RSS

Monthly Archives: ஜனவரி 2010

பின் நவீனத்துவ எழுத்து வெறும் போர்னோவா? – சாருநிவேதிதா

கலைத்துப்போடுதல், ஆபாசம், புரியாமை – சர்ச்சை – தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள் என்ற தலைப்பில் குமுதம்-‘தீராநதி’ அக்டோபர் 2003-ல் சாருநிவேதிதாவின் பேட்டி!

பின்நவீனத்துவ எழுத்து ஒரு ஜந்து மாதிரி தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ நாவல் என்று தங்களுடைய எழுத்துக்களுக்குத் தாங்களே சான்றிதழ் அளித்துக்கொண்டு நாவலை வெளியிடுகிறார்கள். படித்துப் பார்த்தால் எழுத்து என்பதற்கு வேண்டிய அடிப்படையான அம்சத்தையே காணோம். அது என்ன வாசிப்புத்தன்மை? பலருடைய எழுத்து ஏதோ சங்கேத பாஷையாகவும், குழுஉக்குறிகளாகவும் உள்ளன. அந்தக்காலத்து சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச்சுவடிகளையே இவை ஞாபகப்படுத்துகின்றன. பெரும்பாலான பின்நவீனத்துவ நாவல்களின் தோல்விக்கு இதுவே காரணம். இதற்கு உதாரணங்களாக பிரேம் ரமேஷின் நாவல்கள் மற்றும் கோணங்கியின் பாழி போன்றவற்றைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்துக்கு நேர் எதிரான ஒரு தன்மை இங்கே பின் நவீனத்துவத்துவமாக அடையாளம் காணப்பட்டது ஆச்சர்யம்தான். ஆனாலும் முன்னுதாரணங்கள் உள்ளன. உ-ம் புரட்சி.

பின்நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மை- ரொலாந் பார்த் குறிப்பிடும் PLEASURE OF THE NEXT. இங்குள்ள பிரதிகளைப் படிக்கும்போது தகரத்தை சிமென்ட் தரையில் தேய்ப்பதைப் போன்ற நாராச உணர்வே ஏற்படுகிறது. இதற்கு மாறாக உலக இலக்கியத்தில் பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களாக அறியப்படும் உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, ஜெர்ஸி கோஸின்ஸ்கி போன்றவர்களின் எழுத்து ஒரே வாசிப்பில் படித்து முடிக்கக்கூடிய அளவுக்கு சுவாரசியமானவை. எக்கோவின் நாவல்கள் வணிக எழுத்தாளர்களின் விற்பனையையும் மிஞ்சியவை. இதே ரீதியில் ‘நாங்களும் சுவாரசியமாய் எழுதுகிறோம்’ என்று புறப்பட்டசில பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் நாவல்களோ கலைத்தன்மை ஏதுமற்று, தட்டையான மொழியில் உள்ளதால் இவற்றின் ‘எளிமை’ கலையின் பாற்பட்டதாக அல்லாமல், வணிக எழுத்தின் தரத்திலேயே நின்று விடுகிறது. எனவே வணிக எழுத்தாகவும் அல்லாமல், இலக்கியமாகவும் ஆக முடியாமல் காணாமல் போகும் துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரின் உற்பத்தி இதற்கு உதாரணம். இந்த இடத்தில் நாம் வேறு ஒருவரை நினைவு கொள்ள வேண்டும். அவர் வணிக எழுத்தின் அத்தனை கூறுகளையும் எடுத்து அவற்றையே கச்சாப் பொருளாகக் கொண்டு ஒரு புதிய பின்நவீனத்துவத்துவ எழுத்துப்பாணியை உருவாக்கிய டொனால்ட் பார்த்தெல்மே.

பின்நவீனத்துவத்துவத்துக்கு முந்தைய எழுத்தாளர்களான கு.பா.ரா., அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் எழுத்தில் நாம் கண்டுணர்ந்த கலைத்தன்மையும், சுவாரசியமும் பெரும்பான்மையான பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களிடம் இல்லை. காரணம்? தெரியவில்லை. கோட்பாடுகள் தெரிந்த அளவுக்கு இலக்கியம் தெரியவில்லையோ? பின்நவீனத்துவத்துவ எழுத்தின் இந்தக்குறைபாடுகள் இலக்கியத் தயிர்வடைகளுக்கும், பத்தாம்பசலிகளுக்கும் நல்வாய்ப்பாகப் போய்விட்டது. ‘இதுவரை அரைத்துவந்த பழைய மாவையே தொடர்ந்து அரைப்போம்’ என்ற வாதம் வலுத்துப் போனதற்கும், நம்முடைய மண், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய அனுபவம் என்கிற ‘கல்சுரல் சாவனிசம்’ மீட்டுறுவாக்கம் பெற்றதற்கும் இதுவே காரணம்.

இத்தகைய நபர்கள் பின்நவீனத்துவத்துவ எழுத்தின் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு – இது ஆபாசமான எழுத்து. நம்முடைய இலக்கியத்தில் சிருங்கார ரசம் இல்லையா என்று கேட்டால், பின்நவீனத்துவத்துவ எழுத்தில் சிருங்கார ரசம் இல்லை; இது வெறும் போர்னோ என்கிறார்கள். போர்னோகிராஃபி இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. மர்க்கி தெ சாத்-இன் எழுத்து போர்னோதான். ஆனால் அது இலக்கியமாகக் கருதப்படுகிறது. அத்தகைய எழுத்தை இங்கே எழுதுவது பற்றி யோசிப்பது கூட முடியாத காரியம்! ழார் பத்தேல் எழுதிய ‘விழியின் கதை’ நாவலைப்பற்றி சூசன் சொண்டாக் ‘CHAMBER MUSIC OF PORNOGRAPHIC LITERATURE’ என்கிறார்.

போர்னோகிராஃபி இலக்கியம் என்ற ஒருவகை உருவாகி இத்தனை காலம் ஆன பிறகும், ஆபாசம், போர்னோ என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒருவரின் அறியாமையையே குறிக்கும். அது அவர்களின் பிரச்சனையே தவிர பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் பிரச்சனை அல்ல.

அடுத்து ஜெயமோகனின் நாவல்களை பின்நவீனத்துவத்துவ எழுத்து என்று சொல்லும் கோமாளித்தனம்! பின்நவீனத்துவத்துவத்தின் அடிப்படையே மையத்தைத் தகர்ப்பது. இதை ஆண்-பெண் பாலியல் தன்மையை வைத்து விளக்கிச்சொல்லலாம். ஆண்களின் பாலியல் மையத்தைக் கட்டமைப்பது. பெண்களின் பாலியல், எல்லையற்றது. தொடக்கமோ முடிவோ அற்றது. ஜெயமோகனின் எழுத்து முதல் வகையைச் சேர்ந்தது. மிக மூர்க்கமான அதிகாரக்கட்டமைப்பைக் கொண்ட அவரது எழுத்து பின் நவீனத்துவத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அவரை எப்படி இதில் சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை!

 
7 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஜனவரி 27, 2010 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , , ,

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி!

கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி! கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான செக்ஸ் வாழ்க்கை அவர்களுக்கு அதிக மன மகிழ்ச்சியை கொடுப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்து ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி, இதய ஆரோக்கியம், உடல் நோயால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஆற்றல், புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் சக்தி போன்றவை கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை மூலம் கிடைக்கிறது.

தலைவலி, முதுகுவலி, மனஅழுத்தம் போன்றவைகளைக் கட்டுப்படுத்துவதிலும் செக்ஸின் பங்களிப்பு இருக்கிறது. மனிதர்களிடம் கோபம், அதிக பயம், குற்ற உணர்வு, சோகம் போன்ற எதிர்மறையான உணர்வுகள் தோன்றும்போது அவர்களுடைய உடலில் அட்ரனாலின் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது மனித உடலை மிக மோசமாக பாதிக்கும். குறிப்பாக இது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை அதிகமாக தாக்கும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக செக்ஸ் உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் அள்ளி வழங்குகிறது. இது மன நெருக்கடி ஏற்படாமல் மனதைக் காப்பாற்றி அட்ரனாலின் உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. அப்போது உடலில் இயற்கையாகவே இருக்கும் வலி நிவாரணியான என்டோர்பின் அதிகமாக உற்பத்தியாகி உடலுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கிறது.

-டாக்டர். ஆஷாதினேஷ்.

 

குறிச்சொற்கள்: , , ,

‘கமலாதாஸ்’ சில நினைவுகள்

கவிஞர் குட்டி ரேவதியின் கமலாதாஸைபப் பற்றிய டாக்குமென்ட்ரியில் பாலியல் பற்றியும், ஆண்கள் பற்றியும், பெண்ணியவாதிகள் பற்றியும் எந்தவிதமான மனத்தடையுமின்றி நகைச்சுவை இழையோட, கமலாதாஸ் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் சில…

  • மாடர்ன் ஃபெமினிஸ்ட், ஆண்களை ஏன் வெறுக்கறாங்கன்னு எனக்குப் புரியலை. மத்த ஃபெமினிஸ்ட் எப்படியோ, நான் ஆண்களுக்கு எதிரானவ கிடையாது. ஆண்களே அல்லாம என்ன வாழ்க்கையை நீங்க வாழ்ந்துடப் போறீங்க…? நான் ஆண்களை விரும்பறேன். என் மூணு பசங்களும் ஆண்கள்தான். என் பிள்ளைகள், கணவர்கள், காதலர்கள் எல்லோருடைய துணையையும் நான் சந்தோஷமாக அனுபவிச்சிருக்கேன். அவர்களை என்னால மறுதலிக்கவே முடியாது. THEY ARE WONDERFUL.

  • நம்மைச் சுற்றி ஆண்கள் இருக்கணும். சோகமான நேரத்தில கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்ல, தோளோடு அணைச்சுக்க ஒரு ஆண் தேவை. அவ்வளவு ஏன்? மாடிப்படிகள் இருக்கு. உங்களால ஏறமுடியலைன்னா, உங்களோட ஆண் அழகா தூக்கிட்டுப் போவான்! உங்களால தூக்க முடியுமா?
  • பெண்கள், தங்களோட செக்ஸ் உணர்ச்சிகளை வெளிப்படுதுறதுல என்ன தப்பிருக்கு? அவங்க உணர்சிகளே இல்லாத சவம் மாதிரி இருக்கணும்னு ஏன் ஆசைப்படறீங்க? ஒரு நல்ல பொண்ணுன்னா, காலம் முழுக்க அவ அழுதுட்டே இருக்கணும்; செக்ஸ் உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா இருக்கணும்னு சீரியல்ல காண்பிக்கிறாங்க. அப்படிப்பட்ட பொண்ணால கணவனுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்? இந்த மாதிரியெல்லாம் சொல்றதன் மூலமா பெண்களை, விபச்சாரத்துக்குத்தான் நாம தள்ளிட்டிருக்கோம்.

  • அடிப்படையிலே ஆணுக்கும் பெண்ணுக்கும், வித்தியாசமிருக்கு. ஆண் எதனோடு வேண்டுமானாலும் செக்ஸ் வச்சுக்க முடியும். ஆனா பெண்ணால முடியாது. அவளுக்கு தேவைப்படறதெல்லாம் உணர்ச்சிபூர்வமான, ஆழமான காதல்தான். எந்த ஆண்கிட்ட ஆழமான காதல் உருவாகுதோ, அவன்கிட்டதான் ஒரு பெண்ணால தனது செக்ஸ் உணர்சிகளை வெளிப்படுத்த முடியும். அந்த உணர்ச்சிபூர்வமான காதல் ஏற்படாத வரைக்கும், தன்னை லேசா தொடக்கூட பெண் அனுமதிக்கிறதில்லை.
  • செக்ஸூங்கிறதே ஒரு அற்புதமான சக்தி… அது ஒரு தெய்வீக விளையாட்டு. அதுதான் பெண்கள்கிட்ட இருக்கிற மிகச்சிறந்த ஆயுதம். தனது ஆணுக்கான (வேறு யாருக்கோ இல்லை) பெண்ணோட காமம் இருக்கு பாருங்க… அது அற்புதமான விஷயம். அதை நீங்க மறுத்தீங்க்கன்னா, உங்க அழகை நீங்க இழந்துடுவீங்க. ஏன்னா ஒரு பெண்ணோட அழகு, அவளின் ஹார்மோன்களின் பேலன்ஸைப் பொறுத்துதான் அமையும். செக்ஸ் உணர்வை வெளிப்படுத்தாத பெண்ணைப் பார்த்தா, விளக்கு ஏற்றப்படாத வீடு மாதிரிதான் எனக்குத் தோணுது. வெளிச்சம் இல்லாத வீட்டால் என்ன பிரயோஜனம்?
  • என்னுடைய 85வது வயசில கூட, யாராவது ஒரு ஆண் வந்து, நான் உன்னை காலம் முழுக்க பத்திரமா பாத்துக்கறேன், அன்பா இருக்கேன், உன்னை அக்கறையா கவனிச்சுக்கறேன், நீ எழுத வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னா, நான் அவனோட சந்தோஷமா போயிடுவேன். உணர்வு ரீதியான பாதுகாப்பு, உடல் ரீதியான பாதுகாப்பு- ஆண் கிட்டயிருந்து ஒரு பெண்ணுக்கு இதுதானே தேவை…!

நன்றி; குமுதம்

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 16, 2010 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , , ,

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து என்ன?

ரொம்ப தப்பான கருத்து! மனித இனம் உருவானவுடன், மற்ற மிருகங்களுக்கு இருப்பது போல ஒரு அடிப்படையான மூளையும் உருவானது. இப்போதும் நமக்கு அது உண்டு! அதற்கு லிம்பிக் (LIMBIC) சிஸ்டம் என்று பெயர். அதன் மையத்தில் உள்ள ‘அமிக்டலா (AMYGDALA) பகுதியில்தான் மகிழ்ச்சி, கோபம், பயம் மற்றும் இனவிருத்திக்கு மிக முக்கியமான காமம் போன்ற உணர்சிகள் உருவாகின்றன. அதற்குப் பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு மூளை பரிணாம வளர்ச்சி அடைந்தது.

அதன் மேற்பகுதியில் புதிதாக ‘நியோ கார்ட்டெக்ஸ் (NEO CORTEX) சிஸ்டம் சேர்ந்து கொண்டது. நினைவு கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், திட்டம் போடுதல் மற்றும் அன்பு, ஆதரவு, காதல்… எல்லாம் தோன்றியது இந்தப்புதிய பகுதியில்தான். பாம்பு, சிலந்திக்கெல்லாம்’நியோ கார்ட்டெக்ஸ்’ பகுதி கிடையாது. ஆகவேதான் சில பெண் சிலந்திகள் தன்னைப் புணர்ந்தவுடன் ஆணை விழுங்கிவிடுகிறது.

அம்மா, அப்பா பாம்புகள் தன் குட்டிகளை ‘ஸ்வாஹா’ பண்ணிவிடுகின்றன. மனிதனுக்கு ஸ்பெஷலாக நியோ கார்ட்டெக்ஸ் பகுதி இருப்பதால்தான் அவன் தன் காதலியை ஆதரவாக அணைத்துக் கொண்டு, அன்போடு அவள் காதுமடல்களை மூக்கால் வருடுகிறான். திருமணமான பிறகும் அவளை பத்திரமாக பாதுகாக்கிறான். புடவைக்கடையில் ஒரு யோகியைப்போலக் காத்திருக்கிறான். குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுகிறான்.

பூச்சிகளிடையே காதல் உண்டா?

காதல் உண்டா என்று தெரியாது! ஆனால் என்று ‘குழந்தை’ பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று அசாத்திய ஆர்வம் உண்டு. சிலவகை (ஆண்) சிலந்திப்பூச்சிகளும் PRAYING MANTIS எனப்படும் வெட்டுக்கிளிப் பூச்சிகளும் உடலுறவுக்காக உயிர்த்தியாகமே செய்கின்றன. ஆணைவிட பெண் சிலந்தியின் சைஸ் ரொம்ப பெரிது.

பெண்ணின் வயிற்றுப் பகுதியில் ஆண் நைசாக நுழைந்து உடலுறவு கொண்டு… முடிந்தவுடன் கணவனை மனைவி சாப்பிட்டுவிடுகிறது. இதேபோல பெண் வெட்டுக்கிளியும் உடலுறவு முடிந்த கையோடு, சற்றே கிறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆணைக் கவ்விப் பிடித்து இழுத்து அதன் தலையைப் பிய்த்து ‘ஸ்வாஹா’!

உடலுறவுக்குப் பிறகு மனிதர்கள் ரிலாக்ஸ்டாக பிரிட்டானியா பிஸ்கட் சுவைப்பது வேறு விஷயம். இப்படிப் பூச்சிகளில் கணவனையே விழுங்கும் விபரீத விருந்து ஏன்? ஆண் வெட்டுக்கிளியின் தலை பிய்த்தெடுக்கப்பட்ட பிறகு மூளையிலிருந்து ’ரிலாக்ஸ்’ என்ற ஆணை வராததால் நரம்புகள் இறுகியவாறே இருக்க, வெகு நேரம் புணர்ச்சியில் இருக்க முடிகிறதாம். தவிர ‘உணவு’ சாப்பிடுகிற திருப்தியில் பெண் மேலும் தன்னை நிம்மதியாகத் தளர்த்திக்கொள்கிறதாம்.

இதனால் அதிகபட்சம் உள்ளே விந்து செலுத்தப்படுவதும் அதனால் நிறைய முட்டைகள் பொறிக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆணின் அடிப்படை உணர்வு ஒன்றுமட்டும்தான் – அதாவது, தன் மனைவிக்கு, தன்னுடைய ’ஜீன்’களால் உருவாக்கப்பட்ட ‘குழந்தைகள்’ பிறக்க வேண்டும்! உடலுறவை அவசரமாக முடித்துவிட்டுப் போய்விட்டால் இன்னோரு ஆண் வந்து பெண்ணுடன் தொடர்பு கொள்ளக்கூடும்! ஆகவே, தன்னுடைய ‘தந்தை’ ஸ்தானத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள உயிர்த்தியாகமே செய்கிறது.

ஆணுக்கு அதுவே முதலும் கடைசியுமான உடலுறவு. அதனால் என்ன? தன் குழந்தைகளுக்குத் தன் ‘ஜீன்’கள் போய் சேர்ந்துவிட்டன. அது போதும்!

எலிசபெத் டெய்லரின் ஏழாவது விவகாரத்தைப்பற்றி?


மற்ற நடிகைகள் மாதிரியானவள் அல்ல நான். யாருடன் படுத்துக்கொண்டாலும் அவரை நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததில்லையாக்கும்!’ என்று அவரே ஒருமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்!

-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 16, 2010 in கேள்வி-பதில்

 

குறிச்சொற்கள்:

ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்?

உயிரினங்களில், ‘பணியை’ முடிக்க வெகு நேரம் எடுத்துக்கொள்வது எது? வெகு சீக்கிரம் முடிப்பது எது?-நான் குறிப்பிடுவது உடலுறவு விஷயத்தில்!


ஆறிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை விலகாமல், மெய்மறந்து பிணைய்ந்திருப்பது சர்வசாதாரணம் – நான் குறிப்பிடுவது ஜோடிப்பாம்புகளை. இரண்டிலிருந்து மூன்று விநாடிகளில் முடித்துக் கொள்வதுதான் வழக்கம் –நான் குறிப்பிடுவது மிஸ்டர் அண்ட் மிஸஸ் கொசுவை.

ஆண்களைப்போல் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்? ஏன் இந்த கூச்ச உணர்வு?

யார் சொன்னது? உண்மையில், பெண்கள் காதல் என்று இறங்கிவிட்டால் அவர்களுடைய துணிச்சலுக்கு ஆண்கள் ஈடுகொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இதுபற்றியெல்லாம் பல நாடுகளில் ஆராய்ச்சிகள்கூட நடந்தாகிவிட்டன. உதாரணமாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் நிறைய காதல் கடிதங்களைச் சேகரித்துப் பரிசோதனை செய்ததில், ஆண்கள் எழுதிய கடிதங்களில் எல்லாம் எச்சரிக்கை உணர்வு அதிகம் இருந்தது. எதையாவது எழுதி ‘கமிட்’ பண்ணிக்கொண்டுவிடக்கூடாது என்று கவலை தென்பட்டது. எமோஷன் சற்று குறைச்சலாகவே இருந்தது. பெண்கள் விஷயமே வேறு! காதல் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக, உண்மையாக, முழுமையாக அனுபவிக்கிறார்கள். ‘நீ என்னுடையவன்’ என்று முடிவுகட்டிவிட்டால் அதிரடியாக உரிமை எடுத்துக்கொள்வார்கள்! லண்டனிலு வசிக்கும் பில் கோக் என்ற தொழிலதிபருக்கும் அவருக்கு செயலாளராக இருந்த காதரின் என்ற பெண்ண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு இப்போது உறவு முறிந்துவிட்டது. இது சம்மத்தமான ஒரு வழக்கு அங்கே நடந்து வருகிறது. அதில் அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் சாட்சியமாக வந்தபோது காதரீன் எழுதிய கடிதங்களில் இருந்த காதல் ரசமும், தாபமும், வெளிப்படையாக எழுதப்பட்ட சில உணர்வுகளும் கோர்ட்டில் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கின்றன. ‘நீங்கள் சென்ற பிறகும் உங்கள் முத்தங்களை நினைக்கும்போதெல்லாம் பரவச உணர்வுகள் எனக்குள் பரவுகிறது… என் உடலில் ஒவ்வொரு அங்குலமும் உங்கள் தழுவலுக்கு ஏங்கித்துடிக்கிறது. பூத்துக்குலுங்கும் ஈரமான ஆர்க்கிட் மலர்கள் ஒட்டுமொத்தமாக என்னை அரவணைப்பது போன்ற அற்புத உணர்ச்சி’- ஒரு கடிததின் ஆரம்பமே இப்படி!
-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 

குறிச்சொற்கள்: , ,

பலான புள்ளி விபரம்

இந்தியர்களில் 10க்கு 7 பேர், அதாவது 70% AIDS, HIV பற்றி கவலைப்படுகின்றனரே தவிர, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை… 27% இந்தியர்கள் AIDS, HIV பாதிப்பைத்தடுக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளுவதில்லை. வெறும் 15% மட்டுமே ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஓராண்டில் 76 முறை உடலுறவு கொள்கின்றனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹாங்காங் நாட்டவர் 63 முறையும், சீனர்கள் 72 முறையும், அமெரிக்கர்கள் 124 முறையும், பிரிட்டனைச்சேர்ந்தவர்கள் 107 முறையும் உடலுறவு கொள்கின்றனர்.

இந்தியர்களில் 77% பேர் ஒரே ஒருவரிடம் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் இப்படிப்பட்டவர்கள் வெறும் 11% மட்டும்தான். பிரிட்டனில் 3% பேர்.

கற்பைக் காப்பாற்றிக் கொள்வதில் மற்றெந்த நாட்டினரையும் விடவும் இந்தியப்பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்பது மட்டும் மகிழ்ச்சியான செய்தி. இந்தியல்கள் முதன்முறையாக தங்களது 20.3 வயதில்தான் உடலுறவே கொள்கின்றனர். பிரிட்டனில் 16.9 வயதிலும், அமெரிக்க இளசுகள் 16 வயதிலும் முதல் அனுபவத்தைப் பெற்றுவிடுகின்றனர்.

இந்திய பள்ளி மாணவர்கள் செக்ஸ் பற்றி 16 வயதில்தான் தெரிந்து கொள்கின்றனர். ஏறக்குறைய 28% இந்தியர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், குடும்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலமாகத்தான் செக்ஸ் சுகாதாரம் பற்றி தெரியவருகிறது. 27% பேருக்கு நண்பர்கள் சொல்வதுதான்.

பிரிட்டனில் 23% பேர் தங்கள் பெற்றோர் மூலம் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் இது இந்தியாவில் வெறும் 6% தான்.

இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30% பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21% பேரும், டி.வி. பார்ப்பதை 14 % பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3% பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் என்று கூறுகின்றனர். பிரிட்டனில் இது 31%.

இந்தியர்களில் 32% பேர் பீச் மணலில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். 7% சமயலறையில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர்.

பெர்சனால்டி பார்த்து மயங்குவதும் இந்தியாவில்தான் அதிகம். இது 26%. பேச்சு, பழக்க வழக்கம் பார்த்து 15% பேரும், வேலையைப்பார்த்து 11% பேரும் கவரப்படுகின்றனர்.

உலகின் மொத்த மக்கட்தொகையில் 46% HIV, AIDS பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உலக அளவில் பாலியல் பற்றிய கல்வியறிவை சராசரியாக 13 முதல் 19 வயதில்தான் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் முந்தைய தலைமுறையினரை விட தற்போதைய இளைஞர்கள் சிறிய வயதிலேயே பாலியல் பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

உலக மக்கட்தொகையில் 46% இந்த நோய் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. 10-ல் நான்கு பேர், அதாவது 40% பேர் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை.  தென் ஆப்பிரிக்காவில் 81%, தாய்லாந்தில் 77% என மற்ற நாட்டினரைவிட தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28% பேர் ஆணுறையை பயன்படுத்துவதில்லை.

பெரும்பாலும், ஆண்களில் 10-ல் மூன்று பேர், அதாவது 30% பேர், பெண்களில் 30% பேரும் நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள மிகவும் விரும்பினாலும், இந்தியர்களும், மெக்ஸிகோ இனத்தவரும் வேலை செய்வதையே விரும்புகின்றனர். தாய்லாந்து நாட்டவர் தூங்குவதையும், சீனர்கள் டி.வி. பார்ப்பதையும் அதிகம் விரும்புகின்றனர்.

உலக நாடுகளில் ஏறக்குறைய 37% பேர் அடுத்தவரின் பெர்சனால்டியைப் பார்த்தும், 19% அழகைப்பார்த்தும், 11% பேர் நகைச்சுவை உணர்வைப்பார்த்தும் ஆசை கொள்கின்றனர்.

 

குறிச்சொற்கள்: , , , ,