RSS

Tag Archives: காதல்

முதல் வரி நீ!

 

tumblr_ljx7o9q6Ub1qahzf8o1_400

பட்டிணத்தாரை

படிக்கப்போனேன் !

வழிமறித்து

கலிங்கத்துப் பரணியில்

கடைத் திறப்பைக்

காட்டியவள் நீ!

வேதாந்தியாக

விவரம்

கேட்கப் போனேன்!

வேட்டியை இழுத்து

விறலிவிடு தூதுக்கு

விளக்கம் சொன்னவள் நீ!

தேவாரம் கேட்க

திண்ணைப் பக்கம்

போனேன்!

முந்தானையால்

முகத்தை மூடி

மூன்றாவது பாலை

நுங்கும் நுரையுமாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ!

இன்னும் நான்

எழுதாத புரட்சிக்

கவிதையே!

என் இதய இலக்கியத்தில்

முதல் வரியும் நீ

முதல் எழுத்தும் நீ!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 12, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , ,

சளைக்காத காதல் சடுகுடு!

girl

அறுபது வயது பெண்மணி என்னிடம், செக்ஸில் இன்பம் என்று ஒன்று இருக்கிறதாமே; உச்சகட்டம் என்ற வார்த்தையை அடிக்கடி உறவுகள் சம்பந்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் கேட்டேன்; பெண்களுக்கு உச்சகட்டம் என்று ஒன்று இருக்கிறதா… என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் அவருக்கு பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். எனக்கு ஆச்சர்யம். நீங்கள் உச்சகட்டத்தை அடைந்ததே இல்லையா என்று கேட்டேன். அந்த இன்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுவேன் போலிருக்கிறதே என்று கதறி அழுதார். பின்னர் அவருக்கு பிள்ளைப்பேறு உண்டானது ‘வெளிவிந்து நகர்’வினால் என்று தெரிந்துகொண்டு, அந்த தம்பதிக்கு முழுமையான உறவு குறித்த பயிற்ச்சிகளுக்குப் பிறகு அந்தப் பெண்மணி இப்போது உச்சகட்டத்தை அடைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

செக்ஸ் வாழ்க்கையில் பேரின்பம் தரும் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்பது பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்பாகி இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இது அதிகம் வெளியில் தெரியாத செய்தி.

ஆண் துணையின் செக்ஸ் செயல்பாடுகளையும் பெண்கள் இப்போது வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் செக்ஸில் குறைபாடு கொண்ட ஆண்களை சென்னை நகரப்பெண்கள் உடனடியாக வெறுத்துவிடுவதில்லை. திருமண பந்தத்தை அவர்கள் இன்னும் மதிக்கிறார்கள். சரியான பேச்சுவார்த்தை மற்றும் மருத்துவச் சிகிச்சை மூலம் தனது துணையை குணப்படுத்திட முடியும் என்று அதிகமானோர் நம்புகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் திருப்தியான உறவைத் தராவிட்டால் வெளிப்படையாக சொல்லிவிட்டு வேறு துணையை தேடிக்கொள்ளவும் துணிகிறார்கள்.

செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. படுக்கை அறையில் நடந்ததை ஆண்களைவிட பெண்கள் தெளிவாக விளக்குகிறார்கள். இது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு பெண்களிடம் பஞ்சமில்லை. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் மத்தியில் சகஜமாகி வருகிறது. உறவு வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை தண்டிக்க காவல் நிலையம் ஏறுவதற்கும் பெண்கள் இப்போது தயங்குவது இல்லை.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு திருமண பந்தத்தைத் தாண்டி  தனது துணை வேறொருவரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கருதுகிறார்கள். பெரியார் மண்ணில் பெண்களுக்கு சுதந்திரம் என்று மேடைபோட்டுப் பேசுபவர்கள் கூட பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதை அனுமதிப்பதில்லை. இது மாதிரியான இரட்டை மனநிலை தமியகத்தில் பல விஷயங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. தனது மனைவி நமீதா மாதிரி இருக்கவேண்டும் என்று ஏங்கும் ஆண்கள் நமீதாவை திருமணம் செந்ந முன்வரமாட்டார்கள்.

குடும்ப அமைப்பு, தனது குழந்தைகளின் எதிர்காலம் போன்ற காரணிகளுக்கு அடுத்துதான் தனது செக்ஸ் வாழ்க்கைக்கு தமிழக பெண்கள் இடமளிக்கிறார்கள். தமிழகத்தில் பழமைவாத சமூக கட்டமைப்பிற்கு உட்பட்டு பெண்கள் செக்ஸை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. செக்ஸ் என்னும் இன்பக் கலையை ஆண்கள் இன்னும் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி கடைசிவரை செக்ஸை சளைக்காமல் கொண்டாடவேண்டும் என்று பெண்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை.

-டாக்டர். என் ஷாலினி.

 

குறிச்சொற்கள்: , , ,

பிரிவு – காதலின் ஆறாத துயரம்!

நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டு கவிஞரான ‘பாப்லோ நெருடா’ காதலைக் கொண்டாடியவர். தனது நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சுற்றுக்கோட்டையும் பழைய அரண்மனை ஒன்றும் இருந்த ‘ஜலா நெகரா’ என்ற தீவை விலைக்கு வாங்கினார்.

அந்தத் தீவில், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் காதலர்கள் வந்து சேர்ந்து, ஆடிப்பாடி தங்களுக்கு விருப்பமான கவிதைகளை அந்தக் கோட்டைச் சுவர்களில் எழுதிப் போகலாம் என்று பிரகடனப் படுத்தியிருந்தார்.

அவர் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றுவரை அந்தத் தீவு காதலர்களின் புகலிடமாகவே உள்ளது.

‘நெருடா அரசியல் காரணங்களுக்காகச் சில ஆண்டுகாலம் இத்தாலியில் ஒளிந்து வாழ்ந்தார். அந்த நாட்களில் அவருக்குத் தபால் கொண்டுவரும் தபால்காரன் ஒருவனுக்கும் நெருடாவுக்கும் நட்பு ஏற்பட்டது. தபால்காரன் ஒரு நாள் கவிஞரிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளை அடைவதற்காக ஒரு காதல் கவிதை எழுதித் தரும்படியாகவும் கேட்கிறான்.

‘நான் உனக்குக் காதல் கவிதை எழுதித் தந்தால் அந்தப்பெண் என்னைக் காதலிக்கத் துங்கிவிடுவாள், பரவாயில்லையா?’ என்று சிரிக்க, ‘என்னால் வேறு எப்படி ஒரு பெண்ணின் மனதை அடைய முடியும்?’ என்று கேட்கிறான். சரி, உனக்குக் கவிதை எழுதக் கற்றுத் தருகிறேன், அதைக் கொண்டு நீயே ஒரு காதல் கவிதை எழுதிவிடலாம் என்று கவிதை குறித்த ஆழ்ந்த புரிதலை அவனிடம் ஏற்படுத்துகிறார்.

கவிதையும் காதலும் பிரிக்கவே முடியாதது போலும். கவிதை தெரியாத அல்லது எழுதாத காதலர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன? எல்லாக் காதலர்களும் டயரியில், கல்லூரிப் பாட நோட்டுக்களில் கவிதை எழுதி ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

காதலிக்கச் சந்தர்ப்பம் அற்றுப்போய், அந்த ஆசையை நூற்றுக்கணக்கான கவிதைகாளாக எழுதித் தீர்த்துக்கொள்பவர்கள் என்றும் ஒரு ரகம் இருக்கிறது. காதலிக்காத ஆணோ பெண்ணோ கூட இருக்கக் கூடும். ஆனால் காதல் கவிதையை எழுதாத அல்லது ரசிக்காத ஆணும் பெண்ணும் வாலிப வயதைக் கடந்து வரவே முடியாது என்பது என் எண்ணம்.

வாழ்வின் விசித்திரம், யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. சரித்திரத்தின் கல்லெழுத்துக்களிலிருத்து சம காலத்துக் கதைகள் வரை, காதல் விநோதங்களால்தான் நிரம்பியிருக்கிறது. காதல் கவிஞர்களை உருவாக்குகிறதோ இல்லையோ, சில ஆழ்ந்த நினைவுகளை உருவாக்கி விடுகிறது.

பிரிவு, காதலின் ஆறாத துயரம். அது களிமண்ணைப் போலப் பிசுபிசுப்பும் ஈரமும் கொண்டதாகவே எப்போதும் இருக்கிறது. பிரிந்த காதல் எத்தனையோ இலக்கியங்களின் வித்தாக இருந்திருக்கிறது. ஆன்டன் செகாவின் மூன்று காதல் கதைகளும், வைக்கம் முகமது பஷீரின் இளம்பருவத் தோழியும், தாஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும், என்றும் மறக்க முடியாத காதல் கதைகளாக இருப்பதற்கு, பிரிவுத்துயரும் ஒரு காரணம்தான் இல்லையா?

எஸ். ராமகிருஷ்ணன் – கதாவிலாசத்தில்.

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 10, 2011 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

ஞாபகங்கள் தீமூட்டும்

உன்னைப் பார்த்துட்டு வந்ததுமே, உனக்கொரு லெட்டர் எழுதிடணும்னு பேனாவும் கையுமா உட்கார்ந்துட்டேன். ஆனா எழுதத்தான் தைரியம் வரலே! ‘எதுக்கு தயங்கணும்? மனசில் இருக்கிறதையெல்லாம் மறைக்காம சொல்லிடவேண்டியதுதானேனு’ உள்ளுக்குள்ள ஒரு போராட்டம் நடக்கத்தான் செஞெசுது. ஆனாலும், தோத்துதான் போனேன். முடியலை. எழுத முடியலை.

ஆனா என்னவெல்லாம் எழுத நினைச்சேனோ அதெல்லாம் இன்னமும் மனசு முழுக்க வட்டமடிச்சிக்கிட்டேதான் இருக்கு. எதுக்கு இந்த நினைப்பெல்லாம்னு ஒதுக்க நினைச்சாலும் முடியலே. உனக்கு நினைவிருக்கா ரவி, கோயமுத்தூர் அன்னபூர்ணா ஓட்டல் ஆடிட்டோரியத்திலே, நீ எழுநிய சிறுகதைப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்தப்போதான் நான் முதன்முதலா உன்னைப் பார்த்தேன். பார்த்தப்பவே ‘இவன் யார் மனசிலும் சட்டுனு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்குவான்’னு தோணுச்சு. அதிலும் பரிசு வாங்கிட்டு நீ நிகழ்த்தின நன்றியுரை இருக்கே… சத்தியமா யாராலேயும் மறக்க முடியாது. அப்போ நீ சொன்ன ஒரு விஷயம்…

‘ஒரு நாள் அவசரமா ஆபீஸூக்குப் புறப்பட்டுட்டிருந்தேன், நசநசன்னு மழைத்தூறல்! ‘சடக்கென்று ஒரு பெரிய சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தேன். மினி லாரி ஒண்ணு ஒரு பன்னிக்குட்டியோட இடுப்பில் ஏறி நசுக்கிட்டு ஓடிப்போயிடுச்சு. அந்தப் பன்னிக்குட்டியின் மரண ஓலம் என் இதயத்தை ரெண்டாக் கிழிச்சுது. சாலைக்கு ஓடினேன். உயிருக்குப் போராடிக்கிட்டிருந்த அந்தக்குட்டியைத் தூக்கிட்டேன். இல்லேன்னா, பின்னால வர்ற வேறொரு வாகனம் அதை இன்னும் கூழாக்கிடுமே! ஆனா சாலை ஓரத்துக்கு வர்றதுக்குள்ளே, அந்தக்குட்டி எப்படியோ என் கையிலிருந்து நழுவிடுச்சு. விழுந்த வேகத்துல அது அலறின அலறல், என் உயிரையே உறைய வெச்சிடுச்சு. என்னை மீறி அது எப்படி விழுந்தது? என் கையிலே பலம் இல்லையா?

அது இல்லை காரணம். அடிபட்ட பன்னிக்குட்டி மேல, என் மனசுக்குளே ஒரு பக்கம் இரக்கம் சுரந்தாலும், அது ஆழமானதா இல்லே. ‘ அய்யோ… கேவலப்பிறப்பான பன்னிக்குட்டியைக் கையால தூக்கிட்டோமே’ங்கிற அசூயை உணர்வுதான் அதிகம் இருந்தது. அதனாலதான் அந்தக் குட்டி என் கையிலிருந்து நழுவிடுச்சு. இந்த உண்மையை உணர்ந்த பிறகு நான் பட்ட வேதனை ரொம்ப காலத்துக்கு மாறவே இல்லை..!

உன்னோட இந்தப் பேச்சைக் கேட்டதும், நான் ஒரேயடியா திகைச்சுப் போயிட்டேன். ‘இப்படி ஒரு ஈர மனசா!’னு பிரமிச்சுப் போயிட்டேன். இதுக்கப்புறமும் உன் கிட்ட ஒரு வார்த்தையாவது பேசலைன்னா மூச்சே நின்னுடும் போலிருந்தது எனக்கு. ரொம்பத் தயக்கமா ‘உங்க பேச்சேக் கேட்டேன். இப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்காது. இனிமே உங்க கதைகளை தவறாம படிச்சிடவேன்’னு உன்கிட்ட சொன்னது மட்டுமில்லாம, மறக்காம உன்னோட அட்ரஸையும் கேட்டு வாங்கிக்கிட்டேன்.

அப்புறமென்ன… எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்பெல்லாம் உனக்கு லெட்டர் எழுதறதுதான் எனக்கு வேலையா போச்சு!

முதன்முதலா எனக்கு நீ எழுதின பதில் லெட்டரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. ஆகாயத்தில் பறக்கிற மாதிரி அப்படி ஒரு சந்தோஷம். அதிலே என்னைக் குறிப்பிட்டு நீ எழுதியிருந்த ‘பிரியமுள்ள சிநேகிதிக்கு…’ என்கிற வார்த்தைகளை மட்டுமே ஆயிரம் தடவைக்கு மேல திரும்பத் திரும்ப படிச்சிருப்பேன்.

ரொம்ப வருந்திக் கூப்பிட்ட பிறகு, எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்தே. எங்க ஊரும், எங்க வீடும், அந்தச் சாய்ங்கால நேரமும் உனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. வீட்ல அப்ப யாரும் இல்ல. பேசினோம்… பேசினோம்… அப்படிப் பேசினோம். என் ஆயுசு முழுக்கச் சேர்த்து வெச்சிருந்த பேச்சையெல்லாம் அன்னிக்கு ஒரே நாள்லயே நான் பேசித் தீர்த்துட்ட மாதிரி இருந்துச்சி.

அப்போதான் நான் சொல்லித் தெரியும் உனக்கு, நான் 27 வயசுக்காரி. பி.காம். படிச்சவள். ஒரு ஜவுளிக்கடையில் மாசம் எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவள். இந்தக் குறைஞ்ச சம்பளத்துலதான் நான், என் அம்மா, தம்பி எல்லோரும் காலம் தள்ளிகிட்டிருக்கோம்’கிற விஷயம். எனக்கு இப்படி ஒரு கஷ்டமானு சொல்லிச் சொல்லி மறுகிப் போனே!

என் கல்யாணம் என்னச்சுன்னு நீ கேட்டப்போ, மாரியம்மன் கோயில் பூஜாரி ஒருத்தர், பாகவதர் மாதிரி கிராப் வச்சிக்கிட்டு, கடுக்கன் போட்டுகிட்டு, நெத்தி நிறைய விபூதி, குங்குமத்தோட பெண் கேட்டு வந்தாரு. ‘மாசம் முன்னூறு ரூபா சம்பளம். தட்டுல ஒரு ஐநூறு விழும். விஷேஷ நாள்ல கொஞ்சம் அதிகம் விழலாம். கோயிலுக்குச் சொந்தமான வீடு ஒண்ணு இருக்கு. சந்தோஷமா வச்சிக்குவேன்’னாரு. அம்மாவுக்கு இஷ்டமில்லே. பேண்ட், ஷர்ட் போட்ட மாப்பிள்ளையா பார்ப்போம்னாங்க. அப்புறம் என்னடான்னா, லங்கோடு கட்டின்ன் கூட வரலை’னு சொல்லிவிட்டு, நான் கண்ணில் நீர் ததும்ப சிரிச்சதைப் பார்த்து, நீ திகைச்சுப் போய் உட்கார்ந்திருந்தே.

மறுநாள் அதிகாலையிலேயே, பொள்ளாச்சி போய் சின்னார் வனப்பகுதியிலே உள்ள கோயிலுக்குப் போனோம். பஸ் நெரிசல்ல ஒருத்தரோடோருத்தர் ஒட்டி நசுங்கிக்கிட்டிருந்தாலும் நம்ம பேச்சு மண்ணும் ஓயலே. சுட்டெரிக்கிற வெயில்ல மூணு கிலோ மீட்டர் நடந்து, ஆத்துல குளிச்சு, பயபக்தியா சாமி கும்பிட்டுத் திரும்பியதும், நீ ஊருக்குப் புறப்பட்டுட்டே, எனக்கோ உசிரே போறது மாதிரி இருந்திச்சு.

அதுக்குப் பிறகு நமக்குள்ள நிறைய கடிதப்போக்குவரத்து, ஒருநாள் அம்மா கேட்டா… ‘இப்படி ஒருத்தருக்கொருத்தர் உருகி மாயறீங்களே… ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா என்ன?’னு.

என்னகோ தாங்க முடியாத கோபம் வந்திடுச்சு. ‘அப்படியா பழகறோம் நாங்க? நட்பு மாதிரி உயர்வான விஷயம் உண்டா உலகத்துல? ஏம்மா! உனக்குப் புத்தி இப்படிப்போகுது?’ன்னு கத்தி தீர்த்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, உன்னைத் தேடி வரும்படியான நெருக்கடி ஒண்ணு வந்துடுச்சு எனக்கு. வந்தேன். உன்னைப் பார்த்ததும் ஏனோ வழக்கமா பேசற மாதிரி என்னால பேச முடியலே. இயல்பா சிரிக்க முடியலே.

நீ கூட கேட்ட, ‘என்ன ஆச்சு உனக்கு? சளசளன்னு பேசிட்டிருப்பியே! ஏன் இப்ப எதையோ முழுங்கிட்ட மாதிரி ஊமையா இருக்கே?’னு.

கொஞ்ச நேரம் பொறுத்து, மெதுவா வந்த விஷயத்தைச் சொன்னேன். ‘போன மாசம் திடீர்னு எனக்கு அப்பெண்டிஸைடிஸ் ஆபரேஷன். பத்தாயிரத்துக்கும் மேல செலவு. வீடு வாங்கிறதுக்காக எங்க அக்கா வீட்டுக்காரர் வெச்சிருந்த பணத்தை எடுத்து, அவருக்குந் தெரியாம எனக்குச் செலவு பண்ணிட்டா அக்கா. அதுக்குள்ள எப்படியாவது சமாளிச்சிடலாம்னு நினைச்சா. ஆனா, அடுத்த வாரமே பணம் கொடுத்து பத்திரம் பண்ணிடலாம்னு திடீர்னு சொல்லிட்டாரு அத்தான். விஷயம் தெரிஞ்சா கொலையே விழும். அவ்வளவு கோபக்காரர் எங்க அத்தான். அக்கா வாழாவெட்டியா எங்க வீட்டுக்கு வரவேண்டியதிதான். இந்த நிலைமையிலே எனக்கு வேற வழி தெரியலே…’

அதுக்கு மேல என்னால பேசமுடியலே. நீயும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தே. அப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு வந்தே நீ. ஒரு நூறு ரூபா நோட்டுக்கட்டை என் கையிலே கொடுத்துட்டு, உன் பைக்ல என்னை அழைச்சுட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட்டுட்டு, திரும்பிப் பார்க்காம விருட்டுனு கிளம்பிப் போயிட்டே.

‘பத்திரமா போ!’னு ஒரு வார்த்தையாவது சொல்வேனு நினைச்சேன். இல்லை. ஒரு சின்ன சிரிப்பாவது..? ம்ஹூம்!

என் கையில நீ கொடுத்த நூறு ரூபாய் நோட்டுக்கட்டு, தூக்கக்கூட முடியாத கருங்கல்லா கனத்துச்சு.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். கண்களை மூடிக்கிட்டேன். மூடிய கண்ணுக்குள் கடுக்கன் போட்ட, பாகவதர் கிராப் வெச்ச, நெத்தி நிறைய விபூதி குங்குமம் பூசிய, மேல் சட்டை போடாத கோயில் பூசாரி வந்து நின்னான்.

என்னை அறியாமல் கண்ணீர் சுரந்து வழிஞ்சுது. நான் துடைக்கவே இல்லை!

– உத்தமசோழன்.                                                                                                                     நன்றி; ஆ.வி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 21, 2011 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , ,

அவள் அப்படித்தான்

கிருஷ்ணன் அந்த தனியார் கம்பனியில் சாதாரண பியூனாகத்தான் வேலைக்குச் சேர்ந்தான். அவனது வலது உள்ளங்கையில் தனரேகையுடன் சுக்கிரனும் சேர்ந்து பின்னிக்கொள்ள.. சில வருடங்களில் மேலாளராக உயர்ந்துவிட்டான்.

மிருதுளா அந்த அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிய ஆரம்பித்தவள், இன்றளவிலும் டைப்பிஸ்ட்டாகத்தான் இருக்கிறாள்.

கிருஷ்ணன்- மிருதுளா கல்யாணவிருந்து என்றைக்குத்தான் கொடுப்பார்களோ? என ஆவலுடன் காத்திருந்தனர் சக பணியாளர்கள். அந்த அளவிற்கு இருவரது காதலும் நெருக்கத்தைக் கொடுத்திருந்தது.

வழக்கம் போல கடற்கரையில் சந்தித்துக்கொண்டனர். கிருஷ்ணன் மெல்ல ஆரம்பித்தான், ‘மிருது…. வந்து…… இப்ப கடைசியா இருக்கிற ரீஜினல் மேனேஜர் பதவிக்கு நான் வரனும்னா நீ மனசு வைக்கனும்..’

‘என்னடா கிருஷ் இப்படி சொல்லிட்ட, நான் உனக்காகவே வாழ்ந்துகிட்டு இருக்கேன், ஏன்டா தயங்குற! சொல்லும்மா கிருஷ், நான் என்ன செய்யனும்?’

‘அது ஒன்னுமில்ல மிருது. நம்ம கம்பனி சேர்மேனுக்கு உன்மீது ஒரு கண்ணாம். நான் உன்னைக் காதலிப்பதால்தான் தயங்குகிறாராம். ஒரே ஒரு நாள் மட்டும் உன் கூட…. ஆசைப்படறார்…’

‘அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’’  மிருதுளாவின் கண்களில் சிவப்பேறியிருந்தது.

‘யோசித்துப்பார் மிருது, ஒரு நாள் மட்டும் அவரோட நீ இருந்தேன்னா நம்ம எதிர்காலம் பிரகாசமா இருக்கும்…’

தயங்கித்தயங்கி முடித்தான் கிருஷணன்.

‘சரி, நான் நாளை இரவு நம்ம முதலாளி வீட்ல இருப்பேன்’’ என்றாள் மிருதுளா.

மறுநாள் அலுவலகம் வந்த கிருஷ்ணனிடம் ஒரு கவர் தரப்பட்டது.

அதில் கிருஷ்ணனுடைய பணி நீக்கத்திற்கான உத்தரவு காணப்பட்டது. அதுமட்டுமல்ல; அன்றே மிருதுளா, மேலாளர் பதவியின் இருக்கையை அலங்கரித்தாள், அந்த கம்பனி சேர்மேனின் ஆசை நாயகியாக.

நன்றி – ஆ.வி. .

 

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 22, 2010 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , , ,

காதல் பள்ளிக்கூடங்கள்


காதலை சொல்லித்தர பல ஊடெங்கள் இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. அதனால் கோவில்களில் காதலை கற்றுத்தரும் விதமாக சிலைகளை அமைத்தார்கள். இந்த வகையில், முழுக்க, முழுக்க ஆண்-பெண் உடலுறவு தொடர்பான விஷயங்களை மட்டுமே கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இவற்றத்தான் காதல் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கஜூராஹோ. அந்த சின்ன ஊரின் கோவில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களை சிற்றின்ப கண்கொண்டு பார்ப்பதா அல்லது பேரின்ப உணர்வுடன் பார்ப்பதா என்று விளங்காமல் ஆன்மிகவாதிகளே திகைக்கிறார்கள். அந்த சிற்பங்கள் ஆண், பெண்ணின் பிறந்தமேனி, அங்க அழகுகளை அற்புதமாக சித்தரிக்கின்றன. போதாக்குறைக்கு ஆண்-பெண் உடலுறவுக் காட்சிகளை விதவிதமாக வகைவகையாக விளக்குகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கஜூராஹோவில் சண்டெல்லா என்ற அரச பரம்பரையினர் ஆட்சி நடத்திவந்தனர். அவர்கள் சிற்றின்ப் பிரியர்கள். பெண்ணிடம் இன்பம் காண்பதுதான் பிறவிஎடுத்ததின் பறவிப் பெரும் பயன் என்று கருதியவர்கள். அவர்கள் காலத்தில் கோவில் பணிக்கென ஆயிரக்கணக்கில் தாசிகள் இருந்தனர். ஆலய தாசிகள் கன்றாலே அவர்கள் அரண்மனைக்கும் தாசிகளாகத்தானே இருக்க முடியும். அவர்களுடன் கூடி பல விதங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப விளையாட்டுக்களை நிரந்தரப்படுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சண்டெல்லா வம்ச அரசர்கள் இத்தகைய சிலைகளை அமைத்தனர். இந்த சிற்பங்களைக் காண உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

ஒரிசா மாநிலத்தில் கொனரக் என்ற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் அமைந்திருக்கும் இந்த இடத்தை காதல் பள்ளி என்று குறிப்பிடுகிறார்கள். அந்த சிற்பங்கள் அனைத்துமே ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் காட்சியை விதவிதமாக சித்தரிக்கின்றன.

கொனரக் சிலைகள் ஆபாசம் என்ற நினைவு எழாத வகையில் அற்புதமான கலை வளர்ச்சி மிளிர இந்த சிற்பங்களை அமைத்துள்ளனர். அந்தக்காலத்தில் காதலை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக இந்த இரண்டு இடங்களும் அமைந்திருந்தன.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 17, 2009 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , ,