RSS

முதல் வரி நீ!

12 ஏப்

 

tumblr_ljx7o9q6Ub1qahzf8o1_400

பட்டிணத்தாரை

படிக்கப்போனேன் !

வழிமறித்து

கலிங்கத்துப் பரணியில்

கடைத் திறப்பைக்

காட்டியவள் நீ!

வேதாந்தியாக

விவரம்

கேட்கப் போனேன்!

வேட்டியை இழுத்து

விறலிவிடு தூதுக்கு

விளக்கம் சொன்னவள் நீ!

தேவாரம் கேட்க

திண்ணைப் பக்கம்

போனேன்!

முந்தானையால்

முகத்தை மூடி

மூன்றாவது பாலை

நுங்கும் நுரையுமாய்

அள்ளிக்கொடுத்தவள் நீ!

இன்னும் நான்

எழுதாத புரட்சிக்

கவிதையே!

என் இதய இலக்கியத்தில்

முதல் வரியும் நீ

முதல் எழுத்தும் நீ!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஏப்ரல் 12, 2014 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , ,

One response to “முதல் வரி நீ!

  1. குறிஞ்சி தமிழன்

    ஏப்ரல் 20, 2014 at 11:08 முப

    அக்கா எனக்கு உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்.

    உங்களுடை பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: