RSS

இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு

07 செப்

இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு: எஸ். ராமசாமி

சென்னை: சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நகர்ப்புறங்களில், இளம் வயதிலேயே ஆண்மை குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் பெருகி வருவதால், அவற்றிலிருந்து வெளியேறும், பெட்ரோலிய பொருட்களின் கழிவு, காற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால், ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரான்’ குறைந்து, பெண் ஹார்மோன் “ஈஸ்ட்ரோஜன்’ அதிகரிப்பது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, சென்னை ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் காமராஜ் கூறியதாவது:

அனைவரது உடலிலும் “டெஸ்டோஸ்டிரான்’ மற்றும் “ஈஸ்ட்ரோஜன்’ ஆகிய இரு ஹார்மோன்களும் இருக்கும். ஆண்களுக்கு, “டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோன் அதிகமாக இருப்பதால், அதை ஆண் ஹார்மோன் என அழைக்கிறோம். பெண்களுக்கு, “ஈஸ்ட்ரோஜன்’ அதிகமாக இருப்பதால், அது பெண் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. ஆண்களுக்கு, ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிப்பது ஆண்மை குறைவுக்கு ஒரு காரணம்.சமீபகாலமாக, சென்னை போன்ற நகர்ப்புறப் பகுதிகளில், ஆண்மை குறைவுக்காக சிகிச்சைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், இளம் வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், ஆண்மை குறைவுக்கு காரணம்.

இதுபோல், பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, உணவு தானியங்களில் உள்ள ரசாயனத்தால், ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிக்கும் என்பது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.முறையற்ற உணவு பழக்கத்தால் உடலில், அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பு சத்து, ஆண் ஹார்மோனை குறைத்து, பெண் ஹார்மோன் அதிகரிக்க வழி செய்கிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, ஆண்மை குறைவோடு, மலட்டுதன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலிலுள்ள, கெட்ட கொழுப்பே இதற்கு காரணம்.

ஆண்மைக் குறைவுக்கும், மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆண்மை குறைவுக்கு, ரத்தக் குழாய் பாதிப்பும் ஒரு காரணம் என்பதால், ஆண்மைக் குறைவு ஏற்பட்டால், அதை மாரடைப்புக்கு எச்சரிக்கை மணியாக கருதி, டாக்டரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், மாரடைப்பு வர வழி வகுக்கும். அதேபோல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், பக்கவாத நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, ஆண்மை குறைவு இருந்தால், சிகிச்சை பெறுவதற்கு தயக்கமும் அலட்சியமும் கூடாது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்துக்கள்:

ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம், இந்த குறைகளை போக்க முடியும்.

1. ஆண்மை குறைவுக்கு இன்றைய இளைஞர்களின் தீய பழக்கமும், திருமணத்துக்கு முன்பு அவர்களின் தவறான தொடர்பும் காரணம். மன அழுத்தம் உள்ளவர்கள் யோகா செய்வதால், இதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. மற்றபடி, சிட்டுக்குருவி லேகியம், மாத்திரைகள், வயாக்ரா அயிட்டங்கள் நரம்பு தளர்ச்சியை உண்டு பண்ணி, உள்ளதும் போச்சு லொள்ளகண்ணா என்று ஆகி விடும். எனவே, திருமணம் செய்வதற்கு முன்பு, ஆண்மை குறைவு இல்லை என்று சான்றிதழ் வாங்காமல், யாரும் இவர்களுக்கு பெண் கொடுக்க கூடாது. இப்படி குறைபாடு உள்ளவர்கள், திருமணம் செய்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதை விட்டு விட்டு,சாமியாராகி போவது நல்லது.

2. இளமையில் பலான படங்களை பார்த்து, சக்தியை மட்டும் இழக்காமல் இருந்தால் சாதிக்கலாம். மோடி மஸ்தான் வைத்தியர்களின் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்து, ஆண்மை இல்லாத அன்பர்கள் ஏமாந்து போகாமல் இருக்க பழகி கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்.

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் செப்ரெம்பர் 7, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்:

2 responses to “இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு

 1. ராம கோபால்

  செப்ரெம்பர் 11, 2011 at 7:15 பிப

  அன்புத் தோழிக்கு

  உங்கள் வலைப்பதிவை பார்த்ததும் பெண்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்களா? என்று ஆச்சரியப்பட்டேன் தவறான எண்ணத்தில் அல்ல நல்ல எண்ணத்தில் தான்.

  உங்களின் அனைத்து பதிவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன் விரைவில் அனைத்தையும்(வலைப்பதிவு முழுவதையும்) படித்து விடுவேன்.

  படித்துவிட்டு கருத்தைக் கூறுகிறேன்.

   
 2. உயிர்த்தோழி.

  செப்ரெம்பர் 18, 2011 at 7:48 பிப

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராம கோபால்! முழுவதையும் படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதி அனுப்புங்கள்!

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: