RSS

எனக்குப் பிடித்த கவிதைகள்


மனசின் நாவுகள்


உயிர்ப் பிடித்தெழும்

நாட்களின்

பிடறி பற்றி

உலுக்கியெடுக்கின்றன

நீ ஊற்றி வளர்த்தனுப்பும்

ஞாபகங்கள்.

ஏறி இறங்கும்

ஏக்கப் பெருமூச்சுகளில்

தீய்ந்தழிகின்றன

நினைவுகள் உமிழ்ந்து போன

கனவு பிம்பங்கள்.

நியொழிந்த நீயும்

நானொழிந்த நானும்

முட்டிக் கொள்ளும்

வெளிப்பரப்பில்

வேர்க்கொழித்து

கனிந்தாடுகிற

ஆதாம் ஆப்பிளை

எப்போது ருசித்து

ருசிக்கும்

ருசிக்கேங்கும்

மனசின் நாவுகள்!

–       கதிர் பாரதி.

‘எனக்குப்பிடித்த கவிதை’(2)

மன அழுக்கு


எத்தனை துடைத்தும்

மறையவில்லை மன அழுக்கு

சாலையில் செல்பவளை

துகிலுறிந்து வெறிப்பது

ஆபாச போஸ்டரை

ஆசையுடன் ரசிப்பது

தூண்டிலில் எவள் சிக்குவாளென்று

சிந்தனை வயப்படுவது

அரட்டை என்ற போர்வையில்

அசிங்கமாய் வர்ணிப்பதென

மக்கிப்போய்த்தான்

கிடக்கிறது அழுக்கு நிறைந்த மனசு

தத்தளிக்கும் அழுக்குகளை

தள்ளிச் சாந்தமடைய

கோவிலுக்குச் சென்று

சாமி முன் சரணடைந்தால்

எதிரே கண்மூடி கும்பிட்டவளின்

கவர்ந்திழுக்கும் வளைவுகளால்

மறுபடியும் சேர்கிறது

மற்றுமொரு மன அழுக்கு.

-மு.மாறன். சென்னை.


எனக்குப் பிடித்த கவிதை (3)

இச்சைமொழிதூக்கம் தளும்பும் உன்னை

முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்

இச்சைமொழிபேசிப் புணர்ந்து ஆழ்ந்துறங்கி

தானாய் விழித்தெழும் என்முன்

‘அலாரம்’ வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த

‘காப்பி’யை நீட்டுகிறாய்

சிறு பொழுதினில் ‘டிபன்’ செய்து-பரபரப்பாய்

‘லன்ச்’சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்

உட்கார்ந்த இடத்திலேயே கையலம்ப நீரெனக்கு

எல்லாம் முடித்து அவசர அவசரமாய்

அலுவலகம் கிளம்புகிறாய்

நகரநெரிசலில் பேருந்து உரசலில்

அலுவலக ‘இரட்டை அர்த்த’ வார்த்தைகளில்

உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்

மீண்டும் சமைத்து இரவுணவுமுடித்து ஓய்ந்துறங்குகையில்

விழித்துக்க்கொள்ளும் என் காமம்…

மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து…

சிறுவுதவியும் செய்யாது

தப்பித்துக் கொள்கிறேன் நான்

முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து.

–          ஜெ.முனிசாமி.

 

4 responses to “எனக்குப் பிடித்த கவிதைகள்

 1. nanrasitha

  ஒக்ரோபர் 24, 2009 at 11:59 முப

  Nengal rasitha kavithaigal anaithum nandraga irrukku. thanks for sharing that with us.

   
 2. kAPILAN

  நவம்பர் 15, 2009 at 7:57 முப

  Anaithu kavithaikalum nanraakairrukenrathu enium veru kavithikali petasutikkavum…………..

   
 3. Geththu

  நவம்பர் 22, 2009 at 11:23 முப

  அனைத்தும் அருமையான கவிதைகள்…. கமலாதாஸ் வழக்கம் போல் இனிய பூகம்பம்….

  குறிப்பாக கவிதை (4) இந்தியக் பெண்களின் வஞ்சிக்கப்பட்ட, ஆண்களின் சௌகரியமான வாழ்க்கை முறை….

  தோழி தொடர்ந்து கலகம் செய்…………………….

   
 4. Meha Nathan

  ஏப்ரல் 9, 2013 at 6:18 முப

  உண்மை குழைத்து சக மனிதனை வரைந்து இருக்கீர்கள்..

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: