RSS

தலைக்குள் இருக்கிறது செக்ஸ்

23 அக்

போர்வைகளுக்கு இடையில் நடப்பதுதான் செக்ஸ். ஆனால் அதைவிட அதிகமாக காதுகளுக்கு இடையேதான் நடைபெறுகிறது. மனம்தான் சாவி. ஆனால் நமது மனம் பெரும் அபரிமிதமான சதைக் காட்சிகள் மற்றும் புலன் இன்பங்களின் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறதா? தொலைக்காட்சிகளிலும் திரையரங்குகளிலும் இச்சையைத் தூண்டும் எண்ணற்ற காட்சிகள் நம் மனதை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

செக்ஸைப் பற்றிப் பேசுவது இந்தியாவில் மிக மலிவான விஷயமாக உள்ளது. ஒரு மாம்பழச் சாறு விளம்பரத்தைக் கூட காமசூத்ராவோடு இணைத்துக் காணும் நாட்டில் நாம் வசிக்கிறோம். ஆம். செக்ஸ் என்பது அடிப்படை உணவுபோல 1.2 பில்லியன் மனிதர்களுக்கு உள்ளது. ஆனால் செக்ஸ் குறித்து இத்தனை காகித ரீம்கள் வீணடிக்கப்படும் நிலையில், எத்தனையோ வீடியோ டேப்புகள் வந்துகொண்டேயிருக்கும் வேளையில் இந்தியர்கள் காரியத்தில் சரியாக இருக்கிறோமா? நிச்சயமாகச் சொல்லமுடியாது.

இதில் எண்ணிக்கையா, தரமா என்ற கேள்விக்கு இடமில்லை. உண்மையிலேயே இந்தியா செக்ஸில் தாராளமாகவும் அதி உற்சாகமாகவும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதா? அல்லது ஊடகங்கள் கிளப்பிய தோற்றமா? புதியவகை உள்ளாடையிலிருந்து செக்ஸ் விளையாட்டு சாதனங்கள் வரை இச்சையைத் தூண்டும் வாசனைத் திரவியங்கள் முதல் ஆற்றலை அதிகரிக்கும் மாத்திரைகள் வரை ஆயுர்வேத மருந்துகளிலிருந்து உற்சாகத்தைத் தூண்டும் எக்ஸ்டஸி வரை எண்ணற்ற வஸ்துகள் செக்ஸில் புழங்குகின்றன.

நம்மைச் சுற்றி செக்ஸே ஆக்கிரமித்துள்ளது. விளம்பரத் தட்டிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், இணையதளங்கள், திரைப்பட வசனங்கள், பாடல்கள் அனைத்திலும் செக்ஸ் ததும்பி வழிகிறது. உண்மையில் சொல்லப்போனால் எல்லா நேரமும் செக்ஸ் நம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தேசிய அளவில் தசஇயும், சி வோட்டரும் எடுத்த கருத்துக்கணிப்பில் 40 சதவிகித பேர் செக்ஸை வெறுமனே உடல் தேவை என்று சொல்கின்றனர். அல்லது வெறுமனே இயந்திரமயமான வேலையாகக் கூறுபவர்களும் உள்ளனர். 27 சதவிகிதம் பேர் தங்களது செக்ஸ் வாழ்வின் தரத்தில் குறைபாடு உள்ளதாகக் கூறுகின்றனர். உற்சாக மருந்து இருந்தால்தான் ஈடுபட முடியும் என 35 சதவிகிதம் பேர் கருதுகின்றனர்.

வேகமயமான வாழ்க்கை நிலையில் பல இந்தியர்கள் ஆரோக்கியமான, திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. வேலைச்சுமை, நகர்ப்புற வாழ்க்கை அழுத்தங்கள் மற்றும் சுருங்கும் ஓய்வு நேரம் காரணமாக போதுமான செக்ஸை அனுபவிக்கமுடியவில்லை என்று 50 சதவிகிதம் பேர் ஒத்துக்கொள்கின்றனர்.  அப்படியெனில் நாம் போதுமான அளவு திருப்தியாக உள்ளோமா?


நீங்கள் இனிமேலும் நைந்த, பல பேர் புரட்டிய செக்ஸ் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை. இன்னொரு வரின் அனுபவத்தைத் தேடிப்போக வேண்டியதில்லை. செக்ஸோ, செக்ஸ் சார்ந்தோ நீங்கள் எந்தக் கவலையுமின்றி நிஜவாழ்க்கை அனுபவத்தையே பெறலாம்.

த சன்டே இந்தியன் ஆன் லைன் மக்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறது. இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது இக் கருத்துக்கணிப்பு. அதற்குப் பதில் அளித்தவர்கள் செக்ஸ் வாழ்க்கையின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  வெகுசில பெண்கள் மட்டுமே பதில் அளித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் பதில் அளித்திருந்தார்கள்.

 

செக்ஸில் ஈடுபடும்போது மனதில் இருப்பது யார் என்பதிலிருந்து தொடங்குவோம். இந்தக் கருத்துக்கணிப்பில் பதில் அளித்திருந்தவர்களின் நேர்மையை மதிப்பிடுவது நியாயமற்றது. ஆனாலும் வெளிப்படையாக 61 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது துணையுடன் செக்ஸில் ஈடுபடும்போது நடிகர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் செக்ஸ் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களை மனதில் கற்பனை செய்து கொள்கின்றனர்.

இந்தக் கருத்துக்கணிப்பில் பதிலளித்த பெண்கள், செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது தங்களது கணவர்களையோ / ஆண் நண்பர்களையோ மனதில் நினைக்கவில்லை என்பது சுவாரசியமானது. அப்படியானால் அவர்களது மனதில் இருந்த நாயகன் யார்? அவர்களின் பெரும்பாலானவர் களின் மனதில் இருந்தவர்கள் திரைப்பட நாயகர்களே.

ஆண்களும்கூட கற்பனையின் உயரத்திற்குப் பறந்து செல்கின்றனர். கருத்துக் கணிப்புக்கு உட்பட்ட 20 சதவிகித ஆண்களின் கற்பனையில் நடிகைகளையும், சக பணியாளர்களையும்விட செக்ஸ் பட நடிகைகளே அவர்கள் கற்பனையை ஆக்கிரமித்திருக்கின்றனர். எனினும் விதவிதமான இன்பத்தேடல் அனைவரிடமும் இருக்கிறது.

பதில் அளித்தவர் களில் 60 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் துணைகளைக் கொண்டிருப்ப தாகக் கூறியிருக்கின்றனர். 60 சதவிகிதத்தினர் தங்களது துணைவருடன் முழுமையான திருப்தி அடைந்திருப்பதாகக் கூறியபோதும், அதில் 53 சதவிகிதத்தினர் செக்ஸ் அனுபவம் இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

21% பேர் வாரத்தில் ஒரு நாள் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். 50% பேர் வாரத்திற்கு நான்கு முறை வைத்திருக்கின்றனர். இன்னும் ஒரு 15 % வாரத்தில் 5 முறை செக்ஸ் வைக்கிறார்கள். 8% பேருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள வாரத்தில் ஒருநாள் கூட நேரம் இல்லை.

செக்ஸைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. 14 சதவிகிதம் பேர் செக்ஸை வலைத்தளங்கள் / போன் மூலம் அனுபவிப்பதாக நமது கருத்துக்கணிப்பு சொல்கிறது.

கட்டுரை;  த சன்டே இந்தியன்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 23, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டமொன்றை இடுக