RSS

Monthly Archives: மே 2011

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?


நான் எது கேட்டாலும் வெட்கத்தையே

தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்

என்ன தருவாய்?

அழகான பொருட்களெல்லாம் உன்னை

நினைவுபடுத்துகின்றன. உன்னை

நினைவுபடுத்துகிற எல்லாமே

அழகாகத்தான் இருக்கின்றன.

நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்

தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்

பயணத்தில்.

முதல்முறையாக ஒருமுறை உன் மடியில்

படுத்து நான் அழுதுவிட்ட போது…ஏன்

என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்

தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து

அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை,

அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.

நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது

நீதானா? தொடப்போனால்

சினுங்குவதில்லையே… நீயா? முத்தம்

கேட்டால் வெட்கம் தருவதில்லையே…

நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில்

சாய்வதில்லையே …நீயா? எவ்வளவு

அருகிலிருந்தும் அந்த வாசனையில்லையே…

நீயா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்.

புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது.

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த

பூவை

எந்த சலனமுமுன்றி

எடுத்தெறிந்துவிட்டு

வேறு பூவை சூட்டிக்கொள்ள

எப்படி முடிகிறது

இந்தப் பெண்களால்?

–          தபூ சங்கர்

 

குறிச்சொற்கள்: , ,

தீண்டல்


இரண்டு பெஞ்சுகளின் இடைவெளியில் எதிரெதிர்

வரும்போது என்னை உரசலாம் கொஞ்சம்

நெருக்கும் பஸ்ஸில் கூட்டத்தில் அலைக்கழித்து

ததும்பும் போது என் மீது படலாம்

காற்று படுத்திருக்கும் காரிடாரில் நடக்கையில்

வீசி நடக்கும் கையை என் மேலே வீசலாம்

இருண்ட நாலகத்தில் புத்தகங்களை

மேலடுக்கில் தேடுகையில் என் தோளை இடிக்கலாம்

எக்ளேர்ஸோ பாப்பின்ஸோ என்கெனத் தருகையில்

உரிமையெடுத்து உள்ளங்கையில் அழுத்தலாம்

சட்டையில் ஏதோ பூச்சி எனக் கத்தும்

பயந்தாங்க்கொள்ளியே, நீயே தட்டலாம்

வெள்ளை பேசினில் டெஸ்ட் ட்யூப் கழுவும்போது

உன் கைகள் என்னோடு கலக்கலாம்

கோயில் பிரசாதத்தைத் தாமரை உள்ளங்கையில்

ஏந்தி நீட்டி சிரிக்காமல் என் நெற்றியில் இடலாம்

கேலி பேசி உன்னை நான் அழவைக்கும்போது

செல்லமாய்க் கண்டித்து என் நெஞ்சில் குத்தலாம்

தோழிகளிடம் முகப்படுத்தி வைக்கையில்

மணிக்கட்டைத் தொட்டு உரிமையுடன் சொல்லலாம்

இத்தனை வாய்ப்புகள் இருந்தும்

இதையெல்லாம் விடுத்து

எங்கோ இருக்கும் என் இதயத்தை

அழுத்தமாய்த் தொட்டது ஏனடி தோழி…?

–  கிருஷ்ணன்.

 
 

குறிச்சொற்கள்: ,

அனைத்தையும்…

இன்று எனக்கு நீ யார்?

அதனால்

விளிக்காமலேயே இக்கடிதம்.

கேட்டிருந்தபடியே

அனைத்தையும் அனுப்பியுள்ளேன்.

அச்சம் வேண்டாம்.

விழிகள் தடவித் தடவிக் கிழிந்துபோன

பழைய கடிதங்கள்

காகிதத்தில் தந்த சில கவிதைகள்

மலர்களுக்குள் நீ இருக்கும் புகைப்படம்

பிறந்த நாளில் அளித்த பரிசு

காதலோடு வாழ்த்துச் சொன்ன

புத்தாண்டு அட்டைகள்…

உன் பெயர் பின்னிய

நான் முகம் பார்த்த கைக்குட்டை

ஏதோ ஒரு வேடிக்கையில் உடைந்து

என் கையில் தைத்த கண்ணாடி

வளையல் துண்டு

நேற்று கடிதத்துடன் வந்த

உன் திருமண அழைப்பு…

வீணையின் ஒவ்வொரு நரம்பும்

இறுதி முறை

அதிர்ந்து அறுபட்டுச்சுருள…

அனுப்பியுள்ளேன்.

சரிபார்த்துக் கொள்ளவும்.

ஆயினும்,

எப்படி அனுப்புவேன்

அஞ்சலில் ரத்தத்தை?

– பாரதி புத்திரன்.

 

குறிச்சொற்கள்: