RSS

கடிதங்களை வெளியிடுவதா வேண்டாமா…

08 ஜூலை

அனைத்து இணைய வாசகர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து கடிதங்களை வெளியிடுவதா வேண்டாமா என்ற யோசனையிலிருக்கிறேன். முன்னுரையிலேயே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். மிக அநாகரிகமான முறையில் பின்னூட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. படிக்கப் பிடிக்காதவர்கள் ஏன் இந்த வலைப்பக்கத்திற்கு வரவேண்டும். வீணாக சாருவின் பெயரையும் இங்கே வம்புக்கிழுக்கிறீர்கள். ஆணின் எழுத்திற்கும், பெண்ணின் எழுத்திற்கும் கூட வித்தியாசம் தெரியாத, வாசிப்பு அனுபவம் இல்லாத கூட்டம் இருப்பதை நம்பித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

பிரசவ வலியின் வேதனையை ஒரு ஆணால் விவரிக்க முடியுமா என்ன? அதே போல்தான் காம உணர்வுகளும். இருவரின் உணர்வுகளும் தனித்தனி உலகம். எப்படிப் பார்த்தாலும் பெண்ணின் இந்த வெளிப்படையான உணர்வுகளை ஜிரணிக்க முடியாதவர்களே இப்படி தங்கள் வெறுப்பை பின்னூட்டம் வழியே காண்பிக்கிறார்கள். இந்தக் கடிதங்களை வலைப்பதிவேற்றுவதை நிறுத்தும் உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும். புத்தகமாய் வந்தால் நிச்சயம் அறிவிப்பு வெளியிடுகிறேன்.

அன்புடன்,

உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்:

14 responses to “கடிதங்களை வெளியிடுவதா வேண்டாமா…

 1. Piththan

  ஜூலை 8, 2009 at 10:26 பிப

  Dear Friend,

  Please don’t stop these postings. I think this site and your idea of releasing the personal letters are one of the great things that is happening in the Tamil world. It is eye opening and essentially needed.
  For all the blogs and articles, these type of low grade comments keep coming. It just shows the blackness of theie mind. I suggest you don’t even need to read them or just discard them or forget about them. (If you don’t read you don’t even need to forget!). But please don’t stop it.

  Wish you good luck in your life and to continue the article.

   
 2. கும்க்கி

  ஜூலை 8, 2009 at 11:55 பிப

  சங்கடமாகத்தானிருக்கிறது.
  பல நாள் படித்திருந்தும் பின்னூட்டமிட தயங்கியதன் காரணமும் அதுதான்.பின்னூட்டங்கள் எந்த விதமான நாகரிகங்களும் இன்றி எழுதப்படுவதை பார்த்தால் இவர்களுக்கெல்லாம் எதற்க்கு இனைய வசதி என்றுகூட தோன்றும்.அறிவிருந்தும் தரம் தாழ்ந்து எழுதுகிறார்களே என வருத்தமாகத்தான் இருக்கிறது.உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்.எங்களுக்கு வருத்தமாகத்தானிருக்கிறது.
  பிடிக்காதோர் இங்கு வந்து தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்ப வேண்டாமே…

   
 3. Geththu

  ஜூலை 9, 2009 at 12:12 முப

  கண்டிக்கத்தக்க முடிவு… பெண்களின் உணர்வுகளை தொடர்ந்து மறுத்து வரும் ஆணாதிக்க, அடிப்படைவாத கும்பலே இந்த கடிதங்களை எதிர்த்து வருகிறது…! என்ன சோகம் என்றால் அதைக்கூட ஒப்புக்கொள்ளும் துணிச்சலும், அறிவும் அற்ற கூட்டமாகப் போய்விட்டது இதை எதிர்க்கும் கூட்டம்…

  இதற்க்கு ஆதரவு கிடைத்தால் தான் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும்… இந்த சமூகம் எதை புனிதம் என்று கூவி விற்று வருகிறதோ அதை உங்கள் கடிதங்கள் கேள்விக்குள்ளாக்குகிறது எனவே தான் இவ்வளவு எதிர்ப்பு… தயங்காமல் தொடர வேண்டும்… சாருவின் மனஉறுதி உங்களுக்கும் வேண்டும் இதைப்போல் தினமும் பத்து கடிதங்கள் அவருக்கு வருகிறதாக கேள்வி ஆனால் உங்களுக்கு ஒரு பதிவிற்கே பத்து தானே…

  கவலைப்படாதீர்கள் உறுதியோடு தொடருங்கள்… உங்கள் எழுத்து தேவையான ஒன்று… ஒரு பெரும் சமூக முரண்பாட்டை வெளிப்படையாக அடையாளப்படுத்தும் சாதாரண மனிதர்களின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறீர்கள் எனவே எதிர்ப்புகளை புறம் தள்ளவும்….

   
 4. கிருஷ்ணவேணி

  ஜூலை 9, 2009 at 5:53 முப

  சாரு என்பவரின் தளத்தில் இந்த வலைத்தளம் வந்ததுதான் பிரச்னை என நினைக்கிறன். எல்லாரும் அவர் எழுதுவதாக நினைக்கிறார்கள். கற்பனையாக இருந்தாலும் ஒரு பெண்தான் எழுத்தியிருக்க வேண்டும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஏன் கருத்து. கேவலமான சில ஆண்களின் செயல்களுக்காக இதை நிறுத்தினால், அப்பறம் எதையுமே நம்மால் செய்ய முடியாது. பக்கத்துக்கு வீட்டுக் காரன், கூடப் படிக்கும் பய்யன், அலுவலக நண்பர்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த ஆண் வர்க்கத்தின் தொல்லை தங்க முடியவில்லை. இப்போது இணையத்தில் கூட…
  இனி இதை பெண்களுக்கான தளமாக அறிவியுங்கள். பிடிக்காத ஆண்களெல்லாம் வேறு வேலை இருந்தால் பார்க்கலாம்.

   
 5. கும்க்கி

  ஜூலை 9, 2009 at 8:49 முப

  நீங்கள் ஏன் கடித மட்டுருத்தலை (comment moderation) கடைப்பிடிப்பதில்லை.அதை பயன் படுத்தினாலே தேவையில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்காமலேயே விட்டுவிடலாமே.இந்த சர்ச்சையே எழ வாய்ப்பில்லை.

   
 6. baskar

  ஜூலை 9, 2009 at 10:18 முப

  இந்த மடையர்களுக்கு பயந்து தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்……… பின்னூட்டங்களை வேண்டுமானால் கொஞ்ச நாள் நிறுத்தி பாருங்கள்……

   
 7. Thatchai Kannan

  ஜூலை 9, 2009 at 12:47 பிப

  Yaarukku pidikkiratho அவர்கள் மட்டும் patiyunkal. piinuttam vidukiren என உங்கள் meathavi thanathai katta vendam. idhu unmaiya, இல்லையா என unkalidam ஏன் niruppikka வேண்டும்..இது karpanaiyakave இருந்து vittu pokattum… idhai padikkavum silar irukkirarkale… அவர்கள் padithu vittu pokattum… pdikkathavarkal vilaki ponkal… enkalathu vaasippil ஏன் mannai alli pokukirirkal….

   
 8. Shailu

  ஜூலை 9, 2009 at 1:16 பிப

  please continue

   
 9. சுந்தர்

  ஜூலை 9, 2009 at 5:13 பிப

  நான் தமிழ்கத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு தூர தேசத்தில் இருக்கிறேன். இங்கே தமிழ்ர்கள் ஒரு இருநூறு பேர் உள்ளனர். அதில் உங்கள் வலைத் தளத்தை வாசிப்பவர்கள் ஒரு நாற்பது பேர் தேறுவோம். எங்கள் அனைவரின் விருப்பமும், நீங்கள் இதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும் என்பதே.

  எதிர்ப்புகள் எதில் தான் இல்லை? ஒரு பெண்ணின் மன உணர்வுகள், இங்கே வெளிப்படுவதைப் போல வேறு எந்த இலக்கியப் படைப்பிலும் இது வரை வெளிப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அது பெண்கள் படைக்கும் இலக்கியம் என்றாலும் சரி.

  மாற்று வெளிகளில் இயங்கும் இவை போன்ற படைப்புகள் நிச்சயம் தேவை. தொடருங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.

   
 10. ram

  ஜூலை 9, 2009 at 6:12 பிப

  Whether it is true or not, what is the purpose of exposing it to public?.
  Please put a adult warning page before launching the site. Thank you. bye.

   
 11. Priya

  ஜூலை 9, 2009 at 8:11 பிப

  please continue……. ignore / block bad comments….
  “Moota poochiku payanthu Veetai ellam kolutha koodathu…”

   
 12. luvfire

  ஜூலை 9, 2009 at 11:51 பிப

  Please continue upload the letters, do not bother about mangas.. this website belongs to whole world, they can read lot of things like this in the internet, I do not know why they read this websites and scolding you.

   
 13. Prabu

  ஜூலை 12, 2009 at 7:23 பிப

  Hi,
  Please keep writing. Why should you prove with scanned letters as someone asked. If they dont like let them go. I dont know why they comes here often and do some cultural policing.
  You know, if Charu opened his feedback link that would be a battle ground. He is clever!
  As one of our buddy said you please do moderation of feedback.

  Do continue…. we are with you

   
 14. vazhipokkan

  ஓகஸ்ட் 24, 2009 at 6:21 பிப

  Please continue.This is the first ever blog reaching out the feeling of a woman.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: