RSS

காமக் கவிதைங்க இது!

15 நவ்


எழிலார் மார்பில் இதழ்களை வைத்து

நாவின் நுனியால் நலம்பெற வருடி

அவளது உடம்பில் அக்கினி வளர்த்தால்

ஓமகுண் டத்தில் ஊற்றிய நெய்போல்

சேயிழை குறியில் சுரதம் சுரக்கும்

திரவம் சுரந்து சேர்ந்த பின்னாலே

புணர்ச்சி தொடங்கினால் போதை பிறக்கும்.

அங்கம் கிளர்ந்து ஆசை பெருகி

பொங்கும் மயிர்க்கால் பூரித் தெழுந்து

தன்னை மறந்து தன்வச மிழந்து

மர்மக் குறியில் மயக்கம் நிறைந்து

தூக்கம் கலைந்து துடிப்பு வளர்ந்து

ஏக்கம் பெருகும் இளமை வயதில்

ரத்தம் புதிது ரகசியம் புதிது

சித்தம் புதிது சிந்தனை புதிது

முத்தம் புதிது மோகம் புதிது

கட்டித் தழுவும் கற்பனை புதிது

கொள்ளை அழகும் கொங்கை வனப்பும்

காணக் காணக் கலக்கும் வயது

இதழொடு மார்பு இடையொடு பாதம்

நான்கையும் வருடி நல்லுணர் வூட்டி

உணர்ச்சி யிலேஅவள் உச்ச மடைந்தும்

புணர்ச்சியி லிரங்கி பூரிப் பதுதான்

தளர்ச்சி யிலும்சுகம் தழுவும் ஒருவழி

கிளர்ச்சிகொள் மனையை கீழ்மே லாக

பலப்பல வகையில் பக்குவப் படுத்திச்

செயல்படும் கணவன் சிறப்புற வாழ்வான்

முத்த மிடுங்கள் முத்த மிடுங்கால்

இதழின் நாவால் எழுதுங்கள் கவிதை!

நாசியின் அருகே நாசியை வைத்து

முத்த மிடுங்கால் மோகம் பெருக்கி

கடிக்கா திருப்பது காதலின் நன்மை!

தொந்தி உள்ளவர் சுகம்பெற நினைத்தால்

கட்டிலின் மீதை கையை ஊன்றி

காரியம் செய்வது கனத்த சுகமாம்!

அல்லா தவர்கள் அனங்கின் மீது

சாய்ந்து படுத்து சரசம் புரிந்து

நண்டுப் பிடிப்போல் நான்கு கால்களும்

சங்கிலிப் பின்னல் சரியாய்ப் போட்டு

முத்தம் கொடுத்து முயங்கி மகிழலாம்!

இன்னவ தவிர, இவைபோல் மேலும்

நின்று கலத்தல், நீட்டிப் படுத்தல்

என்று பலவகை இயம்பினார் முனிவர்

ஒன்றை மட்டும் உளவா றுரைப்பேன்

சக்தி யற்றவர் சரச மாடிட

நாவைக் கொள்ளென நவின்றார் முனிவர்.

கேரள முறையில் கீழ் மேலாக

உறவு கொள்வதை உரைத்தார் முனிவர்

பிரசவித் தவளும் பெருத்த உடலும்

குறுகிய அளவில் குறியுடை யவளும்

அப்படிச் செய்வது ஆகா தென்றார்

– நூலகத்திலிருந்து…

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 15, 2009 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

2 responses to “காமக் கவிதைங்க இது!

 1. a.ramachandran

  நவம்பர் 15, 2009 at 4:25 பிப

  superb erotic poem..
  its very educative too..
  looking forward for more

   
 2. ஜெகதீஸ்வரன்

  ஜூலை 7, 2010 at 9:58 பிப

  திருக்குறலில் இருக்கும் காமத்துப்பாலையே மறைத்துவிட்ட சமூகத்தி்ல் இப்படி ஒரு கவிதையா,..

  அருமை,..

  – ஜெகதீஸ்வரன்.

  http://sagotharan.wordpress.com

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: