RSS

Monthly Archives: ஜனவரி 2012

காமக் கடும்புனல்

வீடு துறந்து செல்பவர்கள்

திரும்புவதில்லை

வெளியில் ஒருத்தி அமைந்துவிட்டால்.

சிறு காலமே நீடிக்கும் இன்பம்

என்பதால் அல்ல

சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல

அந்த இன்பத்தை அடைய

எந்தச்சிறுமையும் அடைவர்

என்பதால்

அது சிற்றின்பம்.

மலையும் மலை சார்ந்த இடமும்

கொங்கைக் குறிஞ்சி

காடும் காடு சார்ந்த இடமும்

கூந்தல் முல்லை

வயலும் வயல் சார்ந்த இடமும்

வயிற்று மருதம்

கடலும் கடல் சார்ந்த இடமும்

வாய் நெய்தல்

மணலும் மணல் சார்ந்த இடமும்

முதுகுப் பாலை.

-மகுடேஸ்வரன்.

 

குறிச்சொற்கள்: ,

தீயைத் தூண்டி விட…

சில விஷயங்கள் மட்டுமே அனைவராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். உதாரணமாக செக்ஸை சொல்லலாம். தினமும் சிறப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்பதை உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால்  தாம்பத்யம் எனபதே சிரமமாக மாறியவர்களோ வயாகரா போன்ற செக்ஸ் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி தங்களது உணர்வுகளை அதிகரித்துக் கொள்கின்றனர். 1988 ஏப்ரலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட வயாகரா விரைவிலேயே 3 மில்லியன் நபர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வாய்வழி மாத்திரை ஆண்மைக் குறைவை நிவர்த்திப்படுத்துவது மட்டுமின்றி ஒருவரது செக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கியது. ஆரம்பத்தில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்செயலாக ஆண்மைக் குறைவையும் நிவர்த்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து உலகின் பல பகுதிகளிலும் அங்கிருந்த உள்ளூர் செக்ஸ் ஊக்க மருந்துகளுக்குப் போட்டியாக திகழ்ந்து வருகிறது.

2005 இல் இந்தியாவில் வயாக்ரா அறிமுகப்படுத்தப்பட்டபோது எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த அபூர்வ மாத்திரை எழுச்சிக் குறைபாட்டுடன் இருந்த 100 மில்லியன் இந்தியர்களுக்கான மந்திரச் சொல்லாகிவிட்டது. 50 மிகி மாத்திரை 463 ரூபாய் விலையில் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகளில் இதன் 15 வெவ்வேறு வடிவங்கள் 22 ரூபாய் விலை முதல் கிடைக்கிறது.

தனது துணையைத் திருப்திப்படுத்த யுனானி மருந்தை நம்பியிருந்த ராஜேஷ் திரிபாதி இப்போது வயாக்ராவைப் பயன்படுத்துகிறார்.  “உடனடி பலன் தருவதில் வயாக்ராவுக்கு ஈடுஇணையில்லை. நான் யுனானி மற்றும் இதர உள்ளூர் மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது இந்த நீலநிற மாத்திரையையே விரும்புகிறேன். மற்ற மருந்துகள் என்னைத் தூண்டுவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும் போது, இது உடனடியாகத் தூண்டுவதோடு 100 சதவிகிதம் பலனைத் தருகிறது. மேலும் இந்த மாத்திரை நீண்டநேரம் செயல்படவும் உதவுகிறது என்கிறார்.

இதனால் வயாகரா முழுமையாக உள்ளூர் மருந்துகளைக் காலி செய்துவிட்டது என்று பொருளில்லை. கிராமப்பகுதிகளிலும் வயாக்ராவின் பக்கவிளைவு காரணமாக அதைச் சாப்பிட பயப்படுபவர்களின் மத்தியிலும் இவர்கள் செல்வாக்குடன் திகழ்கின்றனர்.

இந்த உள்ளூர் மருந்துகளுக்கு தனி சந்தை உள்ளது. இப்போதும் பலர் யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளே பாதுகாப்பானவை என்று நம்புகின்றனர். ஆனாலும் வயாகராவுக்கு இணையான மாற்று மருந்து யுனானியில் இல்லை.

வயாகரா ரத்த ஓட்டத்தை அதிகரித்து செக்ஸ் திறனை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. அளவுக்கு அதிகமாக வயாக்ராவைப் பயன்படுத்தினால் தலைவலி, ரத்த ஒழுக்கு, ஹார்ட் அட்டாக் போன்றவை வரக்கூடும். ஆனால் யுனானியில் இதுபோன்ற பிரச்னை எதுவும் இல்லை.

சீதாராம் பாரதி மருத்துவமனையின் சிறுநீரக துறையின் தலைமை மருத்துவரான எஸ்.வி. கோட்வால், வயாகராவின் வருகை இதற்கு முன்பு வேறுவழியில்லாமல் இருந்த மக்களுக்கு ஒரு வழியைத் திறந்துவிட்டுள்ளது என்கிறார். ‘இப்போது வயாகராவின் பல வடிவங்கள் எளிதாக இந்தியாவில் கிடைக்கின்றன.’ நானே என்னுடைய பல நோயாளிகளுக்கு வயாகராவை பரிந்துரைத்துள்ளேன்’ என்கிறார்.
எழுச்சியுடன் திகழவேண்டும் என்ற கூட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக ஹோமியோபதியும்கூட இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது என்கிறது. ஆனாலும் ஹோமியோபதியில் உடனடி நிவாரணம் கிடையாது. நீண்டகால சிகிச்சைக்கு உட்பட்டாக வேண்டும்.

ஹோமியோபதியில் தாமியானா, சாலிமம் போன்றவை உள்ளன. யோகாவில் உள்ள சில ஆசனங்கள்கூட செக்ஸ் உணர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன. உள்ளூரில் உள்ள செக்ஸ் உணர்வைத் தூண்டும் மருந்துகளோடு ஒப்பிடுகையில் வயாகரா மிகவும் விலை மலிவானது என்பதே அதன் பெரிய பலம். 300 ரூபாய் செலவில் தாம்பத்யத்தில் படிப்படியான முன்னேற்றம் அடைவதை ஒருவர் உணரமுடியும்.

கட்டுரை; த சன்டே இந்தியன்

 

குறிச்சொற்கள்: , ,

வாசித்திருக்கிறீர்களா…? விழியின் கதையை…

தொடர்ந்து பதிவிடமுடியவில்லை. ஒருவித விரக்தியும் கூட காரணம். ஏதொ ஆர்வத்தில் ஆரம்பித்துவிட்டு வாசகர்களின் வருகை காரணமாக தொடர்ந்து பதிவிடவேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. மிகவும் ஆபாசம் எனக் கருதியவற்றை நான் வெளியிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்த எதிர்வினைகள் இப்போது இல்லை என்றாலும் என் அந்தரங்கத்தை இப்படி கடை பரப்பியதை எண்ணி மன உளைச்சலும் அடைகிறேன். ஏனென்றால் இதை வெளியிடுவதற்கு எனக்கே மனம் ஒப்பவில்லை. இதனால் நான் சாதிக்கப் போவது என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனாலும் இணைய வாசிப்பு அதிகமாகிய பிறகு இதில் தவறொன்றும் இல்லை என்றும் படுகிறது. மேற்குலகில் வேண்டுமானால் எல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால் நமது நாட்டில் எல்லாவற்றுக்கும் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. இந்தக் கடிதங்கள் (விடுபட்ட கடிதங்களும் சேர்த்து) அனைத்தையும் புத்தகமாக வெளியிட முடியுமா தெரியவில்லை? யாரும் இதற்கு முன் வருவார்களா என்றும் தெரியவில்லை? வா.மு.கோ.மு.வின் நாவல்கள் படித்த பின்பு சாத்தியம் என்றே படுகிறது. பார்க்கலாம்.

திரு. நாகார்ஜூனனின் திணை இசை சமிக்ஞை வலைத்தளத்தில் ழார் பத்தாய்யின் ‘விழியின் கதை’ நாவலைத் தமிழாக்கம் வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தபோது என்னுடைய கடிதங்களும் இதுபோல் வெளியிடமுடியுமா என்ற ஆவல் ஏற்பட்டதை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ழார் பத்தாய் (Georges Bataille – 1897-1964) என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளர் எழுதிய Histoire d’Oeil – அதாவது The Story of the Eye என்ற இந்த நாவலை வாசிக்க, தைர்யம் வயதுவந்தோர்க்கு வேண்டும். இவர், 1928-ஆம் ஆண்டு இந்தக் குறுநாவலை Lord Auch என்ற புனைபெயரில்தான் எழுதினார். மொழி பெயர்த்தவர் ஜெனிவா வாழ் பெண் யூரேக்கா. அதற்கான இணைப்பு இங்கே விழியின் கதை.

இணைப்புக்குப் போகுமுன் அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்ட இந்த வரிகளையும் படியுங்கள்.

குறுநாவலை வாசிப்பதற்கு முன்னர்;

1. தைர்யமில்லை என்று தெரிந்தால் நிறுத்திவிடவும். தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.

2. தமிழிலக்கியம் பழகி உள்ளொளி, அகதரிசனம், ரசனை, ஒழுக்கவியல் சார்ந்திருப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். உங்களுக்கில்லை இது. கொச்சையான-மனிதவிரோத எழுத்து என்று இதை எளிதாக விமர்சித்துவிடலாம். பத்தாயும் விமர்சிக்கப்பட்டார்.

3. வெறும் போர்னோ எழுத்தென நம்பி வாசிக்க விரும்பிவரும் லாட்ஜ்-விடலை ஆண்கள் வாசிக்க வேண்டாம். உங்களுக்குமில்லை இது.

4. இதைக்கேட்டு உடன் அகல்வோருக்கு நன்றி. பிற பதிவுகளில் சந்திக்கலாம்.

5. மொழியாக்கம் யூரேக்கா. என் பொறுப்பு சரிபார்ப்பது மாத்திரம்.

6. கொச்சை வார்த்தைகள் வரலாம் என்பது உங்களில் பெரும்பான்மையோர் கருத்து. நன்றி. ஆனால், யூரேக்காவின் விருப்பப்படி கொச்சை வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

7. தொடரலாமா, வேண்டாமா என்பதும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில்.

எனது நண்பனின் கடிதங்கள் அனைத்தும் என் பாதுகாப்பு கருதி எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விட்டேன். அந்தக் கடிதங்கள் இருந்திருந்தால் ஒரு ஆணின் தவிப்பும், சமூகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளும், கடமைகளும் இயற்கை ஆசைகளைக் கூட இயல்பாக தீர்த்துக்கொள்ள முடியாத வேதனைகளையும் ஒரு ஆணின் பார்வையில் இங்கே பதிவாக்கியிருக்க முடியும்.

குழந்தை வளர ஆரம்பித்ததும் என் எண்ணங்களை திசை மாற்ற முயற்சித்தேன். நண்பனுக்கு கடிதம் எழுதுவதை அறவே தவர்த்தேன். இனி பேச்சோ, நினைப்போ ஏன் மூச்சுக்காற்றோ படக்கூடாது என்று முடிவெடுத்தேன். கொசஞ்சம் கொஞ்சமாய் மறக்க முயற்சித்தேன். இரண்டு வருடங்கள் எந்தக் கடிதப்போக்குவரத்தும் இல்லை. இந்தக்காலகட்டத்தில் என்னைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது கடிதங்களை வைத்து ஏதும் பிரச்சனை கொடுக்கவோ முயலாத நண்பன் மீது மேலும் மதிப்புதான் அதிகமாகியது.

எனக்கு நண்பனைப் பற்றியோ அல்லது என் நண்பனுக்கு என்னைப் பற்றியோ எதுவும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. ஏன் உயிரோடு இருக்கிறோமா அல்லது செத்துப்போனோமா என்ற தகவல் கூட தெரிய வாய்ப்பில்லை. இதுவரை வெளியிட்ட கடிதங்கள் எல்லாம் பகுதி 1 என்று எடுத்துக்கொண்டால் மீண்டும் நாங்கள் தொடர்பு கொண்டபோது பரிமாறிக்கொண்டவை எல்லாம் பகுதி 2 எனக் கொள்ளலாம். அடுத்து வெளிவரும் கடிதங்கள் எல்லாம் பகுதி 2 பகுப்பைச் சார்ந்தவை!

ஆனால் தொடர்ந்து வெளியிட முடியுமா தெரியவில்லை. பாரப்போம்.

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்: , , , ,