RSS

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’

16 ஜன

‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து என்ன?

ரொம்ப தப்பான கருத்து! மனித இனம் உருவானவுடன், மற்ற மிருகங்களுக்கு இருப்பது போல ஒரு அடிப்படையான மூளையும் உருவானது. இப்போதும் நமக்கு அது உண்டு! அதற்கு லிம்பிக் (LIMBIC) சிஸ்டம் என்று பெயர். அதன் மையத்தில் உள்ள ‘அமிக்டலா (AMYGDALA) பகுதியில்தான் மகிழ்ச்சி, கோபம், பயம் மற்றும் இனவிருத்திக்கு மிக முக்கியமான காமம் போன்ற உணர்சிகள் உருவாகின்றன. அதற்குப் பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு மூளை பரிணாம வளர்ச்சி அடைந்தது.

அதன் மேற்பகுதியில் புதிதாக ‘நியோ கார்ட்டெக்ஸ் (NEO CORTEX) சிஸ்டம் சேர்ந்து கொண்டது. நினைவு கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், திட்டம் போடுதல் மற்றும் அன்பு, ஆதரவு, காதல்… எல்லாம் தோன்றியது இந்தப்புதிய பகுதியில்தான். பாம்பு, சிலந்திக்கெல்லாம்’நியோ கார்ட்டெக்ஸ்’ பகுதி கிடையாது. ஆகவேதான் சில பெண் சிலந்திகள் தன்னைப் புணர்ந்தவுடன் ஆணை விழுங்கிவிடுகிறது.

அம்மா, அப்பா பாம்புகள் தன் குட்டிகளை ‘ஸ்வாஹா’ பண்ணிவிடுகின்றன. மனிதனுக்கு ஸ்பெஷலாக நியோ கார்ட்டெக்ஸ் பகுதி இருப்பதால்தான் அவன் தன் காதலியை ஆதரவாக அணைத்துக் கொண்டு, அன்போடு அவள் காதுமடல்களை மூக்கால் வருடுகிறான். திருமணமான பிறகும் அவளை பத்திரமாக பாதுகாக்கிறான். புடவைக்கடையில் ஒரு யோகியைப்போலக் காத்திருக்கிறான். குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுகிறான்.

பூச்சிகளிடையே காதல் உண்டா?

காதல் உண்டா என்று தெரியாது! ஆனால் என்று ‘குழந்தை’ பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று அசாத்திய ஆர்வம் உண்டு. சிலவகை (ஆண்) சிலந்திப்பூச்சிகளும் PRAYING MANTIS எனப்படும் வெட்டுக்கிளிப் பூச்சிகளும் உடலுறவுக்காக உயிர்த்தியாகமே செய்கின்றன. ஆணைவிட பெண் சிலந்தியின் சைஸ் ரொம்ப பெரிது.

பெண்ணின் வயிற்றுப் பகுதியில் ஆண் நைசாக நுழைந்து உடலுறவு கொண்டு… முடிந்தவுடன் கணவனை மனைவி சாப்பிட்டுவிடுகிறது. இதேபோல பெண் வெட்டுக்கிளியும் உடலுறவு முடிந்த கையோடு, சற்றே கிறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆணைக் கவ்விப் பிடித்து இழுத்து அதன் தலையைப் பிய்த்து ‘ஸ்வாஹா’!

உடலுறவுக்குப் பிறகு மனிதர்கள் ரிலாக்ஸ்டாக பிரிட்டானியா பிஸ்கட் சுவைப்பது வேறு விஷயம். இப்படிப் பூச்சிகளில் கணவனையே விழுங்கும் விபரீத விருந்து ஏன்? ஆண் வெட்டுக்கிளியின் தலை பிய்த்தெடுக்கப்பட்ட பிறகு மூளையிலிருந்து ’ரிலாக்ஸ்’ என்ற ஆணை வராததால் நரம்புகள் இறுகியவாறே இருக்க, வெகு நேரம் புணர்ச்சியில் இருக்க முடிகிறதாம். தவிர ‘உணவு’ சாப்பிடுகிற திருப்தியில் பெண் மேலும் தன்னை நிம்மதியாகத் தளர்த்திக்கொள்கிறதாம்.

இதனால் அதிகபட்சம் உள்ளே விந்து செலுத்தப்படுவதும் அதனால் நிறைய முட்டைகள் பொறிக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆணின் அடிப்படை உணர்வு ஒன்றுமட்டும்தான் – அதாவது, தன் மனைவிக்கு, தன்னுடைய ’ஜீன்’களால் உருவாக்கப்பட்ட ‘குழந்தைகள்’ பிறக்க வேண்டும்! உடலுறவை அவசரமாக முடித்துவிட்டுப் போய்விட்டால் இன்னோரு ஆண் வந்து பெண்ணுடன் தொடர்பு கொள்ளக்கூடும்! ஆகவே, தன்னுடைய ‘தந்தை’ ஸ்தானத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள உயிர்த்தியாகமே செய்கிறது.

ஆணுக்கு அதுவே முதலும் கடைசியுமான உடலுறவு. அதனால் என்ன? தன் குழந்தைகளுக்குத் தன் ‘ஜீன்’கள் போய் சேர்ந்துவிட்டன. அது போதும்!

எலிசபெத் டெய்லரின் ஏழாவது விவகாரத்தைப்பற்றி?


மற்ற நடிகைகள் மாதிரியானவள் அல்ல நான். யாருடன் படுத்துக்கொண்டாலும் அவரை நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததில்லையாக்கும்!’ என்று அவரே ஒருமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்!

-ஆனந்தவிகடன் மதன் கேள்வி-பதிலிலிருந்து…

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 16, 2010 in கேள்வி-பதில்

 

குறிச்சொற்கள்:

One response to “‘காமம்’ என்பதன் கௌரவ வார்த்தைதான் ‘காதல்’

 1. வால்பையன்

  செப்ரெம்பர் 16, 2010 at 8:51 பிப

  இம்மாதிரி நிறைய தகவல்கள் எழுதுங்க, ஆர்வமா இருக்கு படிக்க!

  அப்போ போட்டோ பார்க்க ஆர்வமில்லையான்னு கேட்கக்கூடாது!

  🙂

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: