RSS

எஸ். ராமகிருஷ்ணன்


ஆணோ, பெண்ணோ எவராயினும் காமம் உடலில் தோன்றும் ஒரு சூராவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது. ஆண் காம உணர்சிகளுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள்கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக் கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாச்சார சூழல் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

ஆண்டாள் தனக்கு காமம் ஏற்படுத்தும் வலியை பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதினைக் கடந்து உடலின் தீராத குரல் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் விருப்பத்துடன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பலமுறை யோசிப்பதுதான் குடும்பங்களில் நடக்கிறது.

விளக்கை அணைத்தவுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வதைப் போல காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்து விடுகிறது.

வேட்டைக்குச் செல்பவன் மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக்கும், எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல, கொஞ்சம் கொஞ்சமாய் செவிவழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்து கொள்ளத் துவங்குகிறோம்.

அதன் பிறகு நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சிகள் தரும் எண்ணங்களும் அதன் விசித்திர கற்பனைகளுமே!. காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்தியச் சமுதாயம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்த போதிலும் அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.

கனியில் துளையிட்ட புழு வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டிருப்பதைப் போல காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்து கொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர்கொள்வதும், வெற்றி கொள்வதும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாகவும், அறியாமை நிரம்பியதாகவுமே இருக்கிறது. உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தைஎப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.

மனிதன் தன்னால் அடக்க முடியாதவற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி அடக்கி வைத்திருக்கிறான். சுதந்தரத்திற்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது எல்லா குடும்பப் பெண்களின் காமமும்…………………. .  ஒரு விளக்கின் சுடரைப்போல காமம் சதா அசைந்து கொண்டே இருக்கிறது.

ஒரு பக்கம் அதிவேக நாகரிகம் காமத்தை மலினப்பொருள் ஆக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவதைப் போல பாலுணர்வுகளின் அறியாமை நம்மை பீடித்திருக்கிறது.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்படவேண்டிய ஒரு ரகசியமல்ல. அதே சமயம் கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும் அழுவதும் போல அது ஒரு உணர்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை புரிந்து கொள்ளாதவரை………………………..

எஸ். ராமகிருஷ்ணன்.

இங்கே அழுத்தி இவரது வலைத்தளத்திற்கும் போகலாம்.

 

12 responses to “எஸ். ராமகிருஷ்ணன்

 1. prabhurajK

  ஏப்ரல் 16, 2009 at 6:04 பிப

  hmmm nice lines

   
 2. thoma

  ஏப்ரல் 18, 2009 at 3:27 பிப

  miga yatharthamana ezhuthu

   
 3. Geththu

  ஏப்ரல் 23, 2009 at 6:19 பிப

  ungal aalumaiyai prathipalikkirahu…..

   
 4. murugeshan

  மே 9, 2009 at 11:16 முப

  the best explanation about sex feelings in males and females. always SR’s words are impressive and transparent in nature which reflects true side of life… great.

   
 5. Bharathi

  ஜூன் 19, 2009 at 4:08 பிப

  As usual, miga iyalbana varthaigala, oru periya unmaiya unarthi irukukirar SR. He is great !

   
 6. Sundhar.M

  பிப்ரவரி 22, 2010 at 1:26 பிப

  This is the best defination about human sex beelings

  Thanks Mr. S.R

   
 7. puduvai.ve.senthil

  மார்ச் 9, 2011 at 10:51 பிப

  காமம், விலக்கப்படவேண்டியதும் அல்ல, ஆழ துய்த்து பின் விலகிவிடவேண்டியதும் அல்ல. அது கரையை கடந்துவிடாதபடிக்கு கவனித்து கொண்டிருந்தாலே போதும், தானாகவே வடிகாலை தேடிக்கொள்ளும்.

   
 8. உயிர்த்தோழி.

  மார்ச் 10, 2011 at 3:21 பிப

  மிகச்சரியான கருத்து நண்பரே! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   
 9. logeshwaran

  ஜூலை 3, 2012 at 12:45 பிப

  samayam thottu sirpangal varaiyilana tamil panpattu kuriyeedugalum sandru pagirvugalum kamathai allathu punarchiyai menmai padutha muyandrullana. anal, pulapaduthuthalil engo pirachanai nernthullathu… purithal miguntha elimaiyana katturai…

   
 10. ஆரா எனும் ஆனந்தராஜன் chennai

  ஓகஸ்ட் 21, 2012 at 11:56 பிப

  தண்ணீர் தேசத்தின் தன்மை உரைத்தவரே .வேம்பலை நாகு காமம்,அழகரின் ரெயில் பயண காமம்,யாமத்தின் மிளிரும் காமம்.
  மறுக்கலாம் ஆனால் மறக்க முடியாதது காமம் அல்லவா.செயல் இல்லாமலும் மனதுள் சிறகடிக்குமே அஃது .நண்பரே கூழாங்கல் வாங்கி கையொப்பம் வாங்கியது நான் தான் இது முழுதும் ராமக்ருஷ்ணன் அவர்கட்கு .கவிஞர் ஆரா.

   
 11. ஆரா எனும் ஆனந்தராஜன் chennai

  ஓகஸ்ட் 22, 2012 at 12:00 முப

  அருகாமை அல்ல அருகு அருகில் என்பதே சரி ,அண்மை எனும் பதம் பக்கம் எனவும்
  அருகாமை தூரம் எனவும் தமிழில் கூறப்பெறுகிறது.காமம் மன அண்மை .காதல் மன அண்மை .
  விகாரம் அருகாமை இவ்வாறு வைக்கலாம்.ஆரா

   
 12. annadurai

  திசெம்பர் 30, 2012 at 5:14 பிப

  காமம் என்பது கடவுளுக்கும் கற்பிக்கப்பட்ட பாடம். எனில் அதன் இன்றியமையாத் தன்மை புரிதலுக்கு அப்பாற்பட்டதல்ல.வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திற்கும் சமையலுக்கு நளபாஹம் காமத்திற்கு காம சூத்திரம் வகுத்த இந்தியாவில் தான் காமம் கட்டுப்பாட்டை இழந்தது ஓடும் பேருந்தில்..டிசம்பர் 12 இந்தியா டுடே படித்தால் காமத்தில் நாம் முன்னேறுகிறோமா இல்லை கற்காலத்திற்கே திரும்புகிறோமா என்பது புதிராக உள்ளது.இவ்வேளையில் காமம் பற்றிய கற்பித்தல் புதிய கோணத்தில் இருக்க வேண்டும்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: