RSS

Tag Archives: பெண்கள்

கட்டுக்கதைகள்

உறவு

உறவு

1. எங்களுக்கு பெரிய மார்பகங்கள் பிடிக்கும்!

இல்லை. கண்களைப் பார்க்காமல் கழுத்துக்குக் கீழே பார்த்துப் பேசுவதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.

2. ஆண்களைக் கவர அழகாக ஆடை அணிகிறோம்!

எங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க அல்லது மற்ற பெண்களை விட நன்றாக தெரியவேஅழகாக ஆடை அணிகிறோம்.

3. எப்போதும் உணர்வுகளைப் பகிர விரும்புகிறோம்!

உடலுறவுக்குப் பிறகு டி.வி. பார்க்கவோ தூங்கவோ ஆசைப்படுவது ஆண்கள் மட்டுமல்ல. நீங்கள் கோமாளி மாதிரி நடந்துகொண்டதை சுட்டிக்காட்டியதால் உங்கள் மனம் புண்பட்டதை நாங்கள் அறிய விரும்பவில்லை.

4. நாங்கள் மோசமான மூடில் இருந்தால் மாதவிடாய் என்று அர்த்தம்!

ஒரு பெண்ணால் ஒரே சமயத்தில் பல வேலைகளைய் செய்யமுடிகிறது. ஒரு ஆண் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறான். இது எப்படி என்று புரியாதததுதான் ஒரு பெண் மோசமான மூடில் இருப்பதற்குக் காரணம்.

5. எங்கள் பாலுணர்வு ஆண்களைவிடக் குறைவு!

ஆண்களுக்கு 18 வயதில் பாலுணர்வு அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் முப்பதுகளின் நடுவில் ஆர்வம் இழந்துவிடுவது எல்லாப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவம்.

6. நாங்கள் ஒட்டிக்கொண்டு விடுவதேயில்லை!

நீங்கள் எங்களைச் சந்திக்கும்போது எங்களிடம் முழு கவனம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்பலாம். ஆனால் முழு நாளும் உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதா? தேவையே இல்லை!

7. உடலுறவு நெருக்கத்திற்காக்கத்தான். திருப்தி இரண்டாம் பட்சம்தான்!

நெருக்கம் நல்லதுதான். ஆனால் நாங்கள் உங்களுக்குத் தரவேண்டும் என்றால், நீங்களும் எங்களுக்குத் தரவேண்டும். ஆதே போல பெண்களின் உடலமைப்பைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

8. பொசசிவ் குணத்தை விரும்புகிறோம்!

அடிதடியில் இறங்கும் ஆளைவிட எதிராளியை சாமர்த்தியமாக பேச்சால் வீழ்த்துபவனைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

9. சிறு வயதிலிருந்தே நாங்கள் திருமணக் கனவு காண்கிறோம்!

எங்கள் கனவு மணமகனைப் பற்றியது! திருமணத்தைப் பற்றியதல்ல.

10. முப்பது வயதிற்குப் பிறகு எங்களுக்கு உடல் பற்றித்தான் கவலை!

இன்று பெண்கள் 42 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்களால் அந்த வயதில் தந்தையாக இருக்கமுடியுமா?

– திரைக்கதையாசிரியர் தேவிகா பகத்

 

குறிச்சொற்கள்: , , , ,

கனாக் காணும் காலங்கள்

பெண்கள் எப்போதுமே பெரும் சக்தி. அனிச்சையாய் மாராப்பைச் சரி செய்கிற விரல்கள். கண் சிமிட்டல்களையும், காத்திருப்புகளையும் தவிர்க்கிற விழிகள் என இயற்கையாகவே பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம்.

அவர்கள் உடலைத் தருவதற்கு முன் உள்ளத்தைத் தருபவர்கள். ஆண்கள் போல அவசரக் குடுக்கைகள் அல்ல!

ஒரு பெண் இறுக்கமாய் இருந்தால்… திமிர், கொஞ்சம் சிரித்துப் பேசினால்… ‘ஈஸி’ டைப். பையன்களிடம் நட்பாய் இருந்தால்… எதற்கும் துணிந்தவள். விருப்பு வெறுப்புகளில் தெளிவாக நின்றால்… அடங்காப் பிடாரி. தன் வாழ்வைத்தானே தீர்மாணித்தால்… ஓடுகாலி. பெண்களுக்கு சமூகம் சூட்டுகிற பட்டப் பெயர்களுக்கா பஞ்சம்?

பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் ஆதங்கம். சில மேலைநாட்டுப் பெண்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தாண்டி, ஆணுக்கு மேலாக அவர்கள் கரமும் தரமும் ஓங்கியிருக்கும். தனியாகவே வாழ முடிகிற துணிவும் தகுதியும் இருக்கும்.

ஆனால் இங்கே இந்தியாவில் கல்யாணச் சந்தை என்று வந்துவிட்டால், பெண்களின் நிலை பரிதாபம்! ஏறக்குறைய துப்பறியும் நிபுனர்களாகவே மாறி, என்னன்னவோ விசாரித்த பின்புதான் ஒரு பெண்ணை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பெரும் காமுகனுக்குக் கூட பேசாமலேயே பெண் கொடுக்கச் சம்மதிப்பார்கள் என்ன நான்சென்ஸ் இது?

பெண்களின் பிரச்னையே, அவர்களின் வீடுதான். தனியாகச் செல்ல அனுமதி மறுப்பார்கள். வெளி மனிதர் வீடு வந்தால் உள்ளே ஒளிந்து கொண்டாக வேண்டும். கொட்டிக் கொட்டியே பெட்டிப் பாம்பாய் ஆக்கிவிடுவார்கள். அப்படி ஒரு பெண்ணிடம், எவனோ ஒருவன் துரத்தித் துரத்தி அன்பைக் கொட்டும்போது, மாயக்கதவுகள் தகர்ந்து, அவள் குழந்தையாகி விடுகிறாள். வந்தவன் நல்லவனானால்… அவர்கள் அதன்பிறகு ‘இனிதாக வாழ்ந்தார்கள்’ என்று சுபம் போடலாம். நாதாரி நாயாக இருந்தால், ஆரம்பிக்கும் நரகம்.

கீர்த்தனா கொள்ளை அழகு… பையன்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். எல்லாவற்றிற்கும் புன்னகை மட்டுமே பதில். எனக்கும் அவளைப் பிடிக்கும். நானும் கூடக் காதலைச் சொன்னேன். சிரித்தாள். ‘இதுதான் உன் வாழ்க்கையின் லட்சியமா…?’ என்றாள். நான் பதில் கிடைக்காமல் தடுமாறினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள் கீர்த்தனா. அந்த நிமிடம் எனக்கு அவமானமாக இருந்தாலும், பிறகு அதைக் கடந்து அவளுடன் நட்பைத் தொடர முடிந்தது.

இப்போது நாசாவில் வேலை செய்கிறாள். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செல்வா! எவ்வளவு நாள் கனவு… நான் ஜெயிக்கப் போறேன். இன்னும் ஒரு வருஷத்துல ப்ராஜக்ட் லீடராயிடுவேன்’ என்று மெயில் அனுப்பியிருந்தாள். கணவன் பற்றியோ, குழந்தை பற்றியோ… ஹூம்!

வாழ்க்கை சிலருக்கு எவ்வளவு எளிதாகப் போய்விடுகிறது! அவளுக்கும் உணர்வுகள் இல்லாமலா இருந்திருக்கும்? உணர்ச்சிகளைத் தள்ளிவைத்துப் பறந்தால் மட்டுமே, உயரம் கைகூடுகிறது.

காதலா, சரி…

திருமணமா செய்துகொள்.

‘கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது’ என்று உன் வேலையை, திறமையை, அடையாளத்தை விலையாகக் கேட்கிறானா?

‘ச்சீ… போடா!’ என்று துரத்து!

உன் அருமை புரிந்து உன்னை ‘இன்ச்… இன்ச்!’ ஆகக் காதலிக்க ஒருவன் கிடைப்பான். அதுவரை காத்திரு! கிடைத்தது போதும் என்று அவசரப்படாதே!

தன்னடக்கத்துக்கும், தாழ்வுமனப்பான்மைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

கறுப்பு, குள்ளம், படிப்பு, பணம் என்று எதுவுமே பிரச்னை ஆகக்கூடாது பெண்களே… மனம் மட்டும்தான் பிரதானம்!

கறுப்பாக இருந்தால் உன்னை ஒருவரும் பார்க்காவிட்டால், உன்னைக் காதலிக்காவிட்டால் என்ன இப்போது? இதை ஒரு குறையாகத் துயரப்பட்டுப் புழுங்கும் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன்! இளமை கொல்லும் அந்த மூன்று வருடங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் பின் நீதான் ராணி!

இதற்கெல்லாமா தனிமைப்பட்டுப் போவது? உலகத்தின் பெரிய மாடல்கள் கறுப்பு நிறம்தான். முதலில் உன்னை உனக்குப் பிடிக்க வேண்டும்!

– இயக்குனர் செல்வராகவன்.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 1, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்?

உயிரினங்களில், ‘பணியை’ முடிக்க வெகு நேரம் எடுத்துக்கொள்வது எது? வெகு சீக்கிரம் முடிப்பது எது?-நான் குறிப்பிடுவது உடலுறவு விஷயத்தில்!


ஆறிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை விலகாமல், மெய்மறந்து பிணைய்ந்திருப்பது சர்வசாதாரணம் – நான் குறிப்பிடுவது ஜோடிப்பாம்புகளை. இரண்டிலிருந்து மூன்று விநாடிகளில் முடித்துக் கொள்வதுதான் வழக்கம் –நான் குறிப்பிடுவது மிஸ்டர் அண்ட் மிஸஸ் கொசுவை.

ஆண்களைப்போல் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்? ஏன் இந்த கூச்ச உணர்வு?

யார் சொன்னது? உண்மையில், பெண்கள் காதல் என்று இறங்கிவிட்டால் அவர்களுடைய துணிச்சலுக்கு ஆண்கள் ஈடுகொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இதுபற்றியெல்லாம் பல நாடுகளில் ஆராய்ச்சிகள்கூட நடந்தாகிவிட்டன. உதாரணமாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் நிறைய காதல் கடிதங்களைச் சேகரித்துப் பரிசோதனை செய்ததில், ஆண்கள் எழுதிய கடிதங்களில் எல்லாம் எச்சரிக்கை உணர்வு அதிகம் இருந்தது. எதையாவது எழுதி ‘கமிட்’ பண்ணிக்கொண்டுவிடக்கூடாது என்று கவலை தென்பட்டது. எமோஷன் சற்று குறைச்சலாகவே இருந்தது. பெண்கள் விஷயமே வேறு! காதல் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக, உண்மையாக, முழுமையாக அனுபவிக்கிறார்கள். ‘நீ என்னுடையவன்’ என்று முடிவுகட்டிவிட்டால் அதிரடியாக உரிமை எடுத்துக்கொள்வார்கள்! லண்டனிலு வசிக்கும் பில் கோக் என்ற தொழிலதிபருக்கும் அவருக்கு செயலாளராக இருந்த காதரின் என்ற பெண்ண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு இப்போது உறவு முறிந்துவிட்டது. இது சம்மத்தமான ஒரு வழக்கு அங்கே நடந்து வருகிறது. அதில் அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் சாட்சியமாக வந்தபோது காதரீன் எழுதிய கடிதங்களில் இருந்த காதல் ரசமும், தாபமும், வெளிப்படையாக எழுதப்பட்ட சில உணர்வுகளும் கோர்ட்டில் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கின்றன. ‘நீங்கள் சென்ற பிறகும் உங்கள் முத்தங்களை நினைக்கும்போதெல்லாம் பரவச உணர்வுகள் எனக்குள் பரவுகிறது… என் உடலில் ஒவ்வொரு அங்குலமும் உங்கள் தழுவலுக்கு ஏங்கித்துடிக்கிறது. பூத்துக்குலுங்கும் ஈரமான ஆர்க்கிட் மலர்கள் ஒட்டுமொத்தமாக என்னை அரவணைப்பது போன்ற அற்புத உணர்ச்சி’- ஒரு கடிததின் ஆரம்பமே இப்படி!
-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 

குறிச்சொற்கள்: , ,