RSS

Tag Archives: ஆரோக்கியம்

விருத்தசேதனம் – சுன்னத்

சுன்னத்

(அறுவைச்சிகிச்சையும் அறிவியல் உண்மைகளும்)

சுன்னத் அல்லது விருத்தசேதனம் எனப்படுகின்ற அறுவைச்சிகிச்சை ஆண்களுக்கு, பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை செய்யப்படுகின்ற மருத்துவ முறையாகும், இந்த வழக்கத்தை உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற இஸ்லாமிய பெருமக்களும் கிருஸ்தவர்களும் மற்றும் யூதர்களும் மத ரீதியாக ஒப்புக்கொண்டு இந்த நடைமுறையை வாழ்வியல் அங்கமாக கடைபிடித்து வருகின்றார்கள்.

சுன்னத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்குறியின் நுனித்தோலை குறிப்பிட்ட அளவு அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கி வருகின்ற முறை சுன்னத் எனப்படும். அறிவியல் ரீதியாக அதனால் ஏற்படுகின்ற சாதகம் பற்றி மருத்துவர்கள் மத்தியில் உலகளவில் பல கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

imagesCALSS0V9

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

1.  சிறுவயதுமுதல் பிறவியிலேயே ஆண்குழந்தைகளுக்கு ஆண்குறியில் ஏற்படுகின்ற பல விதமான நோய்களுக்கு சுன்னத் செய்து கொள்வதே பரிகாரம். ஆண்குறியின் நுனித்தோல் வீங்கிக் கொள்வது, மூடிக்கொள்வது, (Phiஅழளளை) சிறுநீரில் கிருமித்தொற்று போன்ற பல வியாதிகளுக்கு இது விடுதலை தருகின்றது.

2.  வயதான காலத்தில் இன்று சர்க்கரை வியாதி உலகமக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்குறியில் (குரபெரள) பங்கஸ் எனப்படுகின்ற பூஞ்சைக்காளான் வியாதிகளால் ஏற்ப்படும் பாதிப்புகள் சுன்னத் செய்வதால் ஏற்படாது.

3.  திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு முதலிரவில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கு முக்கியமாக ரத்தக்கசிவு, நுனித்தோல் சுருண்டுகொள்ளுதல் (Pயசய Phiஅழளளை) உடலுறவில் ஏயற்படுகின்ற வலிகள் சுன்னத் செய்து கொள்வதால் நிவாரணம் கிடைக்கின்றது.

சமீப காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்நிய மக்கள் தொகையில் சுமார் ஒன்பதரைலட்சம் பேருக்கு வைரஸ் கிருமிகளால் புற்று நோய் ஏற்படுகிறது. முக்கியமாக பெண்களுக்கு கற்பப்பைவாயில் ஏற்படுகின்ற அந்த புற்றுநோய் ர்ருஆயுN PயுPஐடுடுழுஆயு ஏஐசுருளு (ர்Pஏ) என்ற வைரஸ்கிருமி தாக்குதலால் பெண்களின் கற்பப்பைவாய் கிருமி புற்றுநோய் ஏற்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த கிருமி தாக்குதல்; சுன்னத் செய்துகொண்ட ஆண்களின் மனைவிகளுக்கு 28மூ நோய் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை குறைப்பதாகக் ஆராய்ச்சிக் குறிப்புகள் கூறுகின்றன. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகின்றது. ஆண்குயிறியின் தோல்கள் வெட்டப்படாமல் (சுன்னத் செய்யப்படாமல்) இருக்கும் பட்சத்தில் தோலுக்கடியில் இருந்து ர் P ஏ வைரஸ்கிருமிகள் தங்கி வளர்வதற்கும்; பெண்களுக்கு அந்த நோயை பரப்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

உதாரணமாக : வீட்டைச்சுற்றி கழிவு நீர் தேங்கினால் கொசுக்கள் வளர்வதற்கும் அதன்மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் எவ்வாறு மனிதனை தாக்குகின்றதோ அதைப்போன்று சுன்னத் செய்யப்படாத ஆண்களின் இனவிருத்தி உறுப்புகள் பல்வேறு பால்வினை நோய்களுக்கும்; புற்றுநோய் உண்டாக்கக் கூடிய வைரஸ் கிருமிகளுக்கும் வளர்ச்சியடையக் கூடிய கழிவுநீர் கிடங்காக அமைந்துவிடுகின்றது.

ஆண்களுக்கு சுன்னத் செய்து கொண்டால் செக்ஸ் உணர்வு குறையுமா என்ற பயமிருக்கின்றது. ஆனால் மருந்துவ ஆராய்சிகளின்படி அத்தகைய பக்க விளைவுகள் எதுவும் இதனால் ஏற்படாது. சுன்னத் செய்து கொள்வதால் நல்ல குடும்ப உறவும், பால்வினை நோய் இல்லாத வாழ்க்கையும், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று ஆனந்தமாக வாழமுடிகிறது. குறிப்பாக எச்.ஐ.வி, எயிட்ஸ் போன்ற  நோய்களிலிருந்தும் பயமின்றி வாழமுடிகின்றது.

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் தருகின்ற உண்மை இது. 8.01.2012 ஃ 16.03.2012 டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் 29.03.2012 இந்து பத்திரிக்கையில் சென்னை பதிப்பில் தரப்பட்டள்ள புள்ளி விவரம் கூறுகின்ற உண்மை இது.

இஸ்லாமிய மக்கள் வாழ்க்கையில் புற்றுநோய் வாய்ப்பு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தகவல்.  ஜம்மு-காஷ்மீரில் 75மூ முஸ்லிம்களும் மற்றும் அஸ்ஸாமில் 40மூ முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அங்கு வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு கற்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்து கொள்வதுதான், சுன்னத் செய்து கொள்வதால் புற்றுநோயை உண்டாக்கின்ற ர்Pஏ வைரஸ் கிருமி உடலுறவு மூலம் பரவுவது தடுக்கப்படுகின்றது என்ற ஆனித்தரமான உண்மையை வெளியிட்டுள்ளார்கள். சுன்னத் செய்துகொள்வதால் ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் (Pசழளவயவந ஊயnஉநச) ஏற்படுவதும் குறைகின்றது என்று மருத்துவ விஞ்ஞான ஆராய்சிகள் கூறுகின்றன.

இத்தகைய மருத்துவக் குறிப்புகள் உலகம் முழுவதும் மக்கள் மத்தியிலே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு தனது ஆரோக்கியத்திலும்; தனது மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டுள்ள ஆர்வமிக்க இளைஞர் சமுதாயம் தனது ஆண்குறியில் சுன்னத் செய்கின்ற முறையை தானே முன்வந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. ஆண்களுக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கின்றது. எந்த ஒரு முறையும் மதத்திற்கு அப்பாற்பட்டு; மருத்துவ அறிவியல் சிந்தனையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுன்னத் என்கிற முறை உலகமக்களின் ஆரோக்கிய வழிகாட்டிக் குறிப்பில் உயர்ந்த இடத்தைப்பெற இருக்கின்றது என்பது மட்டும் மகிழ்ச்சியான உண்மை. உண்மையை யார் சொன்னாலும் ஆரோக்கியத்தை யார் சென்னாலும்; உலகமக்கள் ஆதரிப்பார்கள் என்பதை தங்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

இந்த பதிவு சுவானா என்பவர் பின்னூட்டமாக பதிவிட்டது.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 8, 2013 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி!

கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி! கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான செக்ஸ் வாழ்க்கை அவர்களுக்கு அதிக மன மகிழ்ச்சியை கொடுப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்து ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி, இதய ஆரோக்கியம், உடல் நோயால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஆற்றல், புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் சக்தி போன்றவை கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை மூலம் கிடைக்கிறது.

தலைவலி, முதுகுவலி, மனஅழுத்தம் போன்றவைகளைக் கட்டுப்படுத்துவதிலும் செக்ஸின் பங்களிப்பு இருக்கிறது. மனிதர்களிடம் கோபம், அதிக பயம், குற்ற உணர்வு, சோகம் போன்ற எதிர்மறையான உணர்வுகள் தோன்றும்போது அவர்களுடைய உடலில் அட்ரனாலின் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது மனித உடலை மிக மோசமாக பாதிக்கும். குறிப்பாக இது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை அதிகமாக தாக்கும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக செக்ஸ் உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் அள்ளி வழங்குகிறது. இது மன நெருக்கடி ஏற்படாமல் மனதைக் காப்பாற்றி அட்ரனாலின் உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. அப்போது உடலில் இயற்கையாகவே இருக்கும் வலி நிவாரணியான என்டோர்பின் அதிகமாக உற்பத்தியாகி உடலுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கிறது.

-டாக்டர். ஆஷாதினேஷ்.

 

குறிச்சொற்கள்: , , ,