RSS

Category Archives: என் கடிதங்கள்

என் அந்தரங்கத்தின் கதை

கடிதங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது இந்த தளம். கடிதம் வெளியிடுவதை நிறுத்தி புத்தக வடிவில் கொண்டுவர தீர்மாணித்து,பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பும், மேலட்டையும் தேர்வு செய்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் நிறைகுறைகளைத் தெரிவிக்கலாம்.

VG 1

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 4, 2015 in என் கடிதங்கள்

 

கடிதங்களின் தொகுப்பு தயார்!

எனது கடிதங்களின் தொகுப்பு தயாராகிவிட்டது. இங்கே பதிவிடப்படாத பாதிக்கும் மேலான கடிதங்களையும் சேர்த்து சுமார் 180 பக்கங்களில் புத்தகமாக வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறேன். மிக ஆபாசம் என்று நான் கருதியவைகளை வலைத்தளத்தில் பதிவிடும்போது நீக்கிவிட்டேன். ஆனால் புத்தகத்தில் அப்படியே கொடுத்திருக்கிறேன். இது அந்த நேரத்திய எண்ணங்களின் தொகுப்பு மட்டுமே. விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம். மற்றவர்கள் கடந்து போகலாம். அல்லது இந்தப்பக்கமே வராமலிருக்கலாம். வந்து பார்த்து, பின் புத்தகத்தையும் வாங்கிவிட்டு வசை பாடவேண்டாம். புத்தகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிக்கவும்.

 

முதல் வரி நீ!

 

tumblr_ljx7o9q6Ub1qahzf8o1_400

பட்டிணத்தாரை

படிக்கப்போனேன் !

வழிமறித்து

கலிங்கத்துப் பரணியில்

கடைத் திறப்பைக்

காட்டியவள் நீ!

வேதாந்தியாக

விவரம்

கேட்கப் போனேன்!

வேட்டியை இழுத்து

விறலிவிடு தூதுக்கு

விளக்கம் சொன்னவள் நீ!

தேவாரம் கேட்க

திண்ணைப் பக்கம்

போனேன்!

முந்தானையால்

முகத்தை மூடி

மூன்றாவது பாலை

நுங்கும் நுரையுமாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ!

இன்னும் நான்

எழுதாத புரட்சிக்

கவிதையே!

என் இதய இலக்கியத்தில்

முதல் வரியும் நீ

முதல் எழுத்தும் நீ!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 12, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , ,

குடும்ப அமைப்பு தேவையா?

 எழுத்தாளர்_பொன்னீலன்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலாசிரியர் பொன்னீலனிடம் சில கேள்விகள்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவு வளர்ச்சி அடைந்து குடும்ப உறவாக மாறவேண்டும். அல்லாவிட்டால் இதற்கு ஒரு சமூக அர்த்தமில்லாமல் போய்விடும்.

இன்றைய சினிமாக்களிலும், நாவல்களிலிலும் இப்போது பெண்களை எப்படிக் காண்பிப்பதாக நினைக்கிறீர்கள்?

 சிறிது காலத்திற்கு முன்பு ‘விதி’ என்ற படத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காட்டினார்கள்.

சமீபத்தில் ‘மறுபடியும்’ என்ற படத்தில் தன்னை ஏமாற்றிய கணவனுக்கு மனைவி தந்த தண்டனையையும் காட்டினார்கள். இரண்டிலுமே கதாநாயகிகள் வாழாவெட்டியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இது உண்மையில் போலித்தனமானது.

இந்தப் படங்களின் இயக்குனர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற பழமைவாதக் கொள்கைகளால் முடிவுகளை மொட்டையாக விட்டுவிட்டனர். அவர்கள் ஏன் இன்னொரு ஆண் மகனை மணந்திருக்கக் கூடாது?

என்னுடைய புதிய தரிசனங்கள் என்ற நாவலில் பூரணி என்ற பாத்திரம் பாலியல் வன்முறையில் பல கைகள் மாறிய பெண். ஆனாலும் இறுதிவரையில் அவள் தனக்கென ஒரு ஆண் துணை வேண்டுமென்று நினைப்பதாகவே சித்தரித்திருக்கிறேன்.

எழுத்தாளர்கள் பெண்களை வாழாவெட்டியாக சித்தரிக்காமல் அவர்களின் பாலியல் தேவைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

subra

சமீப காலமாக ஆண்களிடமும் பெண்களிடமும் ஓரினச் சேர்க்கை முறை அதிகரித்து வருவதாக கூறப்படுவது பற்றி…

ஓரினச் சேர்க்கை முறை என்பது மிக நீண்ட காலமாக சமூகத்தில் இருக்கிறது. சிலர் மட்டுமே சில நெருக்கடிகளில் இதைத் தொடர்கின்றனர். இதைத் தவறான விஷயம் என்று சொல்ல முடியாது. இது அனுதாபமாக நோக்க வேண்டிய தீர்வே ஒழிய, ஒரு கம்பீரமான தீர்வு இல்லை.

இன்றைய சூழ்நிலையில் குடும்ப அமைப்பு தேவையா?

குடும்ப அமைப்பு என்பது மனித நாகரிகம் மிக நீண்ட காலமாக கண்டுபிடித்த அற்புதமான ஒரு வடிவம். அது கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது இறுகி, ஆதிக்க வடிவமாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறும் பட்சத்தில் அது உடைத்தெறியப்படவேண்டியது. குடும்பமும் ஜனநாயகப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இன்றைய நிலையில் சுதந்திரமான பாலியல் தேவையா?

கண்டிப்பாக தேவையில்லை. ஏனென்றால் செக்ஸ் என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு செல்வம். இதை வீண்டிக்கக் கூடாது. இதையும் ஒரு ஒழுங்குக்கு உட்படுத்தியே பயன்படுத்த வேண்டும்.

 

குறிச்சொற்கள்: , , ,

’வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்

படம்

சின்னகண்ணுக்கும்அவன்மனைவிபொன்னுகண்ணுக்கும்ஒருபார்ட்டிக்குஅழைப்பிதழ்வந்தது. வித்தியாசமானமாறுவேடத்தில்தான்அந்தப்பார்ட்டியில்கலந்துகொள்ளவேண்டும்என்றுகண்டிஷன்போட்டிருந்தார்கள். பார்ட்டிக்குகிளம்பும்தினத்தன்றுபொன்னுகண்ணுக்குதலைவலிமண்டையைப்பிளக்க… ‘நான்வரலைநீங்கபோய்என்ஜாய்பண்ணுங்கஎன்றுஅனுப்பிவைத்தாள். சின்னக்கண்ணுகுடுகுடுப்பைக்காரன்வேஷத்துக்கானமாறுவேஷடிரெஸ்ஸைஎடுத்துக்கொண்டுபுறப்பட்டான்.

அவன்போனகொஞ்சநேரத்தில்பொன்னுகண்ணுவுக்குதலைவலிபோய்விடஇவளும்தான்வாங்கிவைத்தமாறுவேஷடிரெஸ்ஸைமாட்டிக்கொண்டுகிளம்பினாள். அங்கேபோனபோதுகுடுகுடுப்பைடிரஸ்ஸோடுதன்புருஷன்பலபெண்களோடுஜாலியாகஆடிப்பாடுவதும், சான்ஸ்கிடைத்தால்முத்தாகொடுப்பதுவுமாகஇருப்பதைப்பார்த்தாள். அவன்எந்தரேஞ்சுக்குப்போகக்கூடியவன்என்றுஆழம்பார்க்கஇவளும்அருகேபோனாள்.

மாறுவேஷத்தில்இருப்பதுயாரென்றேதெரியாமல்அவனும்இறுக்கிஅணைத்தான். புருஷன்தானேஎன்றதைரியத்தில்இவளும்சும்மாஇருக்கஅவன்இவள்காதில்குனிந்துஏதோகிசுகிசுக்கஇவளும், ‘எந்தஇளவுக்குநம்மபுருஷன்மோசமானவன்என்றுதெரிந்துகொள்ளமுடிவெடுத்துஅவனோடுசேர்ந்துபார்ட்டிபங்களாவிற்குவெளியேஇருட்டுபுல்தரைக்குப்போனாள்.

எல்லாமேஆகிப்போச்சுஅங்கே! அப்பவும்தன்மாறுவேடத்தைக்கலைக்காமல், யாரென்றும்சொல்லாமல்குடுகுடுவெனவீட்டுக்குத்திரும்பிவந்துபொன்னுக்கண்ணு, புருஷன்வந்ததும்அவன்சபலபுத்திக்குசூடுகொடுக்ககோபமாகக்காத்திருந்தாள்.

சின்னக்கண்ணுவந்ததும் ‘’ எப்படிக்கழிஞ்சுதுஇந்தராத்திரி?’’ என்றாள்ஆத்திரத்தைக்காட்டாமல். அவன்சொன்னான், ‘’ சீட்டாட்டம், ரெண்டுபெக்விஸ்கி, வயிறுமுட்டசாப்பாடுஎன்றுஜாலியாகத்தான்போச்சி. ஆனால்எல்லாம்எங்கஆபிஸ்கிளப்பில்! நீஇல்லாமமாறுவேஷபார்ட்டிக்குப்போனாபோரடிக்கும்னுகுடுகுடுப்பைடிரஸ்ஸைஎன்ஃபிரண்டுக்குகொடுத்திட்டேன்!’’

தன்னோடதோழிராஜியம்மாகிட்டேஜாலியம்மாஒருநாள்கவலையாசொன்னாளாம்… ‘’என்னடிவாழ்க்கைஇது? சொந்தவீட்டுக்குள்ளஇருந்துகிட்டேஅவரோடஅரைமணிநேரம்கூடநிம்மதியாகழிக்கமுடியலை!’’

‘’ஏன்குழந்தைதொல்லைபண்ணுதா?’’னுகேட்டாராஜியம்மா.

‘’இல்லையேகுழந்தைபள்ளிக்கூடத்துக்குப்போனபிறகும்கூடஎங்கரெண்டுபேராலயுமேசந்தோஷமாஇருக்கமுடியலை’’ன்னாஜாலியம்மா.

ராஜிக்குஒரேகுழப்பமாபோச்சு. ‘இருந்தாலும்எனக்குத்தெரிஞ்சசைக்காலஜியைச்சொல்றேன்.. அந்தமாதிரிசமயத்துலஉன்கணவரோடமுகத்தநேருக்குநேர்பார்த்ததுண்டா?’’ என்றாள்.

ஜாலியும்அசராம, ‘ஒரேஒருதடவைதான்பார்த்தேன்அதுவும்வீட்டுஜன்னலுக்குவெளியேநின்னுஎங்களையேவெறிச்சிபார்த்துக்கிட்டிருந்தாரு. அப்போஅவர்மூஞ்சிஎவ்ளோஆக்ரோஷமாஇருத்துச்சுதெரியுமா? அப்புறம்எப்படிநாங்கசந்தோஷமா…?

இந்தக்கதைகள்எதிலேவந்ததுதெரியுமா? ‘’வயாகராதாத்தாசொன்னவிபரீதக்கதைகள்!’’ அப்படிங்கிறதலைப்பில்ஆனந்தவிகடனில்! வருஷம்வேணுமா 04.02.2009 இதழில்.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் மார்ச் 14, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: ,

உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா?

vg
பெண்ணுக்குத்தான் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால் முதன்முதலில் தோன்றிய ‘செல்’கூட பெண்தான்! ஒரு செல் இரண்டாகப் பிரிந்தது ஒரு விதத்தில் பிரசவம்தான். க்ளோன்ஸ்! குரங்கு இனத்திலிருந்து பிரிந்து முதலில் உருவான மனிதனும் பெண்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லியாகிவிட்டது.

பெண்களின் மார்பகங்களும், தொப்புளும் தாய்மை சார்ந்த உறுப்புகள். அவற்றை கவர்ச்சிக்க்காகவும் விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்துவது தவறுதானே?
பெண்களின் மார்பகங்கள் ‘கவர்ந்திழுக்கும் சக்தி’யைப் பெற்றது எப்படி என்கிற விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எல்லா பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் (நிப்பிள்ஸ்) உண்டு. ஆனால் வளர்ச்சி பெற்ற மார்பகங்கள் மனித இனத்தில் மட்டுமே அமைந்திருக்கின்றன. (பால் சுரக்கும் அளவுக்கும் மார்பக சைசுக்கும் சம்பந்தமே கிடையாது!)
ஆரம்பத்தில், மனிதன் மற்ற பாலூட்டிகளைப் போல பின்னால் நின்று உடலுறவு கொண்டபோது, பெண்ணின் ‘பின்புறம்’ அவனுடைய உணர்வுகளை மேலும் கிளர்ச்சியடையச் செய்தது. பிற்காலத்தில் முகம் பார்த்துப் புணரும் பழக்கம் வந்த பிறகு ஆண் அதை ‘மிஸ்’ பண்ணினான்.
அவனுடைய அந்தக் குறையை ‘விஷூவலாக’ நிவர்த்தி செய்தது (replacement) மார்பகங்களே! ஆகவே, மனித இனத்தில் மட்டும் ‘தாய்மையோடு ‘கவர்ச்சி’யையும் பெண்ணின் மார்பகங்கள் பெற்றுவிட்டன.
முப்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கப் பெண்கள் (feminists) ‘பிரா’க்களை நடுவீதியில் கொட்டி எரித்துப் போராட்டம் நடத்தினார்கள் (freedom). அது பழங்கதை. இப்போது ‘பிரா’ விஸ்வரூபமெடுத்துவிட்ட(!) கோடானுகோடி ரூபாய் பிஸினஸ்! ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மூடுக்கும்கூட பிராக்கள் இப்போது தயாரிக்கப்படுகின்றன.
சான்ஸே இல்லை… மனித இனம் இருக்கும் வர மார்பக ‘அப்ஸெஷன்’ இருக்கத்தான் செய்யும்.
உலகில் உயிர் என்பது தோன்றி, பிறகு நூறு கோடி ஆண்டுகளுக்கு ஆண் என்பதே கிடையாது! ஒரு (பெண்) செல் இரண்டாகப் பிரியும். அது நாலாகும். நாற்பதாகும். ஆணே இல்லாமல் குழந்தை பெறுவது மாதிரிதான்!
அப்படியே தொடர்ந்திருந்தால், ‘க்ளோன்கள்’தான் தோன்றியிருக்கும். உலகம் முழுவதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் பெண்கள். அத்தனை பேரும் ஐஸ்வர்யா ராய்கள்! அதே சமயம், உலகில் ஆணே கிடையாது. எப்படி இருக்கும்?
பல கோடி வருடங்களுக்குப் முன், திடீரென ‘செல்’லுக்குள் நிகழ்ந்த ஒரு ‘ம்யூட்டேஷன்’ (கிறுக்குத்தனமான மாறுதல்) காரணமாகத் தோன்றியதுதான் Y குரோமோசோம். அதாவது ஆணுக்கான குரோமோசோம்!
X குரோமோசோமும் Y குரோமோசோமும் இணைந்தால் ஆணும் இரண்டு X கோரோமோசோம் இணைந்தால் பெண்ணும் உண்டாகும். ஆக செக்ஸ் அந்த விநாடியே தீர்மாணிக்கப்பட்டு விடுகிறது.
செக்ஸ் என்பது ஆரம்பித்தது அப்போதுதான்! கோடிக்கணக்கில் விதவிதமான அழகிகள் தோன்றக் காரணம் அந்த Y தான்! ஏழு வாரங்கள் வரை கரு ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆனால் உள்ளே மாற்றங்கள் நிகழ்கின்றன. Y குரோமோசோம் ஆணைப்படி ஆணுக்கான டெஸ்டோஸ்டரோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இன்னொரு ஹார்மோன் பெண்ணுக்கான அறிகுறிகளை நிறுத்துகிறது (suppresses).
முலைக்காம்பு (Nipple) வளராமல் அப்படியே நின்றுவிட, க்ளைடோரிஸ் வளர்ந்து ஆணுறுப்பாகிறது (Penis). உள்ளே நிகழும் இந்த வளர்ச்சிகள் தெரிய, ஏழு வாரங்கள் ஆகிவிடும். அந்த Y குரோமோசோம் எப்படி முதன்முதலில் உருவானது. அதுதான் விஞ்ஞானிகளுக்குப் புரியாத அற்புதமான ஆச்சர்யம்!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 23, 2013 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , , , ,

அப்படி என்னதான் எழுதியிருந்தாள்?

பத்மினி, பத்மேஷ் இருவரையும் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள் சாரதா. அவர்கள் வரக்காணோம். ஒவ்வொரு முறையும் மைக்ரோவேவ் அவனில் இருந்து எடுத்த விநாடிகளிலேயே சூடு ஆறிப்போய் விடுவதால், இத்தோடு மூன்று முறை சாம்பாரைத் திரும்பத் திரும்ப சூடு பண்ணிக்கொண்டிருக்கிறாள்.

சாரதாவின் அம்மா வழியில் பாட்டி, பழைய நாட்களில் காலையில் கல் சட்டியில் குழம்பு வைத்து, கரி அடுப்பில் விடியற்காலையில் வைப்பாள். இப்போதெல்லாம் ‘மைக்ரோவேவ்’. மூன்றே நிமிடங்களில் கொதித்து விடுகிறது. ஆனால் அதே மாதிரி வெளியே எடுத்து வைத்த மூன்றே நிமிடங்களில் ஆறிழும் விடுகிறது!

சாரதா யோசித்தபடியே மகளின் மூடியிருந்த அறைக் கதவைப் பார்த்தாள். அவளும், அவளுடைய ஃபியான்ஸே பத்மேஷூம் கடந்த இரண்டு மணி நேரங்களாக அவளுடைய மூடிய அறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது பத்மினியின் குரல்தான் கேட்கிறது.

இப்போதெல்லாம் ‘இன்ஸ்டென்ட் மெஸேஜ்’ செய்யாத ஒரு டீன் ஏஜரைக்காட்டுங்களேன்! ஏன்? பத்மினியையே எடுத்துக்கொள்ளுங்கள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவனையே அப்படித்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு இரவு ஒன்பது மணிக்கு மேல் கம்ப்யூட்டரில் ‘சாட்’ பகுதியில் கண்களை மேய விட்டுக்கோண்டிருந்தாள் பத்மினி. அமெரிக்க வாழ்க்கையில் மற்றவர்கள் வாயில் சுலபமாக நுழைய வேண்டும் என்பதற்காக தன் பெயரை பாட் (PAT)  என்று கூப்பிட வசதியாக சுருக்கியும் வைத்திருக்கிறாள்.

அதே பெயரில் சாட் செய்யும் போதுதான் இன்னொரு பாட் கண்களில் பட்டது. சட்டென்று ஒரு உந்துதலில் தன்னுடைய பெயரையே கொண்டிருக்கும் நபர் என்ற ஒரே காரணத்திற்காக ‘சாட்’ பண்ண ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவன் ஆண்மகள் என்றும் பாட்ரிக் (PATRIC) என்ற பெயரைச் சுருக்கி ‘பாட்’ என்று வைத்துக்கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்தது.

‘உன்னுடைய என்று முழுப்பெயர் என்ன?’ என்று கேட்டபோது ஒரு கணம் தயங்கிவிட்டு ‘பாட்ரிசியா’ என்று எழுதினான். அவனோடு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதும் அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆறு மாதங்களாக முகம் தெரியாமல், தெரிவிக்காமல் அவனோடு பேசிக்கொண்டிருந்தாள்.

அது சரி…. இதுவரை உனக்கு வாழ்க்கையில் யாரிடமாவது காதல் வந்திருக்கிறதா? உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?

அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிறிது தயங்கிவிட்டு ‘காரல் வந்திருக்கிறது, ஆனால் கல்யாணம் ஆகவில்லை. என்னுடைய அம்மாவும் அப்பாவும்தான் பார்த்து எனக்குத் தகுந்தவனாக கல்யாணம் செய்து கொடுக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்…’ இதை டைப் பண்ணிவிட்டு ‘சென்ட்’ பட்டனைத் தொட்டவுடனே கடிதம் அவனுக்குச் சென்றுவிட்ட அந்த நொடியே அவள் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

‘தப்பு செய்துவிட்டேன். என் பெற்றோர் பார்த்து ஜோடி சேர்க்க வேண்டும் என்று படித்தவுடனேயே பாட்ரிக் நான் அமெரிக்கன் இல்லை என்று தெரிந்துகொண்டிருப்பானே!’

அவன் தெரிந்து கொண்டுவிட்டடான். ‘அப்ப நீ அமெரிக்கப் பெண் இல்லையா? இந்தியனா? பாகிஸ்தானியா? என்று உடனே பதில் கேள்வி வந்தது.

அவளுக்கு இப்போது வேறு வழியில்லை. ‘நான் தென்னிந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவள். அவர்களுக்குச் சென்னை என்பது ஊர். அவர்கள் பேசுவது தமிழ் என்ற மொழி. என் பெயர் பத்மினி. ஆனால் நான் இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பெண்…’ என்று தன் பின்னணியைத் தெரிவித்தாள்.

ஏனோ அதற்குப்பிறகு பாட்ரிக்கிடமிருந்து ஒரு வாரத்திற்கு எந்தவித செய்தியும் இல்லை. ஒருவாரம் கழிந்து ஞாயிறு காலையில் ‘ நானும் உன்னை மாதிரி இரண்டாவது தலைமுறை தென் இந்தியன்தான். அம்மா அப்பா வைத்த பெயர் பத்மேஷ். பாட் என்று மாற்றிக்கொண்டது, என்னுடன் வேலை செய்யும் அமெரிக்கர்கள் வாயில் சீக்கிரம் நுழையும் என்ற காரணத்தினால். நான் கலிஃபோர்னியாவில் சாண்டியேகோ என்ற இடத்தில் இருக்கிறேன். நீ எங்கிருந்தாலும் உன்னைஇர நேரில் வந்து சந்திக்க ஆசையாய் இருக்கிறது.’

பத்மினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவளுடைய வீடு இருப்பது லாஸ்ஏஞ்சல்ஸில். நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. காரில் ஒரு மணி நேரத்தில் வந்துவடலாம். எப்போது சந்திக்கலாம் என்று பதில் கடிதம் எழுதினாள்.

‘இரண்டு வாரங்களில். ஞாயிறு அன்று சந்திக்கலாமா?’

‘சாரி, அன்று என் ஸ்நேகிதியின் திருமணத்திற்குப் போகவேண்டும்.’

‘எங்கே? யாருக்குக் கல்யாணம்?’

‘லாங்பீச் என்ற இடத்தில் ரமாடா இன்னில் என் தோழி சங்கரி என்பவளுக்கு. நான் சின்ன வயதிலிருந்தே அவளுடன் பழகியிருக்கிறேன். காலை திருமணத்திலிருந்து ரிஷப்ஷன் வரை நான் அங்கே இருந்தாக வேண்டும்…’

‘ இது டூ மச். நானும் அதற்காகத்தான் எல்.ஏ. வரப்போகிறேன். அதனால் ஒரே கல்லில் இரண்டு பறவைகள் என்றுதான் உன்னைப் பார்க்கலாம் என்றேன். இப்போது நாம் இருவரும் கல்யாணத்திலேயே சந்தித்துக் கொள்வோம். உன்னை நான் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது?

‘ஒன்று செய்யலாம் உண்மையாகவே நம் இருவரிடமும் ‘கெமிஸ்ட்ரி’ இருக்கிறது என்றால் ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்க முடியும். என்ன சொல்கிறாய்?’

‘ஓ.கே. சைன் ஆஃப் பண்ணுவதற்கு முன் ஒரு விஷயம்… எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பை…’

பத்மேஷூம், பத்மினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் சட்டென்று சரித்தும் விட்டார்கள். அம்மாக்கள் இருவரும் புரியாமல் நிற்க ‘மாம்… நான் சொல்லலை? அந்த பாட்ரிக், என்னுடைய சாட்ரூம் ஃப்ரெண்ட், சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஒரு மூலையில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

‘இன்ஸ்டண்ட் மெஸேஜிங்’ மூலம் வந்த ‘இன்ஸ்டண்ட் காதல்’  நாளுக்கு நாள் வளர, திருமணத்துக்கு நாள் குறிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள், அந்த சனிக்கிழமை வரை.

வார இறுதி விடுமுறை. லேசான தூறல் காரணமாக வழ க்கம்போல் டென்னி!ஸ் விளையாடாமல் பத்மேஷ் காலையில் சீக்கிரமாக பதிமினி வீட்டுக்கு வந்துவிட்டான். ஆனாள் அவள் இல்லை. ‘ஆன்டி… நான் பத்மினி வரும்வரைக்கும் அவளுடைய கம்ப்யூட்டரை உபயோகித்துக்கொள்ளலாமா?’ என்று மரியாதைக்காக கேட்டுவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றான்.

ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். பத்மினி இன்னும் வரவில்லை. அவன் சமையலறைக்கு வந்தான். ‘ஆன்டி… உங்களுடன் கொஞ்சம் பெர்சனலாக பேசலாமா?’ என்று கேட்டான். மதிய உணவுக்கு காய்கறி திருத்திக் கொண்டிருந்த சாரதா தலையாட்ட, கொஞ்சம் வருத்தமாகச் சொன்னான்.

‘பத்மினியுடைய கம்ப்யூட்டரில் அவளுடைய ஈ-மெயில் பக்கம் திறந்தே இருந்ததா? அதில் அவளுடைய ஸ்நேகிதிக்கு எழுதின கடிதம் எதேச்சையாக என் கண்ணில் பட்டது. அதில் அவள் எழுதியிருக்கும் விஷயம் என்னைக் கோவப்பட வைக்கிறது…’ என்றான் வேகமான அமெரிக்கனில்.

‘அப்படி என்னதான் எழுதியிருந்தாள் என் பெண்?’

மத்த எல்லா விஷயத்திலும் பொருத்தம் பார்க்கும் பெற்றோர், பெட்ரூமிலும் ஒருத்தருக்கொருத்தர் பொருத்தமா என்று பார்க்க வேண்டாமா? ஒரு ட்ரயல் பார்த்துவிட்டு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது முடியாத காரியம் என்று எழுதியிருக்கிறாள்.

அது மட்டும் இல்லை ஆன்டி… என்றவன் தயங்கியபடியே. நான் எய்ட்ஸ் டெஸ்ட் எடுகணுமாம். இது எனக்குத் தேவையா? இப்போது நான் என்ன செய்வது? என்றான்.

‘அவளுடன் இதைப்பற்றி தெளிவாக நீயே பேசிவிடேன். அதுதான் நல்லது.’ என்று ஆலோசனை கூறினாள். அவனுக்கும் அதுதான் சரி என்று பட்டது. பத்மினி வீட்டுக்குள் வந்த உடனேயே ‘உன்னுடன் கொஞ்சம் தனியே பேச வேண்டுமே!’ என்றான்.

இருவருமாக அவள் அறைக்குச் சென்றார்கள். சில நிமிடங்களில் பத்மேஷ் மட்டும் தனியே வெளியே வந்தான். அவன் முகம் பேய் அறைந்த மாதிரி இருந்தது. ‘ஆன்டி… நான் போயிட்டு வரேன். நைஸ் நோயிங் யூ…’ என்றான். சட்டென்று வெளியேறிவிட்டன்.சாரதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகளின் அறைக்கதவைத் தட்டினாள். என்ன ஆச்சு டார்லிங்? என்ன நடந்தது? என்று சந்தேகமாகக் கேட்டாள். நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

‘அவன் கேட்டதும் கோபப்பட்டதும் தப்பு இல்லை மாம். என்னுடைய அனுமதி இல்லாம என் ஈ-மெயிலைப் படிச்சான் பாரு அதுதான் தப்பு. என்னுடைய ப்ரைவஸியைக் கல்யாணத்துக்கு முன்னாடியே மதிக்காதவன் அப்புறம் எப்படி நடந்துப்பான்? என்னாலே இதை ஏத்துக்கவே முடியாது. அதுதான் போயிட்டுவான்னு அனுப்பிச்சிட்டேன்.’ என்று சொல்லிவிட்டு ‘எனக்குப் பசிக்கிறதும்மா… சுடச்சுட எனக்கு சாம்பார் ரைஸ் வேணும்’ என்றாள் கூலாக.

சாரதா அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு மறுபடி மைக்ரோ அவனில் சாப்பாட்டை சுட வைக்க ஆரம்பித்தாள்.

சிறுகதை; கீதா பென்னட்

 

குறிச்சொற்கள்: , , ,