RSS

எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!

29 மார்ச்

யாரோ போல் பார்த்த பார்வை …
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம் ;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல் போனில் பேசும் பாவனையில்

மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?

முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க….

நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல…

உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக

அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே…..

இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்…!

– நேசமித்ரன் மித்ரா

 
9 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 29, 2012 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

9 responses to “எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!

  1. puduvaivesenthil

    மார்ச் 29, 2012 at 10:20 முப

    மனம் கணக்கச்செய்த அருமையான கவிதை…

     
  2. Perumal karur

    மார்ச் 31, 2012 at 1:10 பிப

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க தோழி!

     
  3. rajan

    மே 30, 2012 at 1:04 பிப

    super kavithai

     
  4. Perumal karur

    ஜூன் 9, 2012 at 12:56 பிப

    அடிக்கடி எழுதுங்களேன் ப்ளீஸ்!!

     
  5. test

    ஓகஸ்ட் 15, 2012 at 9:44 முப

    எங்கோயோ தொலைந்த தோழி 😦

     
  6. Perumal Karur

    நவம்பர் 13, 2012 at 2:00 பிப

    என்னங்க தோழி ஆளையே மன்னிக்கவும் பதிவையே பார்க்க முடியல… உங்கள் சேவை நாட்டுக்கு தேவை…

    எழுதுங்க அடிக்கடி…

     
  7. ganesamoorthy

    திசெம்பர் 1, 2012 at 7:31 பிப

    இப்போது எழுதவில்லையா?

     
  8. Perumal Karur

    ஜனவரி 6, 2013 at 10:36 முப

    2013 ல இருந்தாவது தொடர்ந்து எழுதுங்க தோழி

     
  9. கங்காதரன் ஜயாத்துரை

    செப்ரெம்பர் 18, 2013 at 4:22 பிப

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ….

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: