RSS

Monthly Archives: மார்ச் 2014

’வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்

படம்

சின்னகண்ணுக்கும் அவன் மனைவி பொன்னு கண்ணுக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பிதழ் வந்தது. வித்தியாசமான மாறு வேடத்தில்தான் அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருந்தார்கள். பார்ட்டிக்கு கிளம்பும் தினத்தன்று பொன்னுகண்ணுக்கு தலைவலி மண்டையைப் பிளக்க… ‘நான்வரலை நீங்க போய் என்ஜாய் பண்ணுங்கஎன்றுஅனுப்பிவைத்தாள். சின்னக்கண்ணு குடுகுடுப்பைக்காரன் வேஷத்துக்கான மாறுவேஷ டிரெஸ்ஸை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் போன கொஞ்ச நேரத்தில் பொன்னுகண்ணுவுக்கு தலைவலி போய்விடஇவளும் தான் வாங்கிவைத்த மாறுவேஷடிரெஸ்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பினாள். அங்கே போனபோது குடுகுடுப்பை டிரஸ்ஸோடு தன் புருஷன் பலபெண்களோடு ஜாலியாக ஆடிப்பாடுவதும், சான்ஸ் கிடைத்தால் முத்தா கொடுப்பதுவுமாக இருப்பதைப் பார்த்தாள். அவன் எந்த ரேஞ்சுக்குப் போகக்கூடியவன் என்று ஆழம் பார்க்க இவளும் அருகே போனாள்.

மாறு வேஷத்தில் இருப்பது யாரென்றே தெரியாமல் அவனும் இறுக்கி அணைத்தான். புருஷன்தானே என்ற தைரியத்தில் இவளும் சும்மா இருக்கஅவன் இவள் காதில் குனிந்து ஏதோ கிசுகிசுக்கஇவளும், ‘எந்த அளவுக்கு நம்ம புருஷன் மோசமானவன்என்று தெரிந்து கொள்ள முடிவெடுத்துஅவனோடு சேர்ந்து பார்ட்டி பங்களா விற்கு வெளியே இருட்டு புல்தரைக்குப் போனாள்.

எல்லாமே ஆகிப்போச்சு அங்கே! அப்பவும் தன் மாறுவேடத்தைக் கலைக்காமல், யாரென்றும் சொல்லாமல் குடுகுடுவென வீட்டுக்குத் திரும்பிவந்து பொன்னுக்கண்ணு, புருஷன் வந்ததும் அவன் சபலபுத்திக்கு சூடுகொடுக்க கோபமாகக் காத்திருந்தாள்.

சின்னக்கண்ணு வந்ததும் ‘’ எப்படிக் கழிஞ்சுது இந்த ராத்திரி?’’ என்றாள் ஆத்திரத்தைக் காட்டாமல். அவன் சொன்னான், ‘’ சீட்டாட்டம், ரெண்டு பெக்விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாகத்தான் போச்சி. ஆனால் எல்லாம் எங்க ஆபிஸ் கிளப்பில்! நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா போரடிக்கும்னு குடுகுடுப்பை டிரஸ்ஸை என்ஃபிரண்டுக்கு கொடுத்திட்டேன்!’’

தன்னோட தோழி ராஜியம்மா கிட்டே ஜாலியம்மா ஒருநாள் கவலையா சொன்னாளாம்… ‘’என்னடி வாழ்க்கை இது? சொந்த வீட்டுக்குள்ள இருந்துகிட்டே அவரோட அரைமணி நேரம் கூட நிம்மதியா கழிக்கமுடியலை!’’

‘’ஏன் குழந்தை தொல்லை பண்ணுதா?’’னு கேட்டா ராஜியம்மா.

‘’இல்லையேகுழந்தை பள்ளிக்கூடத்துக்குப் போன பிறகும்கூடஎங்க ரெண்டு பேராலயுமே சந்தோஷமா இருக்க முடியலை’’ன்னா ஜாலியம்மா.

ராஜிக்கு ஒரே குழப்பமா போச்சு. ‘இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச சைக்காலஜியைச் சொல்றேன்.. அந்த மாதிரி சமயத்துல உன் கணவரோட முகத்த நேருக்கு நேர் பார்த்ததுண்டா?’’ என்றாள்.

ஜாலியும் அசராம, ‘ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன்அதுவும் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நின்னு எங்களையே வெறிச்சி பார்த்துக் கிட்டிருந்தாரு. அப்போ அவர் மூஞ்சி எவ்ளோ ஆக்ரோஷமா இருத்துச்சு தெரியுமா? அப்புறம் எப்படி நாங்க சந்தோஷமா…?

இந்தக் கதைகள் எதிலே வந்தது தெரியுமா? ‘’வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்!’’ அப்படிங்கிற தலைப்பில் ஆனந்தவிகடனில்! வருஷம் வேணுமா 04.02.2009 இதழில்.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் மார்ச் 14, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: ,