RSS

மனிதனால் மறக்க முடியாத உணர்வு – காதலா? துரோகமா?

29 ஜூன்

பிழைப்பு – சிறுகதை

புரோக்கர் அய்யாதுரை ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை திலகா கைகளில் திணித்தான். அக்கம் பக்கம் உஷாராய் பார்த்துக்கொண்டு, சட்டென ஜாக்கட்டுக்குள் பணத்தை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

‘பார்ட்டி ரெடி பண்ணிட்டேன், நாளைக்கு வந்துடு!’ அய்யாதுரை சுருக்கமாகச் சொன்னான். மற்றதை திலகா அறிவாள்.

‘அண்ணே, ஆளு எந்த ஊரு?

‘யாராயிருந்தா உனக்கென்ன? ரெண்டு மூணு மணி நேரம் இருக்கப்போற. நல்லா மேக்கப் பண்ணிகிட்டு வந்திடு. எல்லாம் முடிஞ்சதும் மீதியை செட்டில் பண்றேன்!’

திலகாவுக்கு 30 வயது. ஆனால் பார்த்தால் அப்படி தெரியாது.ஏதேதோ காரணங்களால் திருமணம் கைகூடாமலே போய்விட்டது. அதற்குப்பழியாக இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அவள் நித்யகல்யாணிதான். திலகா இப்படி சம்பாதிப்பது அம்மாவுக்கும் தெரியும். என்ன செய்ய? வறுமை. வெளியே தெரிஞ்சா கேவலம்தான். ஒரு முறை பத்திரிகையில் போட்டோ கூட வந்தது. நல்லவேளையாக திலகா தலையைக் குனிந்து கொண்டிருந்ததால் அடையாளம் தெரியவில்லை.

அய்யாதுரை அந்த ஆளை காட்டினான். அவன் கிராமத்தான் போல இருந்தான். இருவரையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, தானும் முன் சீட்டில் தொற்றிக்கொண்டான் அய்யதுரை. ஆட்டோ மண்டப வாசலில் நின்றது. கட்சித்தலைவர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு நூறு ஜோடிகளுக்கு இலவசத்திருமணம்.

நூறு உண்மையான ஜோடிகளுக்கு எங்கே போவது? திலகா போன்றவர்களால் தான் அய்யாதுரைக்கு பிழைப்பு ஓடுகிறது.

டீனா.

மனிதனால் மறக்க முடியாத உணர்வு – காதல்தானே!?

அதைவிட துரோகம்! குறிப்பாக கணவனோ மனைவியோ சம்பந்தப்பட்ட துரோகம்! ஜார் மன்னர் பீட்டர், தன் மனைவிக்கு கள்ளக்காதலன் உண்டு என்று தெரிந்தவுடன், அவனை சிரச்சேதம் செய்து, தலையை மட்டும் ஊறுகாய் மாதிரி ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு மாகா,ஆணியின் கட்டிலுக்கு அருகே ஒரு டேபிளில் வைத்தார். தினமும் ‘அதை’ மனைவி பார்க்க வேண்டும் என்று ஆணை!

போலந்தில் 1994-ம் ஆண்டில், போரிஸ் பாவ் ஹாரிக் என்பவருடைய கோட்டுப்பையில் காண்டம் பாக்கட் இருப்பதைப் பார்த்துவிட்டார், அவரின் மனைவி. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, பொறுமையாக ஒவ்வொரு உறைக்குள்ளும் மிளகாய்ப் பொடியை அரைத்துப் பூசி மீண்டும் பாக்கெட்டில் வைத்துவிட, இரண்டு நாள் கழித்து ஜாலி கணவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பதாக மனைவிக்கு ஃபோன் வந்தது.

முத்தமிடும்போது இன்பமடைவது பெண்கள்தான் ஆண்கள் இல்லை என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் அது உண்மையா?

அபத்தம்! முத்தத்தைவிட பொது உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை வைக்கின்ற ஒன்று வேறெதுவும் இல்லை! முத்தம் என்பது காதல் ஜோடியின் ஆன்மாக்கள் சில நிமிடங்கள் இணைந்து குடிபுகுவதற்காகச் சரேலென்று உதடுகளால் கட்டப்படும் ஆர்க்கிடெக்சர்.

நன்றி; ஆ.வி.

நேரமிருந்தால் இந்த வலைப் பதிவிற்கும்தான் போய்ப் பாருங்களேன்.

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்: , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: