RSS

Monthly Archives: ஓகஸ்ட் 2010

கடிதங்களைத் தொடரலாமா?

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வலைப்பூவை பார்வையிட்டுச் செல்கிறார்கள். ஆனால் நானோ அவர்கள் எல்லோரையும் ஒருவகையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் எதிர்ப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆபாசமான பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிடலாமா…… என்பதை உங்கள் பின்னூட்டங்கள் வழியாக தெரியப்படுத்துங்கள்.

இணைய இணைப்பும், தமிழில் அச்சேற்றவும் கடினமாக இருப்பதால் வாரத்திற்கு ஒரு இடுகை பதிப்பிக்கிறேன்.

அன்புடன்,
உயிர்த்தோழி.

 
13 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஓகஸ்ட் 22, 2010 in அறிவிப்பு

 

குறிச்சொற்கள்:

பாம்புகள்

பௌர்ணமி சந்திரன்

அகலக்கண் விரித்து

பார்த்துக்கொண்டிருந்தான்

நீலக்கடலை

ஆரவாரமிசைத்து

சந்தோஷத்தை

வெளிப்படுத்திக் கொண்டிருந்தது

வெட்கமின்றி

பிண்ணிப் பிணைந்து கிடந்த

ஆண்-பெண்

பாம்பிரண்டும்

இறக்கைகள் முளைத்ததாய்

பறக்கத் துடித்துக் கொண்டிருந்தன

மொட்டை மாடி

நள்ளிரவில்

என்னைத் தேடிக்கொண்டிருந்தேன்

நான்.

–          வித்யா ஷங்கர்

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 13, 2010 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , ,

மகுடேசுவரன் கவிதை

சீற்றம்

நெகிழ்வான அந்திகளில்
வெட்கமாய் எதிர்த்து
எப்போதாவது அனுமதிப்பாய்
முத்தங்களை.
கட்டுப்பாடிழந்து
கண்செருகி மயங்குவாய்.

தொடுதூர இடைவெளி
நமக்கிடையே.
கனவுத்திரைகட்டி எழுப்பப்பட்ட
மெல்லிய மதில் குறுக்கே.

அன்று
புயல் கரைகடந்த நாள்.
அடைமழைக்கு
நாமொதுங்கிய குடில்
ஏகாந்தப்புதரின் ஒற்றைப்பூ.

நனைந்த உடுப்புகளை
அள்ளிப்பிழிந்தாய்.
தானாய்க் கணன்றன
இளமையின் கொழுந்துகள்.

பருவக்குருதியின் சீற்றத்தின்முன்
நம் அடக்கம் எத்தனை நேரம்….!

நம்முள் உறங்கிய மிருகங்கள்
எதிரே பார்த்த இரையைக்
கவ்வின.

உன் மௌனச் சம்மதமும்
முகத்தில் பொதிந்திருந்த
என்றுமிலா மோகச்சோபையும்
எனை ஆற்றுப்படுத்தின.

நாம் உணர்வுற்றெழுகையில்
புதிய அமைதி.

தவறு உறைத்ததும்
நீயும் சாதாரணப் பெண்ணாகி
செல்லமாய்ச் சில விசும்பல்களோடு
உன் உடந்தையைச்
சமாதானப்படுத்திவிட்டாய்.

என் மிருகம்
எங்குபோய் அழுது
சமாதானமாகும்….?

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 12, 2010 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: , , ,