RSS

வாழ்கையில் பிரச்சனை என்பது வறுமை, பசி, பட்டினி என்பது மட்டுமல்ல…

10 அக்

தமிழ் வாசகர்களுக்கு வணக்கம்.

இது எந்த எழுத்தாளரின் படைப்பும் இல்லை. எழுத்து என்பது எழுத்தாளர்களுக்கே உரியதும் இல்லை. எந்த ஒரு மனிதரையும் அவர் போக்கில் சுதந்தரமாக யோசிக்கவிட்டால் அவர் மனதில் தோன்றும் இயற்கையான எல்லா உணர்வுகளுமே ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. அப்படி ஒரு பெண்ணின் நிஜமான துடிப்புகள் தான் இது.

ஆண் தான் முதல் எதிரி என்று பெண்ணியவாதிகள் சிலர் புறப்பட்டு விட்ட இந்தக்காலகட்டத்தில் நபிக்கைக்குரிய, தன்னை ஆராதிக்கிற, புரிந்துகொள்கிற ஆண்மகன் கிடைத்துவிட்டால் அவன் மீது பொங்குகிற காதலுடன் தன் ரகசியங்களைச் சொல்ல ஒரு பெண் தயங்குவதே இல்லை. ஒப்பாரி வைத்தழவும் திராணியற்றுப்போன தன் வாழ்கையை மொழியில் காட்ட முடியாதவர்களின் சோகத்தை என்னவென்று சொல்வது? வாய் விட்டுச் சொல்ல முடியாத அவஸ்தைகளை எழுத்திலே கொண்டுவருவது அத்தனை சாத்தியமா என்ன?

ஒரு பெண்ணின் மனசுக்குள் புகுந்து அவளின் சகலத்தையும் எழுத்திலே வடிக்க வைத்த செயல் சாதாரணமானது அல்ல. இது ஒரு வகையில் அந்தரங்கம். அந்தரங்கம் புனிதமானது என்று சொல்வார்கள்.(ஜெயகாந்தனின் ஒரு சிறு கதை கூட இந்த தலைப்பில் எழுதியதாய் நினைவு.) ஆனால் தமிழில் எந்த பெண் படைப்பாளிகளாலும் எழுதப்படாத, இனியும் எழுதுவார்களா என்ற கேள்வியோடு நிற்கின்ற விஷயம் என்பதால் இதை வாசகர்களின் பார்வைக்கு வைக்க துணிந்து விட்டோம்.
வாழ்கையில் பிரச்சனை என்பது வறுமை, பசி, பட்டினி என்பது மட்டுமல்ல மனசுக்குப்பிடித்த நிறைவான சுதந்தரமான வாழ்கை இல்லாததும்தான். இந்த வாழ்கை என்ற குடும்பத்துக்குள் உறவு நிலையில் ஏற்படும் சிக்கல்களை வெளியே சொல்ல முடியாத
ஒரு தீராத சோகத்துடன்தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர் கொண்டு வருகிறாள். சட்டத்தாலோ, சமூகத்தாலோ இதற்கு தீர்வு காண முடியாத சூழ்நிலையில் தன் மன பாரத்தை இறக்கி வைக்க சக மனிதரைத்தான் தேடுகின்றாள். வாய்ப்பு கிடைத்தபோது பத்த்ரிகைகளிலும், ஊடகங்கள் மூலமாகவும் கொட்டித்தீர்க்க முற்படுகிறாள். இப்படி தங்கள் அந்தரங்க பிரச்சனைகளைக் கூட சொல்லி தீர்வு (ஆறுதல்) காணமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள் டாக்டர் மாத்ருபூதம், டாக்டர் நாராயண ரெட்டி, டாக்டர் ஷாலினி, எழுத்தாளர் அனுராதாரமணன் போன்றவர்கள்.

பெண் சித்தரிப்பு என்பது ஆணிய நோக்கில் எவ்வளவுதான் அங்கீகரிக்ககூடிய பரிதாபம், புரிதல், ஈர்ப்பு, காதல் என்கின்ற அடிப்படைகளில் எழுந்தாலும் அது முழுமையான அனுபவத்தை தரத் தவறிவிடுகிறது. எனவேதான் பெண்ணே தன் அனுபவங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் இந்த ஆணாதிக்க உலகத்தில் ஓரளவிற்குமேல் அவளால் எழுத்திலே கூட வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை என்பது வெட்க்க்கேடான விஷயம்.
பெண் தன் பாலியல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் அவளது வெளிப்படியான போக்கு ஆகியன ‘மரியாதைக்குரிய’ ஒரு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சமூக வரையரைகளிலிருந்து ‘நடத்தை கேட்டவள்’ என்கின்ற அடிப்படையில் அவளை வேறுபடுதிக்காட்டிவிடும் என்ற பயம்தான் இவர்களை கட்டிப்போட்டுவிடுகிறது.

ஆண்டாள் மட்டுமே இங்கு தன் கருத்துக்களைப் பகிரங்கமாகப் பதிவு செய்திருக்கிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் முதன் முதலில் பெண்ணின் காதல், காம உணர்வை பெண்ணாக நின்று, பெண் நோக்கில் ஆண்டாளால் படைக்கப்பட்ட பாசுரங்கள் திருப்பாவை பாடல்கள். ஆண்-பெண் என பிரிக்கப்பட்டு கட்டிஎழுப்பப் பட்டிருந்த எல்லா கட்டுமானங்களையும் ஆண்டாள் தகர்த்தெரிகிறார். ஆனால் இவர் கூட ஆண்டவனை நினைத்துதான் தன் புணர்ச்சி ஈடுபாட்டை வெளிப்படுதினா ஒழிய வேறு ஆடவனை நினைத்து அல்ல. இல்லை என்றால் ஆண்டாளின் படைப்புகளைக்கூட நாம் இன்று பார்க்க முடியாமல் போயிருக்கும்.
ஆண்-பெண் உறவில் உள்ள முக்கியமான பிரச்சனை பாலியல் ஒடுக்குமுறைதான்.

எல்லா குடும்பங்களுமே மானம், மரியாதை, கெளரவம் போன்ற போர்வைக்குள் ஒரு போலியான வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இப்படி போலி வாழ்க்கைக்குள் சிறைப்பட்ட பாலியல் உணர்வுகள் எப்படியும் வடிகால் தேடி வெளியே வரும், முன்னிலும் வேகமாய், ஆக்ரோஷமாய். அப்போது கிடைக்கிறவானோடு தன் வாழ்வில் இழந்தஇன்பங்களை எல்லாம் ஒரு சேர பெறுபவள் போல தன் உடல் புதைய, உருவம் குலைய அவனை ஆலங்கனித்து ஆக்ரோஷம் பொங்க அனுபவிக்கிறாள். ஆணின் பார்வையில் அல்லது சமூகத்தின் பார்வையில் இது கள்ளக்காதல் , உடல் திமிர், கொழுப்பு, அரிப்பெடுத்த செயல் என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டலாம். ஆனால் அந்த தினவு கொண்ட பெண் உடம்பின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய / தணிக்க இன்றைய ஆண்மகனால் முடியுமா என்றால் பதில் கேள்விக்குறியே! தலைகுனிவைத் தவிர அவனால் சாதிக்ககூடியது ஏதுமிருக்காது. இப்படி உடலால் அவளை திருப்தி செய்ய முடியமற் போனதன் காரணமாகவே ‘கற்பு’ என்ற கடிவாளம் போட்டு மனுதர்ம சாஸ்திரத்தில் இதையும் ஏற்றி பெண்ணை அடிமையாக்கினரோ என்னவோ?!

காலந்தோறும் இப்படி பெண்கள் படுகின்ற வலியும், வேதனையும், சந்தோஷமும் சொல்லிப்புரிய வைக்க முடியாதவை. அனுபவம் தரும் படிப்பினைக்குமுன் புரியவைத்தல் வீண் வேலைதான் என்றாலும் கொஞ்சமேனும் ஆண் வர்கத்தினரை உணரசெய்வதுதான் எங்கள் நோக்கம்.

இவை எல்லாம் பற்றி எழுதினாலோ அல்லது யாரோ ஒரு பெண் எழுத்தாளரின் எழுத்துகளில் கொஞ்சம் ஆபாசம் இருந்தாலோ எதிர்ப்புகள் வலுக்கதொடங்கி விடுகிறது. காரணம் தாய்மை, குடும்பம், உடலுறவு, கற்பொழுக்கம் குறித்த மதிப்பீடுகள் நம்மில் பலருக்கும் பழகிப்போன மரபார்ந்த சிந்தனைகளாகப் படிந்து போயிருப்பதுதான். அதிர்ச்சிக்காக பேசாமல் ஒதுக்கப்பட்ட விஷயங்களையும், உபயோகிக்கத் தயங்கிய வார்த்தைகளையும், பாலியல் குறித்த உணர்வுகளையும் எழுதும் போக்கு இன்றைய இளம் பெண் கவிஞர்களிடம் அதிகரித்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டும், குஷ்பு, சுஹாசினி இவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் பெண் மீதான மற்றுமொரு வன்முறை என்பதில் சந்தேகமில்லை.

‘என்ன இந்த பெண் ஜென்மம் நினைத்ததை வாய் விட்டுச்சொல்ல முடியாத ஜென்மம், எதைச் செய்ய வேண்டும், எதை நினைக்க வேண்டும் என்றெல்லாம் கூட ஆண்களால் தீர்மானித்து விடப்பட்ட ஜென்மம்’. என்று எங்கோ எப்போதோ படித்த வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஆணிற்கு ஒரு பெண்ணின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே போல பெண்ணுக்கும் ஆணின் தேவை அவசியம் என்பதும், ஆண் அவளை அணு அணுவாய் அவளை ரசிப்பதைப்போலவே, அவளும் அவள் உடம்பும் ரசிக்க, அனுபவிக்க தவித்துக் கொண்டிருக்கிறது என்று எத்தனை பேருக்குத்தெரியும்?

என் மீது வைத்த அளவு கடந்த நம்பிக்கையின் காரணமாக மெல்ல மெல்ல தன் மனதின் ரகசியங்களை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்ட என் சிநேகிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பெண்ணே கூட மற்றொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ளாத, கொள்ளமுடியாத விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதை நினைத்து ஒரு வகையில் பெருமிதம் கொண்டாலும், இவற்றை இப்படி பகிரங்கமாக மக்களின் பார்வைக்கு வைப்பதை மிகுந்த சங்கடமாகவே உணர்கிறோம். ஆனாலும் பெண்கள் சூழ வாழ்கின்ற ஆண் அவளை புரிந்து கொண்டு கொஞ்சமேனும் அவளது உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்பதே பொதுவான அவா.

இந்த சிநேகிதியின் மன ஓட்டத்திற்கு தகுந்தவாறு என்னையும் மாற்றிக்கொண்டு, அவளுக்கு எது பிடிக்குமோ, எப்பெடி எழுதினால் பிடிக்குமோ, எது சந்தோஷமோ அதை எழுதி அவள் மனதின் அத்தனைப் பக்கங்களையும் வடிக்க வைத்தேன். அதே நேரத்தில் நானும் ஒரு மனநோயாளிபோல் ஆகிவிட்டதை உணர்ந்தேன். இதை புத்தகமாக்கும் எண்ணம் தோன்றியது சாருநிவேதிதாவின் zero டிகிரி நாவலை படித்துதான். ஆனாலும் ஏனோ ஒரு தயக்கத்தின் காரமாக அப்படியே விட்டுவிட்டேன். வலைப்பக்கம் பற்றி அறிந்தவுடன் இருவரும் பேசியே இந்த முடிவெடுத்தோம்.

(பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன.)

நன்றி தோழி.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர் 10, 2008 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்:

3 responses to “வாழ்கையில் பிரச்சனை என்பது வறுமை, பசி, பட்டினி என்பது மட்டுமல்ல…

 1. D.R.Ashok

  ஏப்ரல் 15, 2009 at 10:38 பிப

  Is this Charu’s Writing?

  ஆம் எனில் இதன் வழியே சாரு உடன் பேசலாமா?

   
 2. muthukarthi

  மே 30, 2009 at 11:29 பிப

  பொட்டில் அடித்தது போல் எழுதினீர்கள் தொடர்க …..

   
 3. தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி

  ஏப்ரல் 21, 2010 at 6:09 பிப

  ////ஆனால் அந்த தினவு கொண்ட பெண் உடம்பின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய / தணிக்க இன்றைய ஆண்மகனால் முடியுமா என்றால் பதில் கேள்விக்குறியே! தலைகுனிவைத் தவிர அவனால் சாதிக்ககூடியது ஏதுமிருக்காது. இப்படி உடலால் அவளை திருப்தி செய்ய முடியமற் போனதன் காரணமாகவே ‘கற்பு’ என்ற கடிவாளம் போட்டு மனுதர்ம சாஸ்திரத்தில் இதையும் ஏற்றி பெண்ணை அடிமையாக்கினரோ என்னவோ?!////

  உண்மை என்று தான் தோன்றுகிறது ……..பெண்கள் தாய்மை உணர்வுக்கு தாவி விடுவதால்தான் என் போன்ற ஆண்கள் எப்படியோ சமாளிக்க முடிகிறது என நினைக்கிறன் …….

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: