RSS

பிரபஞ்சன்


கனவுகளைத் தின்போம்

Image result for பிரபஞ்சன்

அந்த மனுஷனுக்கு இப்படி ஒரு துணை அவசியப்பட்டிருக்கு. அதுக்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கு. இதுல என்ன தப்பு இருக்க முடியும்? உன் அப்பாவாகவே இருக்கட்டும், அவருடைய அந்தரங்கத்தில் குறுக்கிட உனக்கு என்ன உரிமை இருக்கு? நாம் ஒவ்வொருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் போலிஸ்கார வேலை பார்க்கிறது தப்பபில்லையா? யாரோட வீடா இருந்தாலும் ஜன்னல் வழியா எட்டிப் பார்க்கிறது சரியா? அம்மாவும் அந்த மாதிரி முடிவெடுத்தா?!

ஏன் எடுக்கக் கூடாது? நியாயம்னு வந்தா அப்பாவுக்கு உள்ளது தானே அம்மாவுக்கும். இன்னும் கேட்டா அப்பாவுக்கு இருக்கிற நியாயங்களை விடவும் அம்மாவுக்கு கூடுதலான நியாயம் இருக்கும்.

தனி மனிதர்களை அவர்களோட உணர்ச்சிக்கு மதிப்பளிச்சு அவங்க செயல்களை ஆராயக்கூடாது.

சரி, சமூகத்துல இருக்கிற ஒழுங்கு குலைஞ்சிடாதா? காட்டு மிராண்டி சமூகமா மாறிட்டோமா?

இங்கே பார், காட்டு மிராண்டிகளைப் பற்றிப் பேசாதே, கற்பழிப்புன்னு சொல்றமே, பலாத்காரம் அது அவங்க சமுதாயத்துல இல்ல. அவங்களுக்குன்னு ஒரு ஒழுங்கு இருக்கவே இருக்கு. நாகரிகத்தின் உச்சில இருக்கிற நம்மகிட்டதான் சகல அழுக்கும் இருக்கு. எப்போதும் ஒழுங்கு ஒரு பக்கம் இருக்கவே இருக்கும். ஆனா மனசு சதா வேலிய உடைச்சிகிட்டு வெளியே வந்துகிட்டே இருக்கும். அது பலவீனம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை.

நாம் மனிதர்களை அவர்களோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கிறது முலமாத்தான் அவங்களைப் புரிஞ்சிக்கனும். தப்பு, சரி எல்லாம் ஞானிகளோட வேலை. மனிதர்களோட வேலை இல்லை.

உடம்பை வெல்னும்னு சொல்றாங்க. எதுக்காக வெல்லனும்? இது ஒரு கேள்வி, சரி எப்படி வெல்ல முடியும்? உம்பை உடம்பைக் கொண்டுதான் வெல்ல முடியும். பாவம் மனுஷன் அவனை கொஞ்சம் இரக்கத்தோடு பார்க்கனும். அவன் தப்பே பண்ணட்டும், அவன் பக்கம் நின்று அவனை, அவளைக் கருணையோடு புரிஞ்சிக்கனும். எனக்குத் தெரிந்த மனுஷ நீதி அதுதான்.

 

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

 
%d bloggers like this: