RSS

அனைத்தையும்…

11 மே

இன்று எனக்கு நீ யார்?

அதனால்

விளிக்காமலேயே இக்கடிதம்.

கேட்டிருந்தபடியே

அனைத்தையும் அனுப்பியுள்ளேன்.

அச்சம் வேண்டாம்.

விழிகள் தடவித் தடவிக் கிழிந்துபோன

பழைய கடிதங்கள்

காகிதத்தில் தந்த சில கவிதைகள்

மலர்களுக்குள் நீ இருக்கும் புகைப்படும்

பிறந்த நாளில் அளித்த பரிசு

காதலோடு வாழ்த்துச் சொன்ன

புத்தாண்டு அட்டைகள்…

உன் பெயர் பின்னிய

நான் முகம் பார்த்த கைக்குட்டை

ஏதோ ஒரு வேடிக்கையில் உடைந்து

என் கையில் தைத்த கண்ணாடி

வளையல் துண்டு

நேற்று கடிதத்துடன் வந்த

உன் திருமண அழைப்பு…

வீணையின் ஒவ்வொரு நரம்பும்

இறுதி முறை

அதிர்ந்து அறுபட்டுச்சுருள…

அனுப்பியுள்ளேன்.

சரிபார்த்துக் கொள்ளவும்.

ஆயினும்,

எப்படி அனுப்புவேன்

அஞ்சலில் ரத்தத்தை?

– பாரதி புத்திரன்.

 

குறிச்சொற்கள்:

6 responses to “அனைத்தையும்…

  1. Anand raj

    மே 20, 2011 at 6:39 முப

    படித்தாகி விட்டது. கடந்த நாலு நாட்களாக தங்களின் வலை பூ படித்தேன். 2008 oct முதல் இன்று வரையிலான பதிப்புகளை. எல்லாம் அருமை.. தங்களின் expression (தமிழ்ல என்ன சொல்றது..) எழுத்து நடை மூலம் ஒரு பெண் மனதை நினைவை வெளிபடுத்திய விதம் அருமை.
    தொடர்ந்து எழுதுவீர்களா..?
    புது வரவு.

     
  2. உயிர்த்தோழி.

    மே 20, 2011 at 6:14 பிப

    வருகைக்கு நன்றி நண்பரே! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்.

     
  3. SATHISHA

    மே 25, 2011 at 7:59 பிப

    மதிப்புக்குரிய மேடம் ,

    நிறைய எழுதணும் , கொஞ்சம் டைம் கொடுங்க .

    by
    SATHISHA.V
    DAR ES SALAAM – TANZANIA

     
  4. SATHISHA

    மே 25, 2011 at 8:01 பிப

    மதிப்புக்குரிய மேடம் ,

    உங்க வலை பக்கத்தை பத்தி நிறைய எழுதணும் , கொஞ்சம் டைம் கொடுங்க .

     
  5. உயிர்த்தோழி.

    மே 25, 2011 at 8:46 பிப

    வருகைக்கு நன்றி!

    கண்டிப்பா எழுதுங்கள். உங்கள் கருத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

     
  6. உயிர்த்தோழி.

    மே 25, 2011 at 8:47 பிப

    கண்டிப்பா எழுதுங்கள். உங்கள் கருத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: