RSS

எப்படி இவ்வளவு சுலபமாக உன்னால் செக்ஸ் எழுத முடிகிறது?

01 ஜன

அன்புள்ள நண்பா!

 இன்று உங்களுடைய கடிதம் கிடைத்தது. போன வாரம் முழுக்க தினசரி காத்திருந்து காத்திருந்து அழுகையே வந்து விட்டது. நான் செக்ஸ் எழுதியிருந்தது பிடிக்காமல் என் நட்பை உதறிவிட்டீர்கள் என்றே முடிவு செய்து விட்டேன். அதனால்தான் கோபமாக ஒரு இன்லாண்ட் கடிதம்கூட அனுப்பினேன். நீ ஊருக்குப் போன விஷயம் தெரியாமல் எழுதிவிட்டேன், ஸாரிப்பா… என்னைத் திட்டாதே! (இனி ஒருமையில்).

 

நான் உனது கடிதத்திற்காக கண்ணீருடன் காத்திருக்கையில், நீயோ ஊரில் ஜமாய்த்திருப்பாய் என்று நினைக்கிறேன். நான் பட்டினி கிடந்தாலும் என் நண்பன் மூச்சு முட்ட சாப்பிட்டதைக் கேட்டால் அதுவும் ஒரு சந்தோஷம்தான். நான் மிகுந்த தைரியமானவள் என்ற கர்வம் எனக்கு உண்டு. ஆனால் உனது தைரியம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் உள்ளது. எப்படி இவ்வளவு சுலபமாக உன்னால் செக்ஸ் எழுத முடிகிறது? நீ

எழுதியதில் 99% விஷயம் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், விரும்பக்கூடியதும்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி உனது கருத்தைக்கேட்க நினைத்தேன். நீயோ ஒரே கடிதத்தில் எழுதி எழுதி என்னைத் திகைக்க வைத்துவிட்டாய்.

நானோ உறவுக்கு வாய்ப்பில்லாமல் ஏங்குபவள். நீயோ உறவில் திருப்தி கிடைக்காமல் ஏங்குபவன். நமக்குள் செக்ஸ் உறவு மலர்ந்தால் என்ன தவறு? என்ற கேள்வி உனது கடிதத்தில் அல்லது உன் மனதில் துளிர் விட்டுள்ளதை புரிந்து கொண்டேன். இதை வளரவிட்டு உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தயவு செய்து அந்த கோணத்தில் சிந்தனையை வளரவிடாதே. நீயோ ஒரு சந்தோஷமான குடும்பத்தலைவன். நானோ அறுத்துக்கொண்டு வந்தவள். இலக்கில்லாத காற்றாடியாய்ப் பறந்தாலும் எனக்கு ஒரு நிம்மதியான மண வாழ்க்கை அமைந்து விடாதா என்ற நப்பாசையில் இருப்பவள். நாம் அமெரிக்காவிலோ, பிரான்சிலோ வாழவில்லை. நாற்றமெடுத்த பழைய பண்பாடுகளில் ஊறிப்போன நம் தமிழ்நாட்டில்தான். அதோடு எந்த முடிவையும் தைரியமாய் எடுக்கும் அளவு அடிபட்டு, பலமிழந்து வேதனையோடு உள்ளேன்.

ஆகவே என்னை உசுப்பிப்பார்க்க வேண்டாம். ப்ளீஸ்… ஆனால் அதே சமயம் செக்ஸ் ஆசைகளை முற்றிலும் துறந்து விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. வெட்டி விடப்பட்ட மரம் பட்டுப்போவதிற்குப் பதிலாக சில சமயம் செழிப்பாக வளர்வதுண்டு. அது போல குறிப்பிட்ட வயதில் வெட்டி விடப்பட்ட எனது செக்ஸ் ஆசைகள் இப்போது நாற்புறமும் கிளை பரப்பி அடர்ந்து வளர்ந்து விட்டது. அதைத்துறந்து விட்டு என்னால் நிமிடமும் இருக்க முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது. என்னவேண்டுமானாலும் எழுது. உன் எழுத்தைத் தடவித்தடவி ரசிப்பேனேயல்லாது ஒரு போதும் தவறாக நினைக்க மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம். சத்தியமும் கூட.

                  எனக்கும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமைந்து, கடவுளின் கருணையும் கிடைத்தால் என்றாவது ஒரு நாள் நாம் சந்தித்து நம்மை பரிமாறிக் கொள்வோம் (நீயும் மனப்பூர்வமாய் விரும்பினால் மட்டுமே).

                        எனது நண்பர்களைப் பற்றி கேட்டிருந்தாய். உள்ளூரில் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வது மடியில் பிள்ளைப் பூச்சியைக் கட்டிக்கொள்வது போல என்று எனக்குத் தெரியுமே!. அதனால் நண்பர்கள் இல்லை. ஆனால் ஒரு தோழி உண்டு. பெயர் சுஜி. பக்கத்தில் உள்ள இங்கிலீஷ் ஸ்கூலில் டீச்சராக இருக்கிறாள். ஏப்ரல் முதல் வாரத்தில் அவங்க ஸ்கூல் ஆண்டுவிழாவிற்குச் சென்ற போது பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நெருங்கிய நட்பாய் மாற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

                          ‘மே’ மாத லீவில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படும்போது எனது புடவைகளைக் காட்டுவதற்காக உள்ளே அழைத்துப்போய் பீரோவைத் திறந்து காட்டினேன். அவள் ஒரு புடவையை பார்ப்பதற்காக வெளியே இழுத்தபோது, என் மானமே அவள் காலடியில் விழுந்து விட்டது. ஒரு நொடி என்ன செய்வது என்று புரியாமல் அசட்டுத்தனமாய் சிரித்து வைத்தேன். அவளோ கொஞ்சம் சங்கோஜப்பட்டாலும் இதை ஏன் வெளியே வைத்திருந்தீங்க, உள்ளே வைங்க என்று எடுத்துக்கொடுத்து விட்டாள். அதிலிருந்து அவளிடம் செக்ஸ் பற்றி சகஜமாகப் பேசிக்கொள்கிறேன். ஆனால் உனது நட்பைப்பற்றி ஏதும் இதுவரை சொல்ல வில்லை. அவசியப்பட்டால் சொல்லலாம் என்று உள்ளேன். (கீழே விழுந்த பொருள்தான் இப்போதைக்கு எனக்கு வடிகாலாக உள்ளது. அது என்னவென்று யூகித்திருப்பாய் என்றே நினைக்கிறேன். உனக்குத் தெரியவில்லை என்றால் மறு மடலில் எழுதுகின்றேன்).

அன்புடன் உயிர்த்தோழி.

 

குறிச்சொற்கள்:

3 responses to “எப்படி இவ்வளவு சுலபமாக உன்னால் செக்ஸ் எழுத முடிகிறது?

 1. nagu

  செப்ரெம்பர் 5, 2009 at 11:17 முப

  unga neermai romba pudichirukku

   
 2. karthik

  ஏப்ரல் 6, 2010 at 4:51 பிப

  your way of telling the truth is very good

   
 3. arunv.blogger

  ஓகஸ்ட் 12, 2016 at 12:34 முப

  இதுவும் இயல்பான ஒன்றுதான். வரிகளை வாசிக்கும் போது தவிப்பு புரிகிறது. வடிகால்களும் அவசியம் தான் தேவைப்படும் போது!

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: