RSS

மோகத்தைக் கொன்றுவிடு….

29 அக்

அன்பிற்குறிய நண்பருக்கு!

நான் ………………….. எழுதுகிறேன். உங்களின் நீண்ட கடிதம் கிடைத்தது. ஆண்கள் யாருக்கும் கடிதமெழுதுவதில்லை என்ற என் முடிவை அப்போதே மாற்றிக்கொண்டேன். ஆனாலும் சிறிய தயக்கத்தின் காரணமாகவும், வேறு சில பிரச்னைகளாலும் உடனே பதில் எழுதவில்லை.

நான் எனது மனச்சுமையை இறக்கி வைக்கவே விரும்பினேன். உங்கள் கடிதத்தில்இருந்த தெளிவைப் பார்த்து நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்றும் உங்கள் மூலம் எனக்கு பிரச்னைகள் வராது என்றும் தைரியம் பெற்றதாலேயே இக் கடிதம்.

என் வயது 29. திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது. பிரிந்து வந்து 1 ½ வருடம் ஆகிறது. 26 வயதில் 45 வயதுக்கார்ருக்கு மணம் செய்விக்கப்பட்டேன். இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன் விளைவாகவும், வயதின் காரணமாகவும் தற்சமயம் என்னை ஒரு ஆணாகவே நினைத்துக்கொள்கிறேனே தவிர, பெண்மைக்குரிய இயல்பான குணங்களெல்லாம் ஓடி மறைந்து விட்டது.

மோகத்தைக் கொன்றுவிடு அல்லாலெந்தன் மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி பாடிய வரிகளின் சத்தியத்தை நிமிடத்திற்கு நிமிடம் உணர்கிறேன்.

இதற்கு மேலும் மனம் திறந்து பேச விருப்பம்தான், ஆனால் என்னை பேச வைப்பது உங்களின் கடிதத்தில்தான் இருக்கிறது. உங்கள் மீது முழுநம்பிக்கை வைக்க உங்கள் முழு விபரம் எழுதவும்.

இப்படிக்கு,

xxxxxxxxxxxxxxxxx

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஒக்ரோபர் 29, 2008 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , , ,

One response to “மோகத்தைக் கொன்றுவிடு….

  1. jenny

    ஏப்ரல் 15, 2009 at 6:41 பிப

    எப்படி எழுதினீர்கள்? ஆயிரம் கோடி பெண்கள் சொல்ல முடியாமல் தவிக்கும் உணர்ச்சிகளை ஜஸ்ட் லைக் தட் – எழுதிக்கொண்டே போயிருக்கிறீர்கள். பிரமிப்பாய் உள்ளது. i read all posts.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: