில்லை. நம் முன்னோர்கள் செய்யாத தப்பையா நாம் செய்துவிட முடியும். வளர்ந்த பெண்ணின் அப்பாவாக இருந்து கொண்டே மனைவி இருக்கும்போதும் இன்னொருத்தர் மீது இப்படி ஒரு ஆசையைப் படறவிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது.

இதில் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் இது இரண்டுமே தேவையில்லாதது. முதலில் நீ ஒரு மனுஷி. ரத்தத்தாலும், சதையாலும், நரம்பாலும் உருவானவள். உனக்கென்று ஒரு ஆத்மா, உனக்கென்று ஒரு ருசி, உன்க்கென்று ஒரு வாழ்க்கை தேவை. எல்லா மனித உயிர்களுக்குமே இதுதான் நியதி. புழுங்கிக் கிடக்கும் நெஞ்சுக்குள் ஒரு புதுத்தென்றல் வேண்டுமில்லையா?

யாரும் அக்னிப் பிரவேசம் செய்யச்சொல்ல முடியாது. சட்டம் சம்பிரதாயம் ஒன்றும் பண்ண முடியாது. பக்கத்து வீட்டுக் காரிக்கெல்லாமா பயப்படுவது?. எந்த குற்ற உணர்ச்சியும் உனக்கு வேண்டாம். எது உனக்கு சந்தோஷத்தையும் சுதந்தரத்தையும் கொடுக்குமோ அதைச்செய். பெண்கள் மனந்திறந்து சொல்லாததனாலேயே  இந்த உணர்வே இல்லைன்னு சொல்ல முடியாதில்லையா? இந்தச் சமூகம் சொல்ல விடாம அடக்கி வச்சிருக்கு.

 

சளைக்காத காதல் சடுகுடு!

girl

அறுபது வயது பெண்மணி என்னிடம், செக்ஸில் இன்பம் என்று ஒன்று இருக்கிறதாமே; உச்சகட்டம் என்ற வார்த்தையை அடிக்கடி உறவுகள் சம்பந்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் கேட்டேன்; பெண்களுக்கு உச்சகட்டம் என்று ஒன்று இருக்கிறதா… என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் அவருக்கு பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். எனக்கு ஆச்சர்யம். நீங்கள் உச்சகட்டத்தை அடைந்ததே இல்லையா என்று கேட்டேன். அந்த இன்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுவேன் போலிருக்கிறதே என்று கதறி அழுதார். பின்னர் அவருக்கு பிள்ளைப்பேறு உண்டானது ‘வெளிவிந்து நகர்’வினால் என்று தெரிந்துகொண்டு, அந்த தம்பதிக்கு முழுமையான உறவு குறித்த பயிற்ச்சிகளுக்குப் பிறகு அந்தப் பெண்மணி இப்போது உச்சகட்டத்தை அடைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

செக்ஸ் வாழ்க்கையில் பேரின்பம் தரும் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்பது பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்பாகி இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இது அதிகம் வெளியில் தெரியாத செய்தி.

ஆண் துணையின் செக்ஸ் செயல்பாடுகளையும் பெண்கள் இப்போது வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் செக்ஸில் குறைபாடு கொண்ட ஆண்களை சென்னை நகரப்பெண்கள் உடனடியாக வெறுத்துவிடுவதில்லை. திருமண பந்தத்தை அவர்கள் இன்னும் மதிக்கிறார்கள். சரியான பேச்சுவார்த்தை மற்றும் மருத்துவச் சிகிச்சை மூலம் தனது துணையை குணப்படுத்திட முடியும் என்று அதிகமானோர் நம்புகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் திருப்தியான உறவைத் தராவிட்டால் வெளிப்படையாக சொல்லிவிட்டு வேறு துணையை தேடிக்கொள்ளவும் துணிகிறார்கள்.

செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. படுக்கை அறையில் நடந்ததை ஆண்களைவிட பெண்கள் தெளிவாக விளக்குகிறார்கள். இது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு பெண்களிடம் பஞ்சமில்லை. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் மத்தியில் சகஜமாகி வருகிறது. உறவு வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை தண்டிக்க காவல் நிலையம் ஏறுவதற்கும் பெண்கள் இப்போது தயங்குவது இல்லை.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு திருமண பந்தத்தைத் தாண்டி  தனது துணை வேறொருவரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கருதுகிறார்கள். பெரியார் மண்ணில் பெண்களுக்கு சுதந்திரம் என்று மேடைபோட்டுப் பேசுபவர்கள் கூட பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதை அனுமதிப்பதில்லை. இது மாதிரியான இரட்டை மனநிலை தமியகத்தில் பல விஷயங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. தனது மனைவி நமீதா மாதிரி இருக்கவேண்டும் என்று ஏங்கும் ஆண்கள் நமீதாவை திருமணம் செந்ந முன்வரமாட்டார்கள்.

குடும்ப அமைப்பு, தனது குழந்தைகளின் எதிர்காலம் போன்ற காரணிகளுக்கு அடுத்துதான் தனது செக்ஸ் வாழ்க்கைக்கு தமிழக பெண்கள் இடமளிக்கிறார்கள். தமிழகத்தில் பழமைவாத சமூக கட்டமைப்பிற்கு உட்பட்டு பெண்கள் செக்ஸை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. செக்ஸ் என்னும் இன்பக் கலையை ஆண்கள் இன்னும் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி கடைசிவரை செக்ஸை சளைக்காமல் கொண்டாடவேண்டும் என்று பெண்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை.

-டாக்டர். என் ஷாலினி.

 

குறிச்சொற்கள்: , , ,

கட்டுக்கதைகள்

உறவு

உறவு

1. எங்களுக்கு பெரிய மார்பகங்கள் பிடிக்கும்!

இல்லை. கண்களைப் பார்க்காமல் கழுத்துக்குக் கீழே பார்த்துப் பேசுவதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.

2. ஆண்களைக் கவர அழகாக ஆடை அணிகிறோம்!

எங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க அல்லது மற்ற பெண்களை விட நன்றாக தெரியவேஅழகாக ஆடை அணிகிறோம்.

3. எப்போதும் உணர்வுகளைப் பகிர விரும்புகிறோம்!

உடலுறவுக்குப் பிறகு டி.வி. பார்க்கவோ தூங்கவோ ஆசைப்படுவது ஆண்கள் மட்டுமல்ல. நீங்கள் கோமாளி மாதிரி நடந்துகொண்டதை சுட்டிக்காட்டியதால் உங்கள் மனம் புண்பட்டதை நாங்கள் அறிய விரும்பவில்லை.

4. நாங்கள் மோசமான மூடில் இருந்தால் மாதவிடாய் என்று அர்த்தம்!

ஒரு பெண்ணால் ஒரே சமயத்தில் பல வேலைகளைய் செய்யமுடிகிறது. ஒரு ஆண் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறான். இது எப்படி என்று புரியாதததுதான் ஒரு பெண் மோசமான மூடில் இருப்பதற்குக் காரணம்.

5. எங்கள் பாலுணர்வு ஆண்களைவிடக் குறைவு!

ஆண்களுக்கு 18 வயதில் பாலுணர்வு அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் முப்பதுகளின் நடுவில் ஆர்வம் இழந்துவிடுவது எல்லாப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவம்.

6. நாங்கள் ஒட்டிக்கொண்டு விடுவதேயில்லை!

நீங்கள் எங்களைச் சந்திக்கும்போது எங்களிடம் முழு கவனம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்பலாம். ஆனால் முழு நாளும் உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதா? தேவையே இல்லை!

7. உடலுறவு நெருக்கத்திற்காக்கத்தான். திருப்தி இரண்டாம் பட்சம்தான்!

நெருக்கம் நல்லதுதான். ஆனால் நாங்கள் உங்களுக்குத் தரவேண்டும் என்றால், நீங்களும் எங்களுக்குத் தரவேண்டும். ஆதே போல பெண்களின் உடலமைப்பைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

8. பொசசிவ் குணத்தை விரும்புகிறோம்!

அடிதடியில் இறங்கும் ஆளைவிட எதிராளியை சாமர்த்தியமாக பேச்சால் வீழ்த்துபவனைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

9. சிறு வயதிலிருந்தே நாங்கள் திருமணக் கனவு காண்கிறோம்!

எங்கள் கனவு மணமகனைப் பற்றியது! திருமணத்தைப் பற்றியதல்ல.

10. முப்பது வயதிற்குப் பிறகு எங்களுக்கு உடல் பற்றித்தான் கவலை!

இன்று பெண்கள் 42 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்களால் அந்த வயதில் தந்தையாக இருக்கமுடியுமா?

– திரைக்கதையாசிரியர் தேவிகா பகத்

 

குறிச்சொற்கள்: , , , ,