RSS

பின் நவீனத்துவ எழுத்து வெறும் போர்னோவா? – சாருநிவேதிதா

27 ஜன

கலைத்துப்போடுதல், ஆபாசம், புரியாமை – சர்ச்சை – தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள் என்ற தலைப்பில் குமுதம்-‘தீராநதி’ அக்டோபர் 2003-ல் சாருநிவேதிதாவின் பேட்டி!

பின்நவீனத்துவ எழுத்து ஒரு ஜந்து மாதிரி தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ நாவல் என்று தங்களுடைய எழுத்துக்களுக்குத் தாங்களே சான்றிதழ் அளித்துக்கொண்டு நாவலை வெளியிடுகிறார்கள். படித்துப் பார்த்தால் எழுத்து என்பதற்கு வேண்டிய அடிப்படையான அம்சத்தையே காணோம். அது என்ன வாசிப்புத்தன்மை? பலருடைய எழுத்து ஏதோ சங்கேத பாஷையாகவும், குழுஉக்குறிகளாகவும் உள்ளன. அந்தக்காலத்து சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச்சுவடிகளையே இவை ஞாபகப்படுத்துகின்றன. பெரும்பாலான பின்நவீனத்துவ நாவல்களின் தோல்விக்கு இதுவே காரணம். இதற்கு உதாரணங்களாக பிரேம் ரமேஷின் நாவல்கள் மற்றும் கோணங்கியின் பாழி போன்றவற்றைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்துக்கு நேர் எதிரான ஒரு தன்மை இங்கே பின் நவீனத்துவத்துவமாக அடையாளம் காணப்பட்டது ஆச்சர்யம்தான். ஆனாலும் முன்னுதாரணங்கள் உள்ளன. உ-ம் புரட்சி.

பின்நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மை- ரொலாந் பார்த் குறிப்பிடும் PLEASURE OF THE NEXT. இங்குள்ள பிரதிகளைப் படிக்கும்போது தகரத்தை சிமென்ட் தரையில் தேய்ப்பதைப் போன்ற நாராச உணர்வே ஏற்படுகிறது. இதற்கு மாறாக உலக இலக்கியத்தில் பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களாக அறியப்படும் உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, ஜெர்ஸி கோஸின்ஸ்கி போன்றவர்களின் எழுத்து ஒரே வாசிப்பில் படித்து முடிக்கக்கூடிய அளவுக்கு சுவாரசியமானவை. எக்கோவின் நாவல்கள் வணிக எழுத்தாளர்களின் விற்பனையையும் மிஞ்சியவை. இதே ரீதியில் ‘நாங்களும் சுவாரசியமாய் எழுதுகிறோம்’ என்று புறப்பட்டசில பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் நாவல்களோ கலைத்தன்மை ஏதுமற்று, தட்டையான மொழியில் உள்ளதால் இவற்றின் ‘எளிமை’ கலையின் பாற்பட்டதாக அல்லாமல், வணிக எழுத்தின் தரத்திலேயே நின்று விடுகிறது. எனவே வணிக எழுத்தாகவும் அல்லாமல், இலக்கியமாகவும் ஆக முடியாமல் காணாமல் போகும் துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரின் உற்பத்தி இதற்கு உதாரணம். இந்த இடத்தில் நாம் வேறு ஒருவரை நினைவு கொள்ள வேண்டும். அவர் வணிக எழுத்தின் அத்தனை கூறுகளையும் எடுத்து அவற்றையே கச்சாப் பொருளாகக் கொண்டு ஒரு புதிய பின்நவீனத்துவத்துவ எழுத்துப்பாணியை உருவாக்கிய டொனால்ட் பார்த்தெல்மே.

பின்நவீனத்துவத்துவத்துக்கு முந்தைய எழுத்தாளர்களான கு.பா.ரா., அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் எழுத்தில் நாம் கண்டுணர்ந்த கலைத்தன்மையும், சுவாரசியமும் பெரும்பான்மையான பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களிடம் இல்லை. காரணம்? தெரியவில்லை. கோட்பாடுகள் தெரிந்த அளவுக்கு இலக்கியம் தெரியவில்லையோ? பின்நவீனத்துவத்துவ எழுத்தின் இந்தக்குறைபாடுகள் இலக்கியத் தயிர்வடைகளுக்கும், பத்தாம்பசலிகளுக்கும் நல்வாய்ப்பாகப் போய்விட்டது. ‘இதுவரை அரைத்துவந்த பழைய மாவையே தொடர்ந்து அரைப்போம்’ என்ற வாதம் வலுத்துப் போனதற்கும், நம்முடைய மண், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய அனுபவம் என்கிற ‘கல்சுரல் சாவனிசம்’ மீட்டுறுவாக்கம் பெற்றதற்கும் இதுவே காரணம்.

இத்தகைய நபர்கள் பின்நவீனத்துவத்துவ எழுத்தின் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு – இது ஆபாசமான எழுத்து. நம்முடைய இலக்கியத்தில் சிருங்கார ரசம் இல்லையா என்று கேட்டால், பின்நவீனத்துவத்துவ எழுத்தில் சிருங்கார ரசம் இல்லை; இது வெறும் போர்னோ என்கிறார்கள். போர்னோகிராஃபி இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. மர்க்கி தெ சாத்-இன் எழுத்து போர்னோதான். ஆனால் அது இலக்கியமாகக் கருதப்படுகிறது. அத்தகைய எழுத்தை இங்கே எழுதுவது பற்றி யோசிப்பது கூட முடியாத காரியம்! ழார் பத்தேல் எழுதிய ‘விழியின் கதை’ நாவலைப்பற்றி சூசன் சொண்டாக் ‘CHAMBER MUSIC OF PORNOGRAPHIC LITERATURE’ என்கிறார்.

போர்னோகிராஃபி இலக்கியம் என்ற ஒருவகை உருவாகி இத்தனை காலம் ஆன பிறகும், ஆபாசம், போர்னோ என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒருவரின் அறியாமையையே குறிக்கும். அது அவர்களின் பிரச்சனையே தவிர பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் பிரச்சனை அல்ல.

அடுத்து ஜெயமோகனின் நாவல்களை பின்நவீனத்துவத்துவ எழுத்து என்று சொல்லும் கோமாளித்தனம்! பின்நவீனத்துவத்துவத்தின் அடிப்படையே மையத்தைத் தகர்ப்பது. இதை ஆண்-பெண் பாலியல் தன்மையை வைத்து விளக்கிச்சொல்லலாம். ஆண்களின் பாலியல் மையத்தைக் கட்டமைப்பது. பெண்களின் பாலியல், எல்லையற்றது. தொடக்கமோ முடிவோ அற்றது. ஜெயமோகனின் எழுத்து முதல் வகையைச் சேர்ந்தது. மிக மூர்க்கமான அதிகாரக்கட்டமைப்பைக் கொண்ட அவரது எழுத்து பின் நவீனத்துவத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அவரை எப்படி இதில் சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை!

 
7 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஜனவரி 27, 2010 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , , ,

7 responses to “பின் நவீனத்துவ எழுத்து வெறும் போர்னோவா? – சாருநிவேதிதா

 1. msures

  பிப்ரவரி 8, 2010 at 12:59 பிப

  hia sekar,
  i hope u r doing gr8… i’m a regular reader of ur pages… one word to praise ur site is “heavenly” fascinating… i admire the thoughts of ur gf… s i strongly agree that women now these days has to come more forward and have to be bold enough to talk wat thy like r not… for the change to happen i believe this site shall be a role model… most of the people thing tht sex is some wat a awful thing to talk r debate especially in TN where we have high crimes in sex scandals across country… we dont have proper awarness for sex r sexual feelings… most of the people must know tht sex is also a feeling same like joy r anger r sorrow… we can laugh when we feel joy r happy, we can get anger or shout when things go wrong, we can cry when we lose the loved one… but we shall not show our sexual feelings when we have urge to have sex… becoz it is a criminal thing… i wonder y people differentiate sex feels apart from the rest… nobody will mind if we get angry or joy or sorrow… but everybody will treat u low like shit when u get sexual feelings r show much interest in sex… i appreciate ur gf’s boldness to bring her thoughts in paper… all r thinking tht a person with much thoughts abt sex will make ruin of his own life… i ask those people tht anger ain’t ruined anybodys life?… sorrow ain’t ruined anybodys life?… sigh… i’m going somewhere from wat i was trying to convey to you…
  pls man, do continue posting ur writings… also i recommend u to watch “In the Realm of Senses” movie (also ask ur gf to watch this movie), its a much-must watch film… a masterpiece… watever ur gf has written are picturised in tht film… i strongly recommend u tht this film is far far stand alone from normal sex films… this film shows the sex in a poetic way… a sensible, lovable, adorable poetic way… i praise a lot to the director of this film who has acheived in showing a new dimension in expressing the feelings of sex… if u r ur gf has watched this film, i like to hear/read comments from ur/gf’s view… pls start posting ur writings… dont stop it. tc…

  note:- if u want “In the Realm of Senses” movie DVD i can send it to you. send me ur address.

   
 2. அக்கனாக்குட்டி

  பிப்ரவரி 9, 2010 at 4:34 பிப

  எழுத்து சூப்பர் ஸ்டார் திரு. சாரு நிவேதிதாவின் பேட்டியை இங்கு படிக்க கொடுத்ததற்கு மிக்க நன்றி தோழி.

   
 3. உயிர்த்தோழி.

  பிப்ரவரி 19, 2010 at 12:47 பிப

  நன்றி, சுரேஸ்
  நன்றி, அக்கனாக்குட்டி!

  இப்போதுதான் இணைய இணைப்பு பெற்றிருக்கிறேன். இனி அனைவருக்குமே பதில் அளிக்க இருக்கிறேன்.

   
 4. உயிர்த்தோழி.

  பிப்ரவரி 21, 2010 at 6:24 பிப

  வெளியிட வேண்டும் என்கிற ஆசையினால்தான் இந்த வலைப்பக்கத்தையே ஆரம்பித்தது. ஆனால் எதிர்ப்புகள் பயங்கரமாக இருக்கிறதே என்ன செய்வது?!

   
 5. அக்கனாக்குட்டி

  பிப்ரவரி 24, 2010 at 6:06 பிப

  தாமதத்திற்கு மன்னிக்கவும் இணையம் பழுதடைந்திருந்தது.
  நீங்கள் இப்பொழுது பின்னூடங்களை மட்டிருத்தித்தானே வருகிறீர்கள்
  அப்புறம் என்ன தயக்கம்? வெளியிடுங்கள்.

  உங்கள் முகஸ்துதிக்காக சொல்லவில்லை அந்த கடிதங்கள் முக்கியமான இலக்கியபதிவு. கெத்து சொன்னதைப்போல சிலவருடங்கள் கழித்துதான் அதன் மதிப்பு தெரிய வரும்

   
 6. Geththu

  பிப்ரவரி 27, 2010 at 12:33 முப

  ஹாய் தோழி,
  எப்டி இருக்கே? அக்கனாக்குட்டிக்கும் வணக்கம்…. பரவாயில்லையே அக்கனாக்குட்டி என்னை நினைவிருக்கா?! தோழிதான் மறந்துட்டாங்க….

  அந்த இலக்கியங்கள் மீண்டும் முழு வேகத்தில் வெளிப்பட வேண்டுகிறேன் தோழி…. சாருவின் பேட்டிக்கு நன்றிகள். உனக்கு வாழ்த்துக்கள் பல….

   
 7. dhandapani

  மார்ச் 14, 2010 at 10:22 முப

  தோழி தயவு செய்து தொடருங்கள் ……..தங்கள் எழுத்தின் வலிமை தங்களுக்கே தெரியாது..

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: