RSS

Monthly Archives: நவம்பர் 2008

உடல் ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாதா?…..

 

                    

அன்புள்ள நண்பா!

 

                               OH!  என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். நான் கனவு காண்கின்றேனா என்று! உன் மீது சந்தேகப்படுகிறேன், நீ மனிதன் தானா இல்லை இதயப்பகுதியில் மேகத்தை அடைத்து வைத்த அதிசயப் பிறவியா என்று. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தோஷமாய் உணர்கிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று கண்ணதாசன் உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார். நான் நினைத்தையெல்லாம் எழுதிருக்கிறாய், நான் நினைக்கப் போவதையும் எழுதியருக்கிறாய். என் மனசை எப்படிப் படித்தாய் என்பது புரியவே இல்லை.

                        நீ கேட்டிருக்கும் கேள்விகள் அத்தனைக்கும் பதில் எழுத ஆசைதான். ஆனால் அத்தனை தூரம் நான் பொருமைசாலி இல்லை. அடுத்தடுத்த கடிதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

                        மனசின் ஆசைகளையும், கனவுகளையும், கற்பனைகளையும், ஏக்கங்களையும் ஃபோட்டோவில் காட்டத்தான் முடியுமா இல்லை ஓர் இரவு படுக்கையில்தான் புரிந்து கொள்ள முடியுமா? நட்புக்கு மட்டுமல்ல செக்ஸூக்கும் கூட முகம் அவ்வளவு முக்கியமில்லை என்றே நினைக்கிறேன். பெண்ணை போகப்பொருளாய் நினைப்பவன் மட்டுமே அவள் முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். மாறாக அதை ஒரு கொடுத்து வாங்கும் பரிதாற்ற விஷயமாய் நினைப்பவனுக்கு அழகு முக்கியமாய்ப் படாது.

                        எனது விதியில் விளையாடிய கடவுள் அழகில் ஒன்றும் வஞ்சனை செய்யவில்லைதான். நீ சொன்னதைப் போல யாரையும் எளிதாக காதலித்து இழுத்துக்கொண்டு ஓடிவிட முடியும்தான். ஆனால் சிந்தனையில் இருக்கும் தெளிவும், தைரியமும் செயல்பாட்டில் இல்லையே. இந்த பாழாய்ப்போன பண்பாடும், தமிழ் மண்ணின் குணநலன்களும் என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போல.

                        உடல் ரீதியாய் பெண்ணை திருப்தி செய்ய முடியாது என்று பலரும் சொல்வது எனக்கு வேடிக்கையாய் படும். பெண் ஆழம் காணமுடியாத கடல் என்பது ஒருவேளை நிஜம் என்றாலும், அலைகளை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு மூச்சு முட்டுபவன் வேண்டுமானால் கடலைக்கண்டு பயப்படலாம். ஆனால் கட்டுமரத்தின் அடியில் வலை கட்டி கடலின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுத்து, அலை போன திக்கில், காற்றின் போக்கில் வந்து சேர்பவனை கடல் ஏமாற்றுவதில்லை. மடி மீது இட்டு தாலாட்டி மீன் என்றும், சிப்பி என்றும் அள்ளிக்கொடுத்து அனுப்புவதில்லையா?!, ஆக பெண் அமைதியான ஆழ்கடல்தான். ஆணோ அவசரமாய் சலசலத்து ஓடும் நீரோடைதான்.அதில் தவறும் இல்லைதான். ஆனால் என் முன்னாள் கணவனைப்போல (அவனைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுவேன், அவனுக்கு மரியாதை கொடுக்கக்கூட மனசு கூசுகிறது) கானல் நீரை அருவியாய் நினைத்து எத்தனை நாள் தான் நீராட முடியும்?

          தொடர்ச்சி அடுத்த பதிவில்…..

 

 

குறிச்சொற்கள்: