RSS

Monthly Archives: ஏப்ரல் 2011

வாத்ஸாயனர் தரும் முத்த ரகசியங்கள்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப்பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.

இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.

ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கைவிரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போடு வரும்போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

நன்றி; தினத்தந்தி

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஏப்ரல் 30, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,

அன்றும்…


இதற்கு மேலும் சுமக்க முடியாது…

சமையல் கட்டிலேயே கிட…

பெண் பிள்ளையாய் நடந்துகொள்…

நெற்றி சுருங்கி

பாதங்கள் ஒலியெழுபப்

பறந்து வந்தது அறிவுறையும் ஆத்திரமும்

முகத்தில் இரண்டு சாணி உருண்டைகளை

விட்டெறியலாம் போலிருந்தது.

ஆனால் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தேன்

குனிந்திருந்ததில் மாவுடன் கலந்தது

கண்ணின் உப்பு நீரும்.

பரிதாபப்படுவது போல்

போகிற போக்கில் சில முட்களை

நெஞ்சோரம் கவனமாய்ச்

செருகிவிட்டு நடந்து போனது

ஒரு சந்தர்ப்பவாதி

தூரத்தில் இருந்தபடி

‘இன்னும் வேண்டும்…’

மனதுக்குள் ரசித்தது மற்றொன்று

ஒரு குழந்தை மட்டும்

கூடச்சேர்ந்து மாவு பிசைந்தது

என் கண்ணீரை

அன்று எல்லோரும் உண்டனர்!

– கல்பனா.


 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 22, 2011 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: ,

உடலுறவில் கூட்டு வழிபாடு

சிலர் சக்சஸ் ஆகாமல் போவதற்கு ‘செக்ஸ்’ காரணம் என்பது உண்மையா?

சிலர் விஷயத்தில் உண்மையாக இருக்கலாம். ஆனால் சக்ஸஸ்-செக்ஸஸ் இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது. உலக மகா விஞ்சான மேதையான ஐசக் நியூட்டனுக்கு செக்ஸ் உணர்வு ரொம்பக்குறைவு. ‘கன்னித்தன்மை’யை இழக்காமலேயே அவர் இறந்த்தார் என்று கூட சிலர் சொல்கிறார்கள். அதுவே ஓவிய மேதை பிக்காஸோ இந்த விஷயத்தில் ரொம்ப சுறுசுறுப்பானவர். செக்ஸூக்காக கடமைகளையும், சாதனைகளையும் கைவிட்டால், யாராக இருந்தாலும் கண்டிப்பாக உருப்பட முடியாது.

உலகில் தோன்றிய முதல் மூடநம்பிக்கை எது?

ஆணின் உதவி இல்லாமல் பெண் தானாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறாள்!

உடலுறவில் கூட்டு வழிபாடு

இந்தியாவின் மையப்பகுதி, உத்திரப்பிரதேச மாநில எல்லைக்குள் விந்தியாசலம் என்ற சின்னஞ்சிறிய ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள ‘பைரவ்குண்ட்’ என்ற சின்னஞ்சிறிய அமானுஷ்யமான கிராமம். இங்கு காளிக் என்று கூறிக்கொள்ளும் ஒரு வகுப்பாரின் வெறித்தனமான ஒரு உடலுறவுக் கொள்கையும், அதன் வெளிப்பாடும் இன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. ‘சம்சத் யோனி பிஹாரேஷி மத்ரியோனி பர்ஜிதே’ என்கிற அவர்களின் மூல மந்திரம், தாயைத் தவிர யாரை வேண்டுமானாலும் தாரமாகக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கிறதாம்.

ஆண்-பெண் உறுப்புக்களே இவர்களின் மூல தெய்வங்களான, பைரவர், பைரவியின் அடையாளமாக் கொண்டாடப்படுகின்றன.

இங்கு உடலுறவில் கூட்டு வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தசராவின் போதும், மார்ச்சில் நவராத்ரியின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கூட்(டு)ட வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். விந்து தானத்திற்கு புராணத்தையும் இழுக்கிறார்கள். சூர்யன், தர்மன், இந்திரன், வாயுதேவன் ஆகியோர் குந்தி தேவிக்கு விந்து தானம் அளித்ததாய்க் கூடச்சொல்கிறார்கள்.

தகவல் – தி வீக்,

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஏப்ரல் 17, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,