RSS

Tag Archives: கேள்வி-பதில்

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து என்ன?

ரொம்ப தப்பான கருத்து! மனித இனம் உருவானவுடன், மற்ற மிருகங்களுக்கு இருப்பது போல ஒரு அடிப்படையான மூளையும் உருவானது. இப்போதும் நமக்கு அது உண்டு! அதற்கு லிம்பிக் (LIMBIC) சிஸ்டம் என்று பெயர். அதன் மையத்தில் உள்ள ‘அமிக்டலா (AMYGDALA) பகுதியில்தான் மகிழ்ச்சி, கோபம், பயம் மற்றும் இனவிருத்திக்கு மிக முக்கியமான காமம் போன்ற உணர்சிகள் உருவாகின்றன. அதற்குப் பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு மூளை பரிணாம வளர்ச்சி அடைந்தது.

அதன் மேற்பகுதியில் புதிதாக ‘நியோ கார்ட்டெக்ஸ் (NEO CORTEX) சிஸ்டம் சேர்ந்து கொண்டது. நினைவு கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், திட்டம் போடுதல் மற்றும் அன்பு, ஆதரவு, காதல்… எல்லாம் தோன்றியது இந்தப்புதிய பகுதியில்தான். பாம்பு, சிலந்திக்கெல்லாம்’நியோ கார்ட்டெக்ஸ்’ பகுதி கிடையாது. ஆகவேதான் சில பெண் சிலந்திகள் தன்னைப் புணர்ந்தவுடன் ஆணை விழுங்கிவிடுகிறது.

அம்மா, அப்பா பாம்புகள் தன் குட்டிகளை ‘ஸ்வாஹா’ பண்ணிவிடுகின்றன. மனிதனுக்கு ஸ்பெஷலாக நியோ கார்ட்டெக்ஸ் பகுதி இருப்பதால்தான் அவன் தன் காதலியை ஆதரவாக அணைத்துக் கொண்டு, அன்போடு அவள் காதுமடல்களை மூக்கால் வருடுகிறான். திருமணமான பிறகும் அவளை பத்திரமாக பாதுகாக்கிறான். புடவைக்கடையில் ஒரு யோகியைப்போலக் காத்திருக்கிறான். குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுகிறான்.

பூச்சிகளிடையே காதல் உண்டா?

காதல் உண்டா என்று தெரியாது! ஆனால் என்று ‘குழந்தை’ பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று அசாத்திய ஆர்வம் உண்டு. சிலவகை (ஆண்) சிலந்திப்பூச்சிகளும் PRAYING MANTIS எனப்படும் வெட்டுக்கிளிப் பூச்சிகளும் உடலுறவுக்காக உயிர்த்தியாகமே செய்கின்றன. ஆணைவிட பெண் சிலந்தியின் சைஸ் ரொம்ப பெரிது.

பெண்ணின் வயிற்றுப் பகுதியில் ஆண் நைசாக நுழைந்து உடலுறவு கொண்டு… முடிந்தவுடன் கணவனை மனைவி சாப்பிட்டுவிடுகிறது. இதேபோல பெண் வெட்டுக்கிளியும் உடலுறவு முடிந்த கையோடு, சற்றே கிறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆணைக் கவ்விப் பிடித்து இழுத்து அதன் தலையைப் பிய்த்து ‘ஸ்வாஹா’!

உடலுறவுக்குப் பிறகு மனிதர்கள் ரிலாக்ஸ்டாக பிரிட்டானியா பிஸ்கட் சுவைப்பது வேறு விஷயம். இப்படிப் பூச்சிகளில் கணவனையே விழுங்கும் விபரீத விருந்து ஏன்? ஆண் வெட்டுக்கிளியின் தலை பிய்த்தெடுக்கப்பட்ட பிறகு மூளையிலிருந்து ’ரிலாக்ஸ்’ என்ற ஆணை வராததால் நரம்புகள் இறுகியவாறே இருக்க, வெகு நேரம் புணர்ச்சியில் இருக்க முடிகிறதாம். தவிர ‘உணவு’ சாப்பிடுகிற திருப்தியில் பெண் மேலும் தன்னை நிம்மதியாகத் தளர்த்திக்கொள்கிறதாம்.

இதனால் அதிகபட்சம் உள்ளே விந்து செலுத்தப்படுவதும் அதனால் நிறைய முட்டைகள் பொறிக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆணின் அடிப்படை உணர்வு ஒன்றுமட்டும்தான் – அதாவது, தன் மனைவிக்கு, தன்னுடைய ’ஜீன்’களால் உருவாக்கப்பட்ட ‘குழந்தைகள்’ பிறக்க வேண்டும்! உடலுறவை அவசரமாக முடித்துவிட்டுப் போய்விட்டால் இன்னோரு ஆண் வந்து பெண்ணுடன் தொடர்பு கொள்ளக்கூடும்! ஆகவே, தன்னுடைய ‘தந்தை’ ஸ்தானத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள உயிர்த்தியாகமே செய்கிறது.

ஆணுக்கு அதுவே முதலும் கடைசியுமான உடலுறவு. அதனால் என்ன? தன் குழந்தைகளுக்குத் தன் ‘ஜீன்’கள் போய் சேர்ந்துவிட்டன. அது போதும்!

எலிசபெத் டெய்லரின் ஏழாவது விவகாரத்தைப்பற்றி?


மற்ற நடிகைகள் மாதிரியானவள் அல்ல நான். யாருடன் படுத்துக்கொண்டாலும் அவரை நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததில்லையாக்கும்!’ என்று அவரே ஒருமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்!

-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 16, 2010 in கேள்வி-பதில்

 

குறிச்சொற்கள்:

ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்?

உயிரினங்களில், ‘பணியை’ முடிக்க வெகு நேரம் எடுத்துக்கொள்வது எது? வெகு சீக்கிரம் முடிப்பது எது?-நான் குறிப்பிடுவது உடலுறவு விஷயத்தில்!


ஆறிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை விலகாமல், மெய்மறந்து பிணைய்ந்திருப்பது சர்வசாதாரணம் – நான் குறிப்பிடுவது ஜோடிப்பாம்புகளை. இரண்டிலிருந்து மூன்று விநாடிகளில் முடித்துக் கொள்வதுதான் வழக்கம் –நான் குறிப்பிடுவது மிஸ்டர் அண்ட் மிஸஸ் கொசுவை.

ஆண்களைப்போல் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஏன் பெண்கள் காதல் உணர்ச்சிகளை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறார்கள்? ஏன் இந்த கூச்ச உணர்வு?

யார் சொன்னது? உண்மையில், பெண்கள் காதல் என்று இறங்கிவிட்டால் அவர்களுடைய துணிச்சலுக்கு ஆண்கள் ஈடுகொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இதுபற்றியெல்லாம் பல நாடுகளில் ஆராய்ச்சிகள்கூட நடந்தாகிவிட்டன. உதாரணமாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் நிறைய காதல் கடிதங்களைச் சேகரித்துப் பரிசோதனை செய்ததில், ஆண்கள் எழுதிய கடிதங்களில் எல்லாம் எச்சரிக்கை உணர்வு அதிகம் இருந்தது. எதையாவது எழுதி ‘கமிட்’ பண்ணிக்கொண்டுவிடக்கூடாது என்று கவலை தென்பட்டது. எமோஷன் சற்று குறைச்சலாகவே இருந்தது. பெண்கள் விஷயமே வேறு! காதல் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக, உண்மையாக, முழுமையாக அனுபவிக்கிறார்கள். ‘நீ என்னுடையவன்’ என்று முடிவுகட்டிவிட்டால் அதிரடியாக உரிமை எடுத்துக்கொள்வார்கள்! லண்டனிலு வசிக்கும் பில் கோக் என்ற தொழிலதிபருக்கும் அவருக்கு செயலாளராக இருந்த காதரின் என்ற பெண்ண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு இப்போது உறவு முறிந்துவிட்டது. இது சம்மத்தமான ஒரு வழக்கு அங்கே நடந்து வருகிறது. அதில் அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் சாட்சியமாக வந்தபோது காதரீன் எழுதிய கடிதங்களில் இருந்த காதல் ரசமும், தாபமும், வெளிப்படையாக எழுதப்பட்ட சில உணர்வுகளும் கோர்ட்டில் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கின்றன. ‘நீங்கள் சென்ற பிறகும் உங்கள் முத்தங்களை நினைக்கும்போதெல்லாம் பரவச உணர்வுகள் எனக்குள் பரவுகிறது… என் உடலில் ஒவ்வொரு அங்குலமும் உங்கள் தழுவலுக்கு ஏங்கித்துடிக்கிறது. பூத்துக்குலுங்கும் ஈரமான ஆர்க்கிட் மலர்கள் ஒட்டுமொத்தமாக என்னை அரவணைப்பது போன்ற அற்புத உணர்ச்சி’- ஒரு கடிததின் ஆரம்பமே இப்படி!
-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 

குறிச்சொற்கள்: , ,

உலகின் ஆழமான இடம் எது?

விலங்கு, பறவைகளின் உடல்மீது டிசைன்களைப் படைத்த கடவுள், மனித இனத்துக்கு மட்டும் வஞ்சனை செய்தது ஏன்?

உண்மையில் பறவைகளுக்கு வண்ணம், தோகை, கொண்டை, நீண்ட சிறகு (வால்) எல்லாம் இருப்பதற்கு அடிப்படைக் காரணம், செக்ஸ்!

ஆண் பறவைக்கும் பெண்ணுக்கும் இடையே கவர்ச்சி ஏற்படுத்துவதற்காக இயற்கை தந்த உபகரணங்கள் அவை. பாலூட்டிகள் (MAMMALS) தோன்றிய உடனேயே வண்ணங்கள் குறைந்துவிட்டன. செக்ஸ் கவர்ச்சியில் வாசனைகள் முக்கியத்துவம் பெற்றன. மனிதர்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற கவர்ச்சி முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது. தோலின் வண்ணங்கள் சிவப்பு, மாநிறம், கறுப்பு எனச் சுருங்கிவிட்டன. இதுவும் கூட ஒவ்வொரு நாட்டின் க்ளைமேட்டைப் பொறுத்ததுதான்.

அரசர்கள் பல மனைவிகளை மணந்தது போல் (அ) சின்ன வீடாக வைத்துக் கொண்டது போல், ராணிகள் யாரும் வைத்துக்கொண்டது இல்லையா?

பல அரசர்கள் மாதக்கணக்கில் யுத்தத்துக்கு போய்விட்டால், ராணிகள் பாவம்… என்ன செய்வார்கள்? பொதுவாக, ராணிகள் அந்தப்புறம் வைத்துக்கொண்டதில்லை. அவர்களுடைய காதலர்கள் எல்லோரும் நெருக்கமாக, அரசுப் பதவிகளில் இருப்பார்கள். ரஷ்ய மகாராணி காதரீனுக்கு இப்படியாக நூற்றுக்கணக்கான காதலர்கள் ‘ஊழியம்’ செய்தார்கள். நவம்பர் 1796-ல் மகாராணி இறந்தபோது, அவருக்கு வயது 67. அந்த வயதில் கூட குதிரைப்படை தளபதி (வயது 22) ஸூபோவ் என்பவர் ஒவ்வொரு இரவுக்கும் படுக்கைக்குப் போயாக வேண்டும். கடைசியில் ஒரு மாறுதலுக்காக அந்த தளபதியின் குதிரை மீதும் ராணிக்கு காதல் வந்து… மாரடைப்பில் இறந்ததாக ஒரு தகவல் உண்டு.

30.01 2008 ஆனந்த விகடனில் மதன் கேள்வி-பதிலிலிருந்து.

உலகின் ஆழமான இடம் எது? பெண்ணின் மனசுதானே?

வடபசிபிக் கடல் பகுதியில் ‘குவாம்’ அருகே உள்ள ‘சாலஞ்சர் டீப்’ என்கிற 10,912 மீட்டர் ஆழமுள்ள இடம்தான்(ABYSS).  விஞ்ஞான ஆச்சர்யம் என்னவெனில் செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிற அளவுகூட கடலின் ஆழ் உலகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே.

சல்ஃபர் சாப்பிடும் பாக்டீரியா முதல் கடல் முழுக்க தகதகவென்று பிரகாசிக்கும் எலக்ட்ரிக் மீன்வரை அங்கே ஏராளமான புதிர்கள். ப்ரூஸ் ராபின்சன் என்கிற விஞ்ஞானி ‘நான் கியாரண்டி தருகிறேன், கடலின் ஆழத்துக்குச் சென்று சில விஷயங்களைப் புரிந்து கொண்டால் மனித குலத்தின் பல பிரதான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்’ என்கிறார்.

சாதாரணமாக தொபுக்கடீர் என்று கடலுக்குள் குதித்தால் மூன்று மீட்டர் வரைதான் சுகமாக இருக்கும். அதற்குப் பிறகு காதுக்குள் வலி வரும், நுரையீரல் பேஜார் செய்யும். உடலின் வெப்பம் ஆபத்தாகக் குறைய ஆரம்பிக்கும். தண்ணீரின் பிரஷர் அதிகமாகி மூச்சு விடத்திணறி… இதையெல்லாம் சமாளிக்க ‘டீப் ஃபிளைட்’ போன்ற கில்லாடி நீர்மூழ்கிகளை வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் ‘பொம்பளை மனசு ஆழம்’ என்று பாட்டெழுதிக் கொண்டிருக்கிறோம்.

குமுதம் ‘அரசு பதிலிலிருந்து…

 
6 பின்னூட்டங்கள்

Posted by மேல் செப்ரெம்பர் 2, 2009 in கேள்வி-பதில்

 

குறிச்சொற்கள்:

பெண்கள் எந்த மாதிரி ஆண்களுக்கு அதிகம் மயங்குவார்கள்?

உண்மையான காதலில் எத்தனை சதவிகிதம் காமம் கலந்திருக்கலாம்?

காதலும் காமமும் பாலும் டிகாஷனும் போன்றது. அவரவர்களைப்

பொறுத்து பிளாக் காஃபியும் உண்டு! காதலில் காமம் கலந்திருப்பதில் தவறில்லை. கூடவே, எச்சரிக்கையுடன் மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஒரு கலாச்சார அவசியம் – கட்டுப்பாடு. அதுதான் நம்மை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது!

மத வழிபாடுகளுக்கும் செக்ஸூக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. VENERATE என்றால், வணங்கி வழிபடுவது. அதிலிருந்துதான் டிக்ஷ்னரியில் அடுத்த வார்த்தையான VENEREAL வந்தது (காம உணர்வு மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்டது என்று பொருள்.)

மனிதன் என்பவன் ஒரு பாதிதான். அந்த இன்னொரு பாதியைத் தேடித்தேடி அவன் அலைகிறான். ஆகவேதான், காதலன் – காதலி என்கிற அந்த இரண்டு பாதிகளும் இணைந்து முழுமையாகக் கிடந்து துடிக்கின்றன!

செக்ஸ் என்பதும் ஒரு வழிபாடுதான். உழவுத்தொழில் செய்பவர்கள், விளச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வயல்களிலேயே ஜோடி ஜோடியாகக் காதலுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை!) பல நாடுகளில் இருந்தது!

‘செக்ஸ்’ என்பது மட்டும் இல்லையென்றால், பூச்சியிலிருந்து மனிதன் வரை உலகம் இயங்குவது நின்றுபோய் முழுவதும் பாலைவனமாகிவிடும்!

அதே சமயம், காதலர்கள் கடைசி வரை இணைந்து வாழ்ந்து, இனவிருத்தியில் ஈடுபடவேண்டும் என்பதால்தான், திருமணம் என்கிற சடங்கை மனிதனே பொறுப்புணர்வோடு உருவாக்கிக் கொண்டான்.

ஸோ, ‘திருமணம் வரை காதல். அதற்குப் பிறகு கிடைக்கும் போனஸ் – காமம் மற்றும் உடலுறவு’ என்பதே சிறந்தது.

பெண்கள் எந்த மாதிரி ஆண்களுக்கு அதிகம் மயங்குவார்கள்?

ரொம்ப சிம்பிள்! ‘என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் ஏராளமான அன்பு காட்ட வேண்டும். பொறுமை நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். தூய்மையாக இருப்பது (HYGIENE) அவசியம்!’ என்றே எந்தப் புத்திசாலிப் பெண்ணும் விரும்புவாள்.

16.02 2003 ஆனந்த விகடனில் மதன் கேள்வி-பதிலிலிருந்து.

 

குறிச்சொற்கள்: