RSS

Monthly Archives: செப்ரெம்பர் 2009

உலகின் ஆழமான இடம் எது?

விலங்கு, பறவைகளின் உடல்மீது டிசைன்களைப் படைத்த கடவுள், மனித இனத்துக்கு மட்டும் வஞ்சனை செய்தது ஏன்?

உண்மையில் பறவைகளுக்கு வண்ணம், தோகை, கொண்டை, நீண்ட சிறகு (வால்) எல்லாம் இருப்பதற்கு அடிப்படைக் காரணம், செக்ஸ்!

ஆண் பறவைக்கும் பெண்ணுக்கும் இடையே கவர்ச்சி ஏற்படுத்துவதற்காக இயற்கை தந்த உபகரணங்கள் அவை. பாலூட்டிகள் (MAMMALS) தோன்றிய உடனேயே வண்ணங்கள் குறைந்துவிட்டன. செக்ஸ் கவர்ச்சியில் வாசனைகள் முக்கியத்துவம் பெற்றன. மனிதர்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற கவர்ச்சி முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது. தோலின் வண்ணங்கள் சிவப்பு, மாநிறம், கறுப்பு எனச் சுருங்கிவிட்டன. இதுவும் கூட ஒவ்வொரு நாட்டின் க்ளைமேட்டைப் பொறுத்ததுதான்.

அரசர்கள் பல மனைவிகளை மணந்தது போல் (அ) சின்ன வீடாக வைத்துக் கொண்டது போல், ராணிகள் யாரும் வைத்துக்கொண்டது இல்லையா?

பல அரசர்கள் மாதக்கணக்கில் யுத்தத்துக்கு போய்விட்டால், ராணிகள் பாவம்… என்ன செய்வார்கள்? பொதுவாக, ராணிகள் அந்தப்புறம் வைத்துக்கொண்டதில்லை. அவர்களுடைய காதலர்கள் எல்லோரும் நெருக்கமாக, அரசுப் பதவிகளில் இருப்பார்கள். ரஷ்ய மகாராணி காதரீனுக்கு இப்படியாக நூற்றுக்கணக்கான காதலர்கள் ‘ஊழியம்’ செய்தார்கள். நவம்பர் 1796-ல் மகாராணி இறந்தபோது, அவருக்கு வயது 67. அந்த வயதில் கூட குதிரைப்படை தளபதி (வயது 22) ஸூபோவ் என்பவர் ஒவ்வொரு இரவுக்கும் படுக்கைக்குப் போயாக வேண்டும். கடைசியில் ஒரு மாறுதலுக்காக அந்த தளபதியின் குதிரை மீதும் ராணிக்கு காதல் வந்து… மாரடைப்பில் இறந்ததாக ஒரு தகவல் உண்டு.

30.01 2008 ஆனந்த விகடனில் மதன் கேள்வி-பதிலிலிருந்து.

உலகின் ஆழமான இடம் எது? பெண்ணின் மனசுதானே?

வடபசிபிக் கடல் பகுதியில் ‘குவாம்’ அருகே உள்ள ‘சாலஞ்சர் டீப்’ என்கிற 10,912 மீட்டர் ஆழமுள்ள இடம்தான்(ABYSS).  விஞ்ஞான ஆச்சர்யம் என்னவெனில் செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிற அளவுகூட கடலின் ஆழ் உலகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே.

சல்ஃபர் சாப்பிடும் பாக்டீரியா முதல் கடல் முழுக்க தகதகவென்று பிரகாசிக்கும் எலக்ட்ரிக் மீன்வரை அங்கே ஏராளமான புதிர்கள். ப்ரூஸ் ராபின்சன் என்கிற விஞ்ஞானி ‘நான் கியாரண்டி தருகிறேன், கடலின் ஆழத்துக்குச் சென்று சில விஷயங்களைப் புரிந்து கொண்டால் மனித குலத்தின் பல பிரதான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்’ என்கிறார்.

சாதாரணமாக தொபுக்கடீர் என்று கடலுக்குள் குதித்தால் மூன்று மீட்டர் வரைதான் சுகமாக இருக்கும். அதற்குப் பிறகு காதுக்குள் வலி வரும், நுரையீரல் பேஜார் செய்யும். உடலின் வெப்பம் ஆபத்தாகக் குறைய ஆரம்பிக்கும். தண்ணீரின் பிரஷர் அதிகமாகி மூச்சு விடத்திணறி… இதையெல்லாம் சமாளிக்க ‘டீப் ஃபிளைட்’ போன்ற கில்லாடி நீர்மூழ்கிகளை வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் ‘பொம்பளை மனசு ஆழம்’ என்று பாட்டெழுதிக் கொண்டிருக்கிறோம்.

குமுதம் ‘அரசு பதிலிலிருந்து…

 
6 பின்னூட்டங்கள்

Posted by மேல் செப்ரெம்பர் 2, 2009 in கேள்வி-பதில்

 

குறிச்சொற்கள்: