RSS

உடல் ஆசைகள் அதைப் புரிந்துகொள்கிற மாதிரி தெரியவில்லை!

10 Jan

My Dear Friend,

உங்களுடைய GREETINGS WITH LETTER கிடைத்தது. என்னால் ஆச்சர்யத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நிஜமாகவே நீங்கள்தானா? நம்பவே முடியவில்லை.ஜோர்டான் என்பது எங்கே இருக்கிறது என்பதை இனிமேல்தான் மேப்பில் தேடிப் பார்க்கப் போகிறேன். அடுத்த மடலை விரைவாகவும் என்ன நடந்தது? எப்படி ஜோர்டான் போனீர்கள்? இப்போது என்ன வேலை. திரும்பவும் இந்தியா திரும்புவது எப்போது? என்ற முழு விபரங்களுடன் நீண்டதாகவும் எழுதுங்கள்.

உங்கள் மனைவியும், குழந்தையும் நலம்தானே! அதற்குப் பிறகு குழந்தை ஏதும் இல்லைதானே! இப்போது அவள் எத்தனையாவது படிக்கிறாள்? எந்த ஸ்கூலில் படிக்கிறாள்? உங்களைப் பிரிந்திருக்க உங்கள் மனைவி எப்படி சம்மதித்தார்?

நீண்ட நாளைக்கு அப்புறம் உங்களின் கையெழுத்தைப் பார்த்ததும் நான் சிலிர்த்துப் போய்விட்டேன். திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையின் கால்சட்டையைப் பார்த்த தாயின் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாதவர்களும், தெரியாதவர்களும் உலகில் நிறைய உண்டு. அந்த மாதிரிதான் உங்கள் மனைவி என்று நினைக்கிறேன். அழகு, அறிவு, ரசனை, தெளிவு, கம்பீரம் என அனைத்தும் நிரம்பிய உங்களின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல், தானும் அனுபவிக்காமல், உங்களையும் சந்தோஷப் படுத்தாமல் வாழ்க்கையை வீண்டித்துவிட்டாரே என்றுதான் வருத்தமாக உள்ளது.

உயிரே! உங்களுடைய ஆசையும் தவிப்பும், வேகமும் ரசனையும் எனக்கு நன்றாகத் தெரியும். இங்கே இருந்தாலாவது மாதத்தில் ஒரு முறையேனும் அரைகுறையாக உங்கள் மனைவி மூலம் அதைத் தீர்த்துக்கொள்வீர்கள். ஆனால் இப்போது தூரதேசத்தில் என்னதான் செய்வீர்கள் என்று நினைத்தால் என்னால் தாங்க முடியவில்லை. அதற்காக விபச்சாரிகள் யாரிடமும் போய்விடாதீர்கள். ப்ளீஸ்… உடம்பு கெட்டுப்போகும்.

என்னைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்தால் அதைக்கூட தாங்கும் மனப்பக்குவம் வந்துவிடுகிறது. இப்போதைய என் ஒரே ஆறுதல் குழந்தை ஒன்றுதான். இவளுடைய சிரிப்பில் என் எல்லா சோகங்களையும் மறக்கிறேன். நீங்கள் மட்டும் தைரியமாக ஒரு முடிவெடுத்திருந்தால், அதே சமயம் பொருளாதாரத்திலும் ஓரளவு நல்ல நிலைமையிலிருந்திருந்தால் உங்களைச் சார்ந்து வாழ்ந்து நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.

குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் ஒரு லட்சம் என் கணவருக்கு லாட்டரி விழுந்தது. முன்பே இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்திருக்கும் போல. பணம் வந்த ஆசையில் எல்லா வேலைகளையும் மூட்டை கட்டிப் போட்டுவிட்டு பெரிதாக லாட்டரி விற்கும் கடை துவங்கினார்.

அதிலிருந்து வாழ்க்கை முறையே மாறிப்போச்சு. வீட்டுக்கு வரும் நேரம் மிகமிகக் குறைச்சல். பல நாள் இரவில் வருவதே இல்லை. நான் பார்க்கும் நேரமெல்லாம் குடிபோதையில்தான் இருக்கிறார். உடன் கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருக்கும் போல.

வாழ்க்கையில் அதிகபட்சம் எவ்வளவு ஏமாற்றத்தை சந்திக்க முடியுமோ அத்தனையும் சகித்துக் கொண்டு ஊமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனநிலை வேண்டுமானால் மாறிவிடுகிறதே தவிர, உடல் ஆசைகள் அதைப் புரிந்துகொள்கிற மாதிரி தெரியவில்லை!

பழைய முறைகளும், சுஜியும்தான் இதை சரிசெய்யப் பயன்படுத்தும் ஆயுதங்கள். சுஜிக்கு திருமணம் ஆகிவிட்டதை உங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்தானே! ஆனால் அவளுக்கு ஏனோ இன்னும் குழந்தை இல்லை.

உங்களிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளது. அதையெல்லாம் எழுதலாமா? கடிதம் ஒழுங்காக கிடைக்குமா? அங்கே கடிதத்துக்கெல்லாம் சென்ஸார் கிடையாதுதானே!

விரிவாக எழுதுங்கள்.

அன்புடன்,

உங்கள் தோழி!

 

About உயிர்த்தோழி.

social person
 

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 54 other followers