RSS

Monthly Archives: ஏப்ரல் 2014

முதல் வரி நீ!

 

tumblr_ljx7o9q6Ub1qahzf8o1_400

பட்டிணத்தாரை

படிக்கப்போனேன் !

வழிமறித்து

கலிங்கத்துப் பரணியில்

கடைத் திறப்பைக்

காட்டியவள் நீ!

வேதாந்தியாக

விவரம்

கேட்கப் போனேன்!

வேட்டியை இழுத்து

விறலிவிடு தூதுக்கு

விளக்கம் சொன்னவள் நீ!

தேவாரம் கேட்க

திண்ணைப் பக்கம்

போனேன்!

முந்தானையால்

முகத்தை மூடி

மூன்றாவது பாலை

நுங்கும் நுரையுமாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ!

இன்னும் நான்

எழுதாத புரட்சிக்

கவிதையே!

என் இதய இலக்கியத்தில்

முதல் வரியும் நீ

முதல் எழுத்தும் நீ!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 12, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , ,

ஆண்களே பதில் இருக்கிறதா உங்களிடம்?

பெண்
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?

சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?

சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?

கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?

அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?

கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?

கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?

ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?

ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?

ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?

குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?

முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?

முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?

குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?

மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?

நரைத்த கிழவியும் தனது தளர்ந்த மார்பு மறைக்கும் அக்கறை கண்டு ஆச்சர்யப்பட்டதுண்டா?

அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?

இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம். ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 10, 2014 in பெண்

 

குறிச்சொற்கள்: , ,

குடும்ப அமைப்பு தேவையா?

 எழுத்தாளர்_பொன்னீலன்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலாசிரியர் பொன்னீலனிடம் சில கேள்விகள்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவு வளர்ச்சி அடைந்து குடும்ப உறவாக மாறவேண்டும். அல்லாவிட்டால் இதற்கு ஒரு சமூக அர்த்தமில்லாமல் போய்விடும்.

இன்றைய சினிமாக்களிலும், நாவல்களிலிலும் இப்போது பெண்களை எப்படிக் காண்பிப்பதாக நினைக்கிறீர்கள்?

 சிறிது காலத்திற்கு முன்பு ‘விதி’ என்ற படத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காட்டினார்கள்.

சமீபத்தில் ‘மறுபடியும்’ என்ற படத்தில் தன்னை ஏமாற்றிய கணவனுக்கு மனைவி தந்த தண்டனையையும் காட்டினார்கள். இரண்டிலுமே கதாநாயகிகள் வாழாவெட்டியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இது உண்மையில் போலித்தனமானது.

இந்தப் படங்களின் இயக்குனர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற பழமைவாதக் கொள்கைகளால் முடிவுகளை மொட்டையாக விட்டுவிட்டனர். அவர்கள் ஏன் இன்னொரு ஆண் மகனை மணந்திருக்கக் கூடாது?

என்னுடைய புதிய தரிசனங்கள் என்ற நாவலில் பூரணி என்ற பாத்திரம் பாலியல் வன்முறையில் பல கைகள் மாறிய பெண். ஆனாலும் இறுதிவரையில் அவள் தனக்கென ஒரு ஆண் துணை வேண்டுமென்று நினைப்பதாகவே சித்தரித்திருக்கிறேன்.

எழுத்தாளர்கள் பெண்களை வாழாவெட்டியாக சித்தரிக்காமல் அவர்களின் பாலியல் தேவைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

subra

சமீப காலமாக ஆண்களிடமும் பெண்களிடமும் ஓரினச் சேர்க்கை முறை அதிகரித்து வருவதாக கூறப்படுவது பற்றி…

ஓரினச் சேர்க்கை முறை என்பது மிக நீண்ட காலமாக சமூகத்தில் இருக்கிறது. சிலர் மட்டுமே சில நெருக்கடிகளில் இதைத் தொடர்கின்றனர். இதைத் தவறான விஷயம் என்று சொல்ல முடியாது. இது அனுதாபமாக நோக்க வேண்டிய தீர்வே ஒழிய, ஒரு கம்பீரமான தீர்வு இல்லை.

இன்றைய சூழ்நிலையில் குடும்ப அமைப்பு தேவையா?

குடும்ப அமைப்பு என்பது மனித நாகரிகம் மிக நீண்ட காலமாக கண்டுபிடித்த அற்புதமான ஒரு வடிவம். அது கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது இறுகி, ஆதிக்க வடிவமாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறும் பட்சத்தில் அது உடைத்தெறியப்படவேண்டியது. குடும்பமும் ஜனநாயகப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இன்றைய நிலையில் சுதந்திரமான பாலியல் தேவையா?

கண்டிப்பாக தேவையில்லை. ஏனென்றால் செக்ஸ் என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு செல்வம். இதை வீண்டிக்கக் கூடாது. இதையும் ஒரு ஒழுங்குக்கு உட்படுத்தியே பயன்படுத்த வேண்டும்.

 

குறிச்சொற்கள்: , , ,