RSS

தேக்கி வைத்த உணர்சிகளை…..

07 பிப்

அன்புள்ள நண்பா!

நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. வெறும் கேள்விகளுடன் மட்டும். ஆனால் இதற்கு முன்பு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருப்பீர்கள் போல, அது எனக்கு கிடைக்க வில்லை. அதனால் தான் கனமான கவர் அனுப்பினால் ரிஜிஸ்டரில் அனுப்பும்படி கேட்டிருந்தேன். எனக்கு மிகவும் குழப்பமாகவும், மிகவும் பயமாகவும் உள்ளது. எங்கள் வீட்டைப்பற்றி துளியும் பிரச்னை இல்லை. ஆனால் வேறு யார் கையிலாவது கிடைத்தால் பிரச்னைதானே! இனி எழுதும் கடிதங்களில் முகவரி தவிர வேறு எந்த இடத்திலும் என் பெயரை எழுதவேண்டாம். அப்படி அவசியம் ஏற்பட்டால் ஏதாவது ஒரு பூவின் பெயரைக்குறிப்பிடவும்.

தேக்கி வைத்த உணர்சிகளை ஒரு ஆறுதலான துனை கிடைத்ததும் கொட்டித்தீர்த்து விட்டேன். ஆனால் அது தவறோ என்று இப்போது யோச்க்கிறேன். செக்ஸ் பற்றி இத்தனை வெளிப்படையாக எழுதினால் எந்த ஆணும் அவளை அனுபவிக்க ஆசைப்படுவது இயற்கைதான். அதைத்தான் நீயும் நினைக்கிறாய். என்னுடைய கோணத்தில் நினைத்துப்பார்க்கவும், புயலில் சிக்கி வேறோடு அறுபட்ட மரமாய் வீழ்ந்து கிடக்கிறேன். மனசில் மட்டும்தான் ஆசைப்படலாம். செயலில் கடுகளவு மாற்றம் தெரிந்தாலும் என் உறவுகள் அத்தனையும் ஏசுவதற்கு தயாராக உள்ளது. எனது ஜாதகத்தில் இப்போது மிகவும் கெட்ட நேரமாம். இன்னும் 17 மாதத்திற்கு எதைப்பற்றியும் சொல்லாதே, செய்யாதே, யோசிக்காதே என்பது என் பெற்றோரின் கட்டளை. எனக்கு இதில் 100% நம்பிக்கை இல்லை என்றாலும் மேலும் அவர்களை துன்புறுத்த விரும்பவில்லை அவ்வளவே.

உனது ஸ்நேகமும், கடிதங்களும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. ஆனால் கடிதத்துக்கு மேல் 1% கூட ஆசைப்பட இப்போதைக்கு விரும்பவில்லை. வேண்டுமானால் உனது திருப்திக்காக என் ஃபோட்டோ மட்டும் அனுப்பி வைக்கிறேன். அதற்கு மேல் எதுவும் முடியாது. கடிதம் மட்டும் எழுதுவது உனக்குச் சிரமம் என்றால் மாதம் ஒரு கடிதம் எழுது. இதனால் நம் நட்பு காய்ந்து போகாமலும், செழித்து வளராமலும் வெறுமனே உயிர் வாழட்டும். எதிர்காலத்தில் பார்க்கலாம். என்னுடைய கேள்விகளுக்கான பதில் எழுதிய லெட்டர் கிடைக்கவில்லையே என்று மிகவும் வருத்தமாக உள்ளது. மீண்டும் ஒரு தடவை எழுதமுடியுமா?

எனது இயலாமை மீது எனக்குத்தான் வருத்தமே தவிர உன் மேல் கோபம் ஏதும் இல்லை. நீ எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள். உன் மீது இமயமலை அளவு நம்பிக்கை வைத்து விட்டேன். எனக்கு தர்மசங்கடமோ, துன்பமோ கொடுக்கும் செயலில் இறங்கி என்னைக்கொன்று விட வேண்டாம் ப்ளீஸ்….. இரண்டு நாள் தண்ணீர் கிடைக்காதவனை ஒரு நீரோடையில் கொண்டுபோய் விட்டால், அவன் முதலில் தண்ணீர் குடிக்கவே நினைப்பானே தவிர, மானும் மயிலும் விளையாடும் அழகைப்பார்த்து ரசிக்க மாட்டான். அது போல உன் கவிதைகள் என்னை ஆச்சர்யப்படுத்தாமல் இல்லை. அதை விட உன் செக்ஸ் ரசனையை அதிகம் விரும்பி விட்டேன் அவ்வளவே.

மற்றபடி நீ கேட்ட 40 கேள்விகளுக்கும் பதில் எழுத 40 வாரமும், 40 குயர் நோட்டும் தேவை. அடுத்த கடிதத்திலிருந்து எழுத முயற்சிக்கிறேன். நாம் நேரில் சந்தித்தால் அது வெறும் சந்திப்பாக இருக்காது. வேறு எதுவும் நிகழ்ந்தாலும் அது ஒரு முறையோடு நிற்காது. அது இருவருக்குமே நல்லதல்ல. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து உன்னிடத்திற்கு வரலாம் என்ற யோசனை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை. அதுவரை என்னிடமிருந்து என்ன தேவை என்றாலும் எழுது. போஸ்டலில் அனுப்பி வைக்கிறேன். எனக்கு ஏதாவது கொடுக்க நினைத்தாலும் ரிஜிஸ்டர் போஸ்டலில் அனுப்பிவை. சந்தோஷமாய் பெற்றுக்கொள்கிறேன்.

விரைவில் பதில் எழுதவும். அந்த தொலைந்து போன கடிதத்தை மீண்டும் எழுத முடியுமா?

அன்புடன்,

………………………..

 
4 பின்னூட்டங்கள்

Posted by மேல் பிப்ரவரி 7, 2009 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்:

4 responses to “தேக்கி வைத்த உணர்சிகளை…..

 1. kannan

  ஜூன் 25, 2009 at 10:34 பிப

  இந்த பிளாக் முழுவதயும் படித்த பின்னர் நான் பிரிந்து கொண்டது தனக்கு இல்லாத ஒரு நண்பர் இருப்பது போல் பாவித்து கொண்டு தன் மனதில் உள்ளதை இதில் எழதி உள்ளார். இவர் நண்பர் என்ன எலுதிநார் என தெரிந்தால் இவர் எழுதும் பதில் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

   
 2. kannan

  ஜூன் 25, 2009 at 10:37 பிப

  இந்த பிளாக் முழுவதயும் படித்த பின்னர் நான் பிரிந்து கொண்டது தனக்கு இல்லாத ஒரு நண்பர் இருப்பது போல் பாவித்து கொண்டு தன் மனதில் உள்ளதை இதில் எழதி உள்ளார். இவர் நண்பர் என்ன எலுதிநார் என தெரிந்தால் இவர் எழுதும் பதில் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி எழுது நடை நன்றாக படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது.

   
 3. Saraswthi

  ஏப்ரல் 9, 2011 at 10:57 முப

  Good feelings. Thannudaya mana unarvugalai appadiye pathivu seithu ullaar.

   
 4. உயிர்த்தோழி.

  ஏப்ரல் 14, 2011 at 6:49 பிப

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சரஸ்வதி.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: