RSS

Monthly Archives: நவம்பர் 2009

காமக்கவிதைகள்-2


மீசை முத்தம் என்றால் பெண்ணே!

நான் உனக்குத் தருவது.

மீசை இல்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது.

தண்ணீர் முத்தம் என்றால் அன்பே

தடயமில்லாமல் இடுவது

தரையின் முத்தம் என்றால் கொஞ்சம்

தடயத்தோடு விடுவது.

கட்டில் மேலே பத்துக் கட்டளை

கட்டளைப்படியே செய்வாயா?

என்னை மெதுவாய் துடிக்கவிடு

எச்சில் மாற்றி உண்டுவிடு

உடையை மெல்ல உதறிவிடு

உன்னை எனக்கு உடுத்திவிடு

சிவந்த பாகம் வெளுக்கவிடு

கறுத்த பாகம் சிவக்கவிடு

எந்தன் உயிரை உறிஞ்சிவிடு

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

கட்டில் மேலே பத்துக்கட்டளை

கட்டுப்பட்டு நடப்பாயா?

நயனம் இரண்டும் மூடிவிடு

நான்கு புலன்கள் திறந்துவிடு

கூறைப் புடவை களைந்துவிடு

கூந்தல் சேலை உடுத்திவிடு

என்னைக் கொஞ்சம் ஆளவிடு

எதிர்ப்பது போல வளைந்து கொடு

கவிதை போல் சில உளறிவிடு

கட்டில் கடன்கள் திருப்பிக்கொடு

எந்த சுகங்களை நீ ரசித்தாயோ

அந்த சுகங்களைப் பேசிவிடு

அந்த சுகங்கள் தொடர்ந்திடவே

அரைமணி நேரத்தவனை கொடு.

–      பாசக்கிளிகள் படத்தில் கவிஞர். வைரமுத்து.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 19, 2009 in பாலியல்

 

குறிச்சொற்கள்:

எது நார்மல் செக்ஸ்?

செக்ஸ் விஷயத்தில் யாராலும் இதுதான் நார்மல் செக்ஸ், இது நார்மல் செக்ஸ் இல்லை என்று உறுதியாக அடித்துச் சொல்ல முடியாது. காரணம், நார்மல் செக்ஸ் என்ற ஒன்றைச் சொல்ல வந்தால், அதை ஆறு கோணத்திலும்  பார்க்க வேண்டும்.

  1. ஸ்டாடிஸ்க்கல் நார்மாலிட்டி; (Statiscal normality)

நூற்றுக்கு எத்தனை பேர், எந்தவகையில் அதிக அளவு செக்ஸ் இன்பம் அடைகிறார்கள் என்று கணக்கெடுத்து, அதனை நார்மல் செக்ஸ் என்று சொல்லலாம். ஆனால் இந்தக் கோணத்தில் பார்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக புள்ளி விவரப்படி 95 சதவிகிதத்தினர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோணத்தின்படி, எத்தனை பேர் சுய இன்பத்தை நார்மல் செக்ஸ் என்று ஒப்புக்கொள்வார்கள்?

2.ரிலிஜியஸ் அல்லது மாரல் நார்மாலிட்டி; (Religious/moral normality)

ஒரு விஷயத்தை விஞ்சான பூர்வமாக நிருபித்தாலும் சரி, அல்லது சமூகத்துக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு செயலில் ஈடுபட்டாலும் சரி… மதங்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக, மருத்துவ ரீதியில் சுய இன்பம் தவறானது அல்ல என்று சொல்லப்பட்டாலும், எந்த மதமும் இதை ஏற்றுக் கொள்வதே கிடையாது. ஆக, முதல் கோணப்படி சுய இன்பத்தை நார்மல் செக்ஸ் என்றால், இந்தக் கோணத்தின்படி அது தவறானதாக ஆகி விடுகிறது.

3. சைக்காலஜிகல்/சோஷியாலஜிகல் நார்மாலிட்டி; (Psychological/Sociological normality)

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒரு செயல்பாட்டினால் மற்ற மனிதருக்கோ, சமுதாயத்துக்கோ பாதிப்பு வரும் என்றால், அது நார்மல் கிடையாது. உதாரணமாக, மனைவியை துன்புறுத்தி இன்பம் அடையும் கணவனுக்கு, அதனை மனதால் ஏற்றுக் கொள்ளும் மனைவி அமைந்துவிட்டால், இதனால் மற்றவர்களுக்கு எந்தக்கெடுதலும் இல்லை. அவர்கள் விரும்பியே அதில் ஈடுபடுவதால் வெளியிலும் சொல்லப் போவதில்லை. ‘சேடிஸம்’ என்பது பொதுப்பார்வையில் அப்நார்மலாக இருந்தாலும், அந்தத் தம்பதிகளின் பார்வையில் நார்மல் செக்ஸ் ஆகிவிடும்.

பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கிற முறைப்படியான திருமணம்தான் நார்மல் என்று சமுதாயம் நினைக்கிறது. பெற்றோர்கள் பார்வையில், காதல் திருமணங்கள் அப்நார்மலாகக் கருதப்படுகிறது. அரசாங்கம் காதல் திருமணங்களை அங்கீகரித்தாலும் பெற்றோர்கள் அங்கீகரிப்பதில்லை!

4. லீகல் நார்மாலிட்டி; (Legal normality)

கணவன் மனைவி இருவரும் விருப்பப்பட்டு வாய்மூலம் புணர்ச்சி (Oral sex) வைத்துக்கொள்வதை மருத்துவ உலகம் தவறாகக் கூறுவதில்லை. சமுதாயத்திலும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சட்டரீதியில் இது குற்றமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் குழந்தை பிறப்புக்கு வாய்ப்பு இல்லாத எந்தவித செக்ஸ் நடவடிக்கையும் தவறானதே என்று சட்டம் கருதுவதால்தான்! தம்பதிகள் பார்வையில் வாய்மூலம் புணர்ச்சி செய்வது நார்மல் செக்ஸ். ஆனால் அதனை சட்டமோ அப்நார்மல் செக்ஸாகக் கருதுகின்றது. ஹோமோ செக்ஸில் இரண்டு பேர் விருப்பப்பட்டு ஈடுபட்டால், அதனை நார்மல் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் சட்டரீதியில் நம் நாட்டில் அது குற்றமாகக் கருதப்படுகிறது.

5. ஃபைலோ ஜெனிடிக் நார்மாலிட்டி; (Phylogenetic normality)

பாலூட்டிகளில் மனிதர்களைத் தவிர மற்ற பாலூட்டிகள் எல்லாம் பெற்றோர், பிள்ளைகள் என்று பார்க்காமல் உடலுறவு கொள்ளும். விலங்குகள் மத்தியில் நார்மலாக இருப்பது, மனிதனின் பார்வையில் நார்மல் அற்றதாகப் போய்விடுகிறது.

6. பயோ மெடிகல் நார்மாலிட்டி; (Bio-medical normality)

மருத்துவ ரீதியில் மனித உடம்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவதைப் போல, செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்க்கும் கோணம் இது. மனிதர்களின் உயரங்களும் அவர்களின் பிறப்புறுப்புகளின் அளவுகளும் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இந்த அளவுகளை வைத்து, இது மாதிரியான செக்ஸ் நடவடிக்கைதான் நார்மல் செக்ஸ் என்று எப்படி சொல்ல முடியும்?

50 ஆண்டுகளுக்கு முன்பு தவறு என்று சொல்லப்பட்ட ஹோமோசெக்ஸ், இன்று வெளிநாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஹோமோசெக்ஸ் திருமணங்கள் கூட நடைபெறுகின்றன! அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு நார்மல் என்று ஏற்கப்படாதது, இன்று நார்மல்! ஆனால் இந்தியாவில் ஹோமோசெக்ஸ் என்பது நார்மல் செக்ஸ் கிடையாது. சட்டத்துக்கும் பறம்பானது.

தமிழ்நாட்டில் பஸ், ரயில், தியேட்டர்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனி இருக்கைகள் உண்டு. ஆனால் மும்பையில் தனித்தனி இருக்கைகள் கிடையாது. இதில் மும்பையில் உள்ளது நார்மலா? தமிழ்நாட்டில் உள்ளது நார்மலா? சொல்லுங்கள்!

கோயிலுக்கு குடிக்காமல் போக வேண்டும் என்பது கண்டிப்பான வரைமுறை. ஆனால் நம்மூரில் பல கிராம தெய்வங்களுக்கு சாராயம் படைக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது! உஜ்ஜையினி நகரத்தில் மகாகாலன் என்று ஒரு கோயில் உண்டு. அந்த சாமிக்கு படைக்கப்படும் பொருள் என்ன தெரியுமா? சாராயம்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாக தரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள் உஜ்ஜையினியில் உள்ளது நார்மலா? அல்லது பெரும்பாலான கோயில்களில் உள்ளது நார்மலா?

ஆக அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது, ராக்கட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று சுலபமாக பதில் தந்துவிடலாம். ஆனால் இதுதான் நார்மல் செக்ஸ் என்று சுலபமாக வரையறுத்துவிட முடியாது. எது நார்மல் செக்ஸ், எது நார்மல் செக்ஸ் இல்லை தலையைப் பிய்த்துக்கொள்ளாமல் நாம் ஈடுபடக்கூடிய செயல்பாட்டினால் நமக்கோ, நமது பார்டனருக்கோ, எந்தவிதமான பாதிப்பும் கெடுதலும் ஏற்படாமலிருந்தால், அதுதான் நார்மல். இதுதான் விஞ்சான ரீதியான கருத்தும் கூட!

‘திருமணமான ஜோடிகளுக்கெலாம் குழந்தை பிறக்கவேண்டும். அதுதான் நார்மல்’ என்று சமுதாயத்தில் பரவலாக நினைக்கப்புகிறது. ஆனால் குழந்தை பிறக்காமல் போனால் அப்நார்மல் என்று சொல்லிவிடமுடியுமா?

– டாகடர் நாராயணரெட்டி.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 19, 2009 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: ,

காதல் பள்ளிக்கூடங்கள்


காதலை சொல்லித்தர பல ஊடெங்கள் இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. அதனால் கோவில்களில் காதலை கற்றுத்தரும் விதமாக சிலைகளை அமைத்தார்கள். இந்த வகையில், முழுக்க, முழுக்க ஆண்-பெண் உடலுறவு தொடர்பான விஷயங்களை மட்டுமே கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இவற்றத்தான் காதல் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கஜூராஹோ. அந்த சின்ன ஊரின் கோவில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களை சிற்றின்ப கண்கொண்டு பார்ப்பதா அல்லது பேரின்ப உணர்வுடன் பார்ப்பதா என்று விளங்காமல் ஆன்மிகவாதிகளே திகைக்கிறார்கள். அந்த சிற்பங்கள் ஆண், பெண்ணின் பிறந்தமேனி, அங்க அழகுகளை அற்புதமாக சித்தரிக்கின்றன. போதாக்குறைக்கு ஆண்-பெண் உடலுறவுக் காட்சிகளை விதவிதமாக வகைவகையாக விளக்குகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கஜூராஹோவில் சண்டெல்லா என்ற அரச பரம்பரையினர் ஆட்சி நடத்திவந்தனர். அவர்கள் சிற்றின்ப் பிரியர்கள். பெண்ணிடம் இன்பம் காண்பதுதான் பிறவிஎடுத்ததின் பறவிப் பெரும் பயன் என்று கருதியவர்கள். அவர்கள் காலத்தில் கோவில் பணிக்கென ஆயிரக்கணக்கில் தாசிகள் இருந்தனர். ஆலய தாசிகள் கன்றாலே அவர்கள் அரண்மனைக்கும் தாசிகளாகத்தானே இருக்க முடியும். அவர்களுடன் கூடி பல விதங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப விளையாட்டுக்களை நிரந்தரப்படுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சண்டெல்லா வம்ச அரசர்கள் இத்தகைய சிலைகளை அமைத்தனர். இந்த சிற்பங்களைக் காண உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

ஒரிசா மாநிலத்தில் கொனரக் என்ற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் அமைந்திருக்கும் இந்த இடத்தை காதல் பள்ளி என்று குறிப்பிடுகிறார்கள். அந்த சிற்பங்கள் அனைத்துமே ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் காட்சியை விதவிதமாக சித்தரிக்கின்றன.

கொனரக் சிலைகள் ஆபாசம் என்ற நினைவு எழாத வகையில் அற்புதமான கலை வளர்ச்சி மிளிர இந்த சிற்பங்களை அமைத்துள்ளனர். அந்தக்காலத்தில் காதலை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக இந்த இரண்டு இடங்களும் அமைந்திருந்தன.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 17, 2009 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , ,