RSS

‘செக்ஸ்’ – மனிதனும் மிருகமும்

19 டிசம்பர்

‘செக்ஸ்’ என்ற இந்த செயல்பாடு எல்லா உயிரினத்துக்கும் பொதுவானது. ஆனால் மனிதனை மட்டும் இது எத்தனை பாடுபடுத்துகிறது என்பது தினசரி செய்தித்தாள்களைப் பார்த்தால் தெரியும். ஆசைக்கு இனங்காத காதலியைக் கொன்ற காதலன். கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி, சிறுமி கற்பழிப்பு என்று ‘கருவறை’ வரையில் ‘செக்ஸ்’ பரவி எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. மனிதனை அது மிருகமாக்குகிறது.

மிருகங்களும் செக்ஸில் இத்தனை சுகங்களை அனுபவிக்கின்றனவா என்றால்… இல்லை என்பதுதான் பதில். மிருகங்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது வேட்டையாடுதல், உணவருந்துதல், தன் வசிப்பிடத்தைப் பாதுகாத்தல், தன் குட்டிகளைப் பேணுதல் போன்ற ஒரு உந்துதல்தான்.

வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களால் உந்தப்பட்டு எதிர்பாலின விலங்கோடு உறவில் ஈடுபடுவது ஒரு சடங்குபோல் நடைபெறும் விஷயம். மற்றபடி உறவின்போதோ, உறவு முறிந்து பிரியும்போதோ, விலங்குகள் ஒன்றும் பெரிதாக பரவசப்பட்டுக் கொள்வதில்லை.

பரிணாம வளர்ச்சியில் மனிதனின் முன்னோர்கள் எனப்படும் கொரில்லா, சிம்பன்சி, உராங்உயின் போன்ற குரங்கினங்கள் கூட இனச்சேர்க்கையின்போது சாதாரணமாகத்தான் ஈடுபடுகின்றன. ஆக அனைத்து உயிரினங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால்கூட செக்ஸில் அதிக இன்பம் காணும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே! மிருகங்களின் மூளை மிகச்சிறியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. அதை அடக்கியாளும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. எது? எப்போது? எப்படி? தோன்றுகிறதோ அதை! அப்போதே! அப்படியே! செய்துவிடுதல்தான் அதன் சுபாவம். உணர்ச்சிவசப்படும் தன்மை அதிகம்.

மனிதனின் மூளை இதிலிருந்து மிக வித்தியாசமானது. மனித மூளை மிகப்பெரியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சிகளை அடக்கி , கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாடுடன் சிந்தித்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கக்கூடியது. இந்த முடிவுகளெல்லாம் மனிதனின் முன் மூளையிலேயே தோன்றுகின்றன. வேறு எந்த விலங்குகளுக்கும் இத்தனை நுணுக்கமான முன் மூளை கிடையாது. அதனால் அவை உணவு, உஷ்ணம், உடலுறவு, பாதுகாப்பு என்ற நான்கு தேவைகளைத் தீர்த்துக்கொள்ளவே உயிர்வாழ்கின்றன.

மனிதனின் தேவையோ மிக அதிகம். அவனுக்கும் இந்த அடிப்படைத் தேவைகள் அவசியம். என்றாலும்கூட பல உயரிய தேவைகள் அவனை வழி நடத்துகின்றன. நான் யார்? என் இலக்கு என்ன? என் சாதனை என்ன என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்வதில் சுவாரசியம் அதிகம். ஆராய்ச்சி, பரந்தமனது, கலையார்வம், ரசனை, ஞானம் அறிவுப்பசி, ஆத்மதிருப்தி, படைப்புத்திறன் என்று மனிதனின் முன் மூளையை பேரின்ப விஷயங்களே ஆக்ரமித்திருக்கின்றன. அதனால் சிற்றின்ப சங்கதிகளை மூடி மறைத்து கட்டுப்படுத்திக் கொள்கிறான்.

மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் மனிதனால் விலங்குகளைப்போல உடனடியாக உடலுறவு கொள்ள முடியாது. தனது ஏக்கங்களைத் தீர்த்துக்கொள்ள மனிதனுக்கு தகுந்த சூழல் வாய்க்க வேண்டும். அப்போதுதான் எல்லாம் முடியும்.

நினைத்தபோது ஆசையை தீர்த்துக்கொள்ள முடியாததாலும், மூடி மறைப்பதாலும், காத்திருப்பதாலும், ஏங்குவதாலும் ‘செக்ஸ்’ என்பதற்கு இயற்கையாகவே அதிக கவர்ச்சியும், அதிக சுகமும் சேர்ந்து கொண்டது. ஒரு வேளை விலங்குகளைப்போல மனிதனுக்கும் எல்லாம் உடனே கிடைத்துவிட்டால் அவனுக்கு செக்ஸில் இத்தனை சுவாரசியம் ஏற்பட்டிருக்காது.

நன்றி: தினத்தந்தி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் திசெம்பர் 19, 2009 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,

One response to “‘செக்ஸ்’ – மனிதனும் மிருகமும்

 1. a.ramachandran

  திசெம்பர் 19, 2009 at 11:33 பிப

  வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களால் உந்தப்பட்டு எதிர்பாலின விலங்கோடு உறவில் ஈடுபடுவது ஒரு சடங்குபோல் நடைபெறும் விஷயம். மற்றபடி உறவின்போதோ, உறவு முறிந்து பிரியும்போதோ, விலங்குகள் ஒன்றும் பெரிதாக பரவசப்பட்டுக் கொள்வதில்லை.

  I AM SURE YOU KNOW WHAT THE STREET DOGS ARE AFTER IN THE MONTH OF
  ‘ MARGAZHI ‘…. THERE IT’S ONLY THE STRONGEST WHO GETS THE FIRST PREFERENCE…IF THERE IS NO URGE OR LIKING AS MENTIONED IN THE ARTICLE…
  WHY ALL THOSE FIGHTING,CHASING AND DEMANDING AMONG THE MALE DOGS???

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: