RSS

பொட்டச்சி

13 ஏப்


தொப்புள் கொடியை அறுத்தபடியே…

‘இதுவும் பொட்டை’ இளக்காரம் தொணிக்க

எனது பிறப்பின் துக்கச் செய்தியை

மருத்துவச்சி கசப்புடன் சொன்னாள்!

பக்கத்தில் இருந்த பாட்டியோ…

முகத்தைத் திருப்பி தோளில் இடித்தாள்!

காம வேட்கையில் கருவைக்கொடுத்த

அப்பன் முகத்திலும் அலட்சியம் தெரிந்தது!

பெற்றவள்கூட எனது பசிக்கு

முலைக்காம்பினை மூடியே மறைத்தாள்!

பொட்டைக் கழுதைக்குப் படிப்பெதற்கு?

பள்ளிக்கூடமும் பகையாய்ப் போனது!

வாசல்கூட்டிக் கோலம் போட்டு

பாத்திரம் தேய்த்து சமைக்கக் கற்று

சமைந்து நின்றேன்.

அப்பாவுக்கு கவலை தொற்றிக் கொண்டது!

எனக்கோ…

கழுத்தை நீட்டியவள் வயிற்றை நிறைத்தால்…

பொட்டச்சி பிறப்பாள்…

இப்போதே பயம் பற்றிக்கொண்டது!

நன்றி: ஆ.வி.

(இன்றைக்கு மட்டும் மறக்காம வாக்களியுங்க!…………இது உங்கள் கடமை.)

 
10 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஏப்ரல் 13, 2011 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: , ,

10 responses to “பொட்டச்சி

  1. கோவை கவி

    ஏப்ரல் 14, 2011 at 12:40 பிப

    வாசிக்க அருவருப்பு உருவாகும் வார்த்தைப் பிரயோகம்..ஏனிப்படி உறவே!…உலகில் கனிகளிருக்க காய்கவர்தல் ஏன? சிலபேருக்கு இப்படி எழுதத்தான் ஆசையோ?..
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள.

     
  2. Lilly

    ஏப்ரல் 14, 2011 at 3:11 பிப

    Wonderful

     
  3. உயிர்த்தோழி.

    ஏப்ரல் 14, 2011 at 6:48 பிப

    வருகைக்கும், ஆலோசனைக்கும், புத்தாண்டு வாழ்த்திற்கும் நன்றி சகோதரி கோவை கவி அவர்களே!
    உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும் சகோதரி.

     
  4. உயிர்த்தோழி.

    ஏப்ரல் 14, 2011 at 6:50 பிப

    வருகைக்கு நன்றி லில்லி.

     
  5. Geththu

    ஏப்ரல் 15, 2011 at 3:03 பிப

    பெண்களின் கண்ணீர் தான் இந்த உலகின் சாபம்

     
  6. உயிர்த்தோழி.

    ஏப்ரல் 15, 2011 at 4:12 பிப

    வருகைக்கு நன்றி Geththu.

     
  7. திண்ணை தூங்கி

    ஏப்ரல் 15, 2011 at 7:51 பிப

    இப்பவெல்லாம் அப்படி இல்லீங்கோ . இங்க அவனவன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம நாயா பேயா அலையறானுங்க.

     
  8. உயிர்த்தோழி.

    ஏப்ரல் 16, 2011 at 9:19 முப

    வருகைக்கு நன்றி நண்பரே!

     
  9. rajesh

    ஏப்ரல் 16, 2011 at 2:24 பிப

    good kavi

     
  10. உயிர்த்தோழி.

    ஏப்ரல் 16, 2011 at 5:25 பிப

    வருகைக்கு நன்றி ராஜேஷ்.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: