RSS

சாரு நிவேதிதா


சாருவின் வலைத்தளத்தில் என் பதிவுகள் குறித்து


Lady, Love Your Cunt!

என்னுடைய எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும், நான் தமிழில் பெண் எழுத்தாளர்கள் பலரையும் சிலாகிப்பவன் அல்ல என்று. காரணங்கள் பல உண்டு என்றாலும், அதில் முக்கியமானது அவர்களின் எழுத்தில் உள்ள பாசாங்கும், போலித்தனமும். உடல் அரசியல் என்பார்கள். பார்த்தால் அதில் உடலும் இருக்காது; அரசியலும் இருக்காது. பெரும்பாலும் இங்கே பெண்கள் தங்கள் எழுத்தை ஒரு Woman Entrepreneur போலவே பயன்படுத்துகின்றனர். இலக்கியத்துக்கு வேண்டிய கடுமையான உழைப்போ, சமகால இலக்கியம் அல்லது பழைய இலக்கியம் குறித்த வாசிப்பு அனுபவமோ சிறிதும் இல்லாத மொண்ணையான எழுத்தை முன்வைத்து அதற்குப் பெரிய பாராட்டையும் அள்ளிக் கொண்டு போகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நான் சமீபத்தில் வாசிக்க நேர்ந்த ஒரு பெண்ணின் கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்ட பெண் என் வாசகர் ஒருவரின் தோழி. நான் அடிக்கடி எனக்குப் பிடித்த அமெரிக்கப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிடும் பெயர் கேத்தி ஆக்கர். அவருடைய நாவலின் ஒரு பெயர்: புஸ்ஸி. தன்னுடைய அந்தரங்க உறுப்பு பற்றியும் அதன் உணர்வுகள் பற்றியும் பல நூறு பக்கங்களை எழுதியிருக்கிறார் கேத்தி. வில்லியம் பர்ரோஸ் தன் உடல் முழுவதையுமே பரிசோதனைக் கூடம் ஆக்கினார். அதே போல் நெஜ்மா என்ற புனைப்பெயரில் ஒரு அராபியப் பெண் Almond என்ற நாவலை எழுதினார். கொச்சைத் தமிழில் பருப்பு என்று குறிக்கப்படும் யோனிப் பகுதியிலிருந்து ஆரம்பித்து, ஒரு பெண் உடல் எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் அருமையான நாவல் அது.

ஜெர்மன் க்ரேர் என்ற ஆஸ்திரேலியப் பெண்ணியவாதி. பெண்ணின் உடல் அரசியலைப் பேசியவர்களுள் மிக முக்கியமானவர். “Lady, Love Your Cunt” என்பது இவரது புகழ் பெற்ற வாசகம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு Cunt என்ற பத்திரிகையை நடத்தினார்.

பெண்கள் தங்கள் உடலைக் கொண்டாட வேண்டும் என்பது இவருடைய கோட்பாடு. The Madwoman’s Underclothes இவருடைய முக்கியமான புத்தகங்களில் ஒன்று. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறப்பிரிகை சார்பாக பாண்டிச்சேரியில் நடந்த பெண்ணியம் தொடர்பான கருத்தரங்கில் ஜெர்மன் க்ரேரின் ’பைத்தியக்காரியின் உள்ளாடை’யிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காண்பித்தேன்.

மும்பையிலுள்ள ஒரு நாடகக் குழுவினால் இந்தியாவின் பல நகரங்களிலும் அரங்கேற்றப்பட்ட வஜைனா மோனலாக்ஸ் என்ற நாடகமும் இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஈவ் என்ஸ்லெர் எழுதிய இந்த நாடகம் சென்னையில் மட்டும் அரங்கேற முடியாமல் தடை செய்யப்பட்டது!

இக்கட்டுரையின் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட பெண்ணின் கடிதங்களைப் படித்த போது மேற்குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். கேத்தியின் எழுத்து இப்படித்தான் இருக்கும்.

தமிழில் முதல் முறையாக ஒரு பெண் தன்னுடைய உடலைப் பற்றிப் பேசுகிறார். படித்துப் பாருங்கள். தொடர்ந்து இதே வலைத்தளத்தில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். பின்னால் இக்கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டால் அது ஒரு நாவலாகக் கிடைக்கும்.

சாருவின்  நேர் கானல்  இங்கே!

நேர்காணல் – ஆனந்த விகடன் & சாரு நிவேதிதா

 

2 responses to “சாரு நிவேதிதா

 1. Soniya

  ஜூன் 25, 2009 at 11:33 முப

  Oru Pennin unachigalai inga kaati iuppathu arumai

   
 2. kesavamoorthy

  நவம்பர் 30, 2011 at 1:52 பிப

  i’m an teenage boy. i feel proud about my amma. without her i’m not here… i love every women. and thanks to god. i wish to be a girl in next birth.to feel and realise the PENMAI

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: